ருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் மனிதனை மனிதன் சுமக்கும் அவலம் மீண்டும் தொடருமாம்!
கோவில் பார்ப்பனர்கள் பிடிவாதம்! இணை ஆணையருக்கு மிரட்டல்!
திராவிடர் கழகம் போராட்டத்தில் குதிக்கும்
திருச்சி, நவ.15- திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் நீண்ட காலமாக மனிதனை மனிதன் பல்லக்கில் சுமந்து செல்லும் வழக்கம் இருந்து வருகிறது. இந்த முறைகள் இனி தொடரக் கூடாது என்று திருவரங்கம் கோவில் இணை ஆணையர் அண்மையில் தெரிவித்திருந்தார். இதனால் பார்ப் பனர்கள் ஆத்திரம் கொண்டு இணை ஆணையரை முற்றுகையிட்டு, இந்த முறைகளெல்லாம் நீங்கள் மாற்றக் கூடாது. காலங்காலமாக இருந்து வரும் வழக்கத்தை மாற்றுவதற்கு நீ யார்? என்று கூறி பார்ப்பனர்கள் தனது செல்வாக்கால், பலமுறை அந்த அதிகாரியை மறைமுகமாகவும், நேரடியாகவும் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் பணிபுரியும் பார்ப்பனர்கள், கோவில் பணி முடிந்தவுடன் கோவிலில் உள் பிரகாரத்திலிருந்து அவர்களை, அவர் களது வீடு வரை பல்லக்கில் சுமந்து கொண்டு செல்வார்கள். அதற்குப் பெயர் பிரம்மரதம் (சீமான் தாங்கி) என்று கூறுகின்றனர். இந்த முறை காலங்காலமாக நடந்து வருகிறது. இந்த பிரம்மரத மரியாதையை சில பார்ப்பனர்கள் தவிர்த்து விட்டனர் என்றாலும் ஒரு சில பார்ப்பனர்கள் மட்டுமே இந்த முறையை இன்று வரை பின்பற்றி வருகின்றனர். இதற்கிடையில் அங்கு இது தொடர்பாக பல பிரச்சினைகள் ஏற் படவே வேதவியாசர் இராஜ பராசர பட்டர் என்ற பார்ப்பனர் சீமான் தாங்கி பல்லக்கு தூக்குவதற்கும், அதில் நாங்கள் செல்ல அனுமதிக்க வேண்டு மென்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தீர்ப்பு நாளை (நவ. 15) வர இருக்கிற நிலையில் நேற்று ஆழ்வார்கள் விழாவிற்கு வருகைதந்த இந்து அறநிலையத்துறை அமைச்சரிடம் பார்ப்பனர்கள் முறை யிட்டதனால், இணை ஆணையரை அழைத்து இதில் நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள். பல்லக்கு தூக் கினால், தூக்கிக் கொண்டு போகட்டும் எனக் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால் பார்ப்பனர்கள் மகிழ்ச்சியில் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறார் கள். கடந்த 8ஆம் தேதி இதே திருவரங்கத்தில் தான் திருச்சி மண்டல திராவிடர் எழுச்சி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மாநாட்டுப் பேருரையில் திருவரங் கத்தில் கோவில் திருவிழா என்ற பெயரில் பார்ப்பனர்களைத் தூக்கிச் சுமக்கும் நிலை மனித உரிமைக்கு எதிரான போக்கு, இது தொடர்ந்தால் விரைவில் திருவரங்கத்தில் பக்தர்களைத் திரட்டி தடுத்து நிறுத்துவோம் என்று சூளுரைத்தார். இந்த எழுச்சியுரை, திருவரங்கத்தி லுள்ள பாதிக்கப்பட்ட சீமான் தாங்கி களுக்கு பெரும் மகிழ்வைத் தந்தது. ஏற்கெனவே இவர்கள் பல்லக்கில் பார்ப்பனர்களைச் சுமக்க மாட்டோம் என்று ஒரு தீர்மானமே போட்டு இணை ஆணையரிடம் கொடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1890 ஆம் ஆண்டே இது தொடர் பாக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடத் திருக்கிறது. அந்த வழக்கு தீர்ப்பில் இந்த பிரம்மரதம் தூக்கும் வழக்கம் நிரூபிக்கப்படவில்லை என்றும், பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் இந்த முறையை நிறுத்திக் கொள் ளலாம் என்றும் அப்போதே இப்படி ஒரு தீர்ப்பு கூறப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் பார்ப்பனர்கள் மீண்டும் தனது போக்கை மாற்றிக் கொள்ளாமல், தனது புத்தியையும், மேலாதிக்கத்தனத்தையும் பறைசாற்று கிற வகையில் திருவரங்கத்துப் பார்ப் பனர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையால் பார்ப்பனர் அல்லாதவர்களும், சீமான் தாங்கி களும் மிகுந்த வேதனையடைந்து உள்ளனர். நீதிமன்ற உத்தரவு பார்ப் பனர்களுக்கு சாதகமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் இனி நாங்கள் அவர்களை சுமக்க மாட்டோம் என்று முடிவோடு இருக்கிறார்கள் (பல்லக்கு) சீமான் தாங்கிகள்.
இந்நிலையில் பார்ப்பனர்கள் இவர்கள் வேண்டுமானால் பல்லக்குத் தூக்க வேண்டாம். வெளியிலிருந்து ஆள்களை கொண்டு வந்து தூக்க வைத்துக் கொள்கிறோம் என்று எகத் தாளமாகக் கூறி வருகிறார்கள். நாளை வரக்கூடிய தீர்ப்பு யாருக்குச் சாதகமாக அமையப்போகிறது என்பது ஒரு புறமாக இருந்தாலும், மனித உரி மைக்கு விரோதமாக இந்நூற்றாண் டிலும் இப்படி நடந்து வருவது, இன்னும் பார்ப்பனர்களின் ஆதிக்கப் போக்கு சிறிதும் மாறாமல் இருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். இப் போக்கு மாறவேண்டும் என்பதே பெருமான்மையானவர்களின் விருப்பமாக இருந்து வருகிறது. மீண்டும் தொடருமா? - பார்ப்பனர் களை பல்லக்கில் தூக்கும் கொடுமை!
திராவிடர் கழகம் விரைவில் அறப் போர் மறியல் நடத்திட யோசித்துக் கொண்டுள்ளது என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
http://www.viduthalai.periyar.org.in/20101115/news24.html
No comments:
Post a Comment