இந்த வார துக்ளக் இதழில் (10.11.2010) ஜாதிக் கணக்கெடுப்பு ஒரு மோசடி வேலை எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றினை சந்திரன் என்பவர் எழுதியுள்ளார்.
வி.ஏ.ஓ.வுக்கு மாமூலைக் கொடுத்தால் எந்த ஜாதிச் சான்றிதழை வேண்டுமானாலும் வாங்கித் தந்து விடுவார் என்றும், எங்கள் சைவப் பிள்ளைமார் சமூகம், முற்பட்ட சமூகம். ஆனால் எனக்குத் தெரிந்து பலர் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சமூக ஜாதிச் சான்றிதழ்களை வைத்துள்ளனர் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இவர் எழுதியுள்ள பிரச்சினை மிக மிக முக்கிய மானது. அவர் எழுதியிருப்பது உண்மையானால், இது குறித்து தமிழக அரசு தீவிரமாகக் கண்காணித்து, ஜாதிச் சான்றிதழ் தவறாக அளிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும். அரும்பாடுபட்டு நிலை நிறுத்திய சமூக நீதியைக் கொல்லைப்புறம் வழியாகத் தட்டிப் பறிப்பது அனுமதிக்க முடியாது - கூடாதுதான்.
தனது சமூகமான சைவப் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் (முற்பட்ட சமூகம்) பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகச் சான்றிதழ்களை வைத்திருப்பது தமக்குத் தெரியும் என்று எழுதியுள்ளார்.
தனக்குத் தெரிந்த தகவலை அரசுக்குத் தெரிவித்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
இந்தக் கட்டுரையை எழுதியுள்ளவரை அழைத்து விசாரித்து அவரிடம் தகவல் பெற்று உண்மையான குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.
அவ்வாறு நிரூபிக்கத் தவறும் பட்சத்தில், பொய்த் தகவல்கள் எழுதியதற்காக இவரைத் தண்டிக்க வேண்டும். வருவாய்த்துறை கவனிக்குமா?
http://www.viduthalai.periyar.org.in/20101107/news02.html
No comments:
Post a Comment