Saturday, November 27, 2010

ஆசிரியர் விடையளிக்கிறார்-கி.வீரமணி

கேள்வி: வேலூரில் கூடிய பார்ப்பனர் சங்கத்தில் தமிழகத்தில் 40 லட்சம் பார்ப்பனர்கள் இருப்பதாக வும், அவர்களில் பெரும்பாலோர் வறுமையில் வாடுவதாகவும், பார்ப்பனர்களுக்குக் கல்வி, உத்தியோகத் துறையில் 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறை வேற்றி இருக்கிறார்களே, இது நியாயமான கோரிக்கையா? - இர. செங்கல்வராயன், செய்யாறு
பதில்: எத்தனை பார்ப்பனர் குடிசைகளில், தெருவோரத்தில் நடைபாதையில் வசிக்கிறார்கள்? ஒருவரைக்கூட காட்டமுடியாதே! மற்ற அதிகம் சம்பாதிப்பவரைப் பார்க்கையில் அந்தஸ்தில் குறைவாக இருக்கலாம். ஆனால், அது வறுமையில் BPL (Below the Poverty line) வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோர் இதில் எவ்வளவு பேர்? உத்தியோகத்தில் தங்களுக்கு 10 சதவிகிதம் கேட்டால் மற்றவர்கள் எவ்வளவு கேட்பர்? 2 அல்லது 3 சதவிகித மக்கள் தொகைதான் பார்ப்பனர் இருப்பர்; அவர்களுக்கு 3 முதல் 5 விழுக்காடு தந்தாலே தாராளம் ஆகுமே!
கேள்வி: உலகில் பிறந்த - பிறக்கக்கூடிய மனிதர்கள் எல்லாம் -ஏதாவது ஒரு மதத்தையும், அதோடு சேர்ந்த கடவுளையும் ஏற்று, பின்பற்றித் தான் ஆகவேண்டும் என்ற சூழலை ஒரு தனி நபருக்கு நிர்ணயிப்பது அரசின் பொதுச் சட்டமா?
பதில்: கட்டாயமல்ல. மத அடிப்படையில் சிறு பான்மை, ஜாதி அடிப்படையில் உரிமைகள் இடைக் காலத்தில் தேவைப்படுகின்ற நிலையில் அப்படி உள்ளது. மற்றபடி அரசின் விதியேதும் அப்படி அல்ல.
கேள்வி: உலக அளவில் வரலாற்று நிகழ்வுகளை கி.மு., கி.பி., என்று பிரித்துக் குறிப்பிடுவது போன்று, தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை வரலாறு, முன்னேற்றம் பற்றி அறிய பெரியாருக்கு முன் - பெரியாருக்குப் பின் என்று பிரித்துப் பார்த்து ஆய்வு பண்ணும் பக்குவம் என்னைப் போன்ற ஒடுக்கப்பட்ட சமுதாய மக்க ளுக்கு எப்போது வரும்? தங்கள் பதில் என்ன? . - த. சுரேஷ், நாகர்கோவில
பதில்: பெரியார் ஆண்டு போடுகிறோமே! தங்களது அருமையான யோசனைதான் சமூக எழுச்சி வரலாற்றின் - அடையாள வரலாற்றின் குறிப்பு - காலக்கட்டம் ஆகும்!
கேள்வி: தீபாவளி பட்டாசு, திருவண்ணாமலை கார்த்திகை தீபம் போன்றவற்றால் அறிவு நாசம் ஒரு புறம், பொருளாதார நாசம் இன்னொரு புறம் - இதற்குத் தீர்வுதான் என்ன? - து. புனிதா, வடமட்டம்
பதில்: சட்டப்படி தடுக்கும் துணிவுகொண்ட ஓர் சர்வாதிகார ஆட்சியால்தான் முடியும். வாக்கு வங்கி ஜனநாயகத்தால் ஆகாது.
கேள்வி: ஆந்திரா செக்ஸ் புகழ் கவர்னர் என்.டி.திவாரி பா.ஜ.க. மேடையில் தோன்றுகிறாராமே? - மாரி. கோபால், சென்னை- 40
பதில்: பலே பலே! பார்ப்பன திவாரி கிருஷ்ண பக்தி - இராமர் பக்தி உடையவர். எனவே, அங்கே (பா.ஜ.க) தோன்றுவதே நல்ல ஹரே ராமா? ஹரே கிருஷ்னா!
கேள்வி: மியான்மாவில் சூகியின் விடுதலை - சுதந்திரமாக அரசியல் நடத்த அவர் அனுமதிக்கப்படுவாரா? - சீ. மணிமேகலை, வரகூர்
பதில்: காலம் அதை அவருக்குத் தந்தே தீரும்! முதல் கட்டு உடைந்தது; பிறகு மற்றவை!
கேள்வி: கொஞ்ச காலமாக அமுங்கிக் கிடந்த புட்டபர்த்தி சாயிபாபா பற்றி மீண்டும் விளம்பரங்கள் கிளம்பியுள்ளனவே? - சு.மூர்த்தி, காரைக்கால்
பதில்: திட்டமிட்டே ஊடகங்களில் விளம்பரங்கள். 1 கோடி ரூபாய் கொடுங்கள், கழுதையைக் கூட மகானாக்கிக் காட்டுகிறேன் விளம்பரத்தால் - என்றரே பெரியார்! கேள்வி: காங்கிரசுக்கு ஜெயலலிதா வலிய போய் ஆதரவு தந்தும் அதனைக் காங்கிரஸ் நிராகரித்து விட்ட நிலையில், ஜெயலலிதா வின் அந்த நிலைப்பாட்டைப் பெரிய ராஜதந்திரம் என்று சில ஏடுகள் எழுதுகின்றனவே? - வ. மோகன், ஆண்டிப்பட்டி
பதில்: அதற்குப் பெயர்தான் மனுதர்மம்! ஞானசூரியன் படியுங்கள்! அவாள் செய்தால் எதுவும் பிரமாதமே!
கேள்வி: ஞானசூரியனுக்கு என்ன திடீர் மவுசு?
- க. துரையரசன், சென்னை - 12
பதில்: நிலைமை அப்படி போவதால் திடீர் தேவை. நோய் முற்றினால் மருத்துவம் தேவையில்லையா?
கேள்வி: எத்தனையோ வழக்குகள் இருந்தும் மும்பையில் சிவசேனா தலைவர் பால்தாக்கரே தண்டிக்கப்படாமல் ராஜாவாகத் திரிகிறாரே - அவரைப் பற்றியெல்லாம் இந்த ஊடகங்கள் கண்டு கொள்ளாதது ஏன்?
- செ. இராசாமணி, சித்தூர்
பதில்: துணிவுள்ள மகராட்டிர அரசு இன்னும் வரவில்லை!
http://www.viduthalai.periyar.org.in/20101127/snews14.html

No comments:

Post a Comment