Thursday, November 18, 2010

திராவிடர் கழகப் போராட்ட அறிவிப்புக்கு வெற்றி! சீரங்கத்தில் பார்ப்பனரைப் பல்லக்கில் சுமப்பது நிறுத்தப்பட்டது கோயில் பின்புறமாகப் பார்ப்பனர்கள் ஓட்டம்!

திருவரங் கம் ரங்கநாதர் கோவிலில் கடந்த பல ஆண்டு களாக பார்ப்பனர் களைப் பல்லக்கில் சுமந்து செல்லும் கொடுமை வழக்கம் இருந்து வருகிறது. இந்த வழக்கம் கூடாது என்றும் இதனைக் கண்டித்து முதன் முதலில் விடுதலை யில் செய்தி வெளியிட்டி ருந்தோம். மேற்கண்ட வழக்கத்திற்கு எதிராக கோவில் இணை ஆணை யரும் நடவடிக்கை எடுத் ததால் ஆத்திரம் கொண்ட பார்ப்பனர் கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் திருவரங்கத் தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவரங்கம் ரங்கநா தர் கோவிலில் தற் போது கைசிக ஏகாதசி புரா ணங்கள் பாடும் நிகழ்ச் சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்ச்சி நிறைவு நாளன்றுதான் பார்ப்பனர்களுக்கு பிரம்ம ரத மரியாதை யுடன் பல்வேறு பொருள் கள் அளிக்கப்பட்டு, யானை கள் முன்னே செல்ல, வீடு வரை அவர்களை (பிரம்ம ரதம்) பல்லக்கில் சுமந்து சென்று விட்டுவருவது வழக்கமாம். பல்லக்கு சுமந்து செல் லும் சீமான் தாங்கிகள் ஏற்கெனவே இனி பல் லக்கு தூக்கமாட்டோம் என்று கூறி வந்ததால், பெரும் சர்ச்சைகள் இருந்து வந்தன. இதற் கிடையில் பார்ப்பனர் களை பல்லக்கில் தூக்கி சுமந்து செல்லும் முறை மனித உரிமைக்கு எதி ரான போக்கு என்று திருவரங்கத்தில் நடை பெற்ற திராவிடர் கழக மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கடுமையாக சாடியிருந்தார். இந்நிலை தொடர்ந்தால், திரா விடர் கழகம் விரைவில் போராட்டம் நடத்தும் என்றும் எச்சரித்திருந்தார். இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பார்ப்பனர் கள் சார்பில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தங் களுக்கு சாதகமாக வரு மென்று நினைத்திருந்த பார்ப்பனர்களுக்கு ஏமாற்றம் தரும் விதமாக தீர்ப்பு தள்ளி வைக்கப் பட்டது. ஏற்கெனவே இந்த முறையை ரத்து செய்வ தென அறங்காவலர்கள் குழு கூட்டத்தில் இணை ஆணையர் தெரிவித்த தால் , எப்படி பல்லக்கில் செல்வது, நம்மை யார் பல்லக்கில் தூக்குவார்கள் என்று பல்வேறு முயற்சி களை மேற்கொண்டனர் பார்ப்பனர்கள். மேலும் மேலும் எதிர்ப்புகள் வந்ததால், அதனையும் மீறி பார்ப்ப னர்கள் நேற்று (நவ.17) பல்லக்கில் செல்வதாக முடிவு செய்திருந்தனர். இதற்கு மீண்டும் சர்ச்சை கள் வரவே, காவல் துறையினர் சம்பந்தப் பட்ட பார்ப்பனர்களை அழைத்து எச்சரித்தனர். இந்நிலையில்இன்று அதிகாலை கைசிக ஏகாதசி புராணங்கள் பாடிவிட்டு, வேதவி யாசர் பராசரபட்டர் உள் ளிட்ட பார்ப்பனர்கள் பிரம்மரத மரியாதையைக் கைவிட்டு விட்டு, வழக் கமாக செல்லும் கோவில் முன்புற வழியில் செல் லாமல் பின்புறமாக நடந்தே வீட்டிற்கு ஓட்டம் பிடித்தனர். இத்தகவ லறிந்து பொது மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந் தனர். பல்லக்கில் சுமந்து செல்லும் சீமான் தாங்கிகள் பெருமகிழ்ச்சியடைந்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், விடுதலைச் செய்தி எதிரொலியாலும், திராவிடர் கழகப் போ ராட்ட அறிவிப்பாலும் தான் இந்த முறையை பார்ப்பனர்கள் கைவிட்டனர் என்று தெரிவித்தனர்.http://www.viduthalai.periyar.org.in/20101118/news02.html

No comments:

Post a Comment