Monday, February 14, 2011






Prepare to be redirected!

This page is a time delay redirect, please update your bookmarks to our new
location!




பா.ஜ.க.வின் சிண்டும் சிக்குகிறது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முன்னாள் அமைச்சர் அருண்ஷோரிக்கு சம்மன்

2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, பா.ஜனதா முன்னாள் மத்திய அமைச் சர் அருண்ஷோரிக்கு, பிப்ரவரி 21ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சி.பி.அய். சம்மன் அனுப்பி உள்ளது.

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட் டதாக எழுந்த புகார் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத் தியது.

இந்தப் பிரச்சினை யில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரை முழுமையாக முடக்கின. இந்த புகா ரின் பேரில் கடும் நட வடிக்கை எடுக்க வேண் டும் என்று உச்சநீதிமன் றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சி.பி.அய். யும் தீவிர விசாரணை மேற்கொண்டது.

தொலைத் தொடர் புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, டி.பி.ரியாலிட்டி நிறுவன அதிபர் பல்வா மற்றும் தொலை தொடர்புத் துறை உயர் அதிகாரிகள் சிலரை சி.பி.அய். கைது செய்து விசாரணை நடத்தியது. ஆ. இராசாவும், பல்வா வும் தொடர்ந்து சி.பி. அய். காவலில் எடுக்கப் பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு அமைத்த நீதிபதி சிவராஜ் பட்டீல் தலைமையில் அமைக் கப்பட்ட விசாரணை ஆணையம் அறிக்கை யில், கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்தே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட் டில் வெளிப்படையான முடிவு எடுக்கப்பட வில்லை என்று குற்றம் சாற்றப்பட்டு இருந்தது.

சிக்குகிறது பா.ஜ.க.,

முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற தவறான கொள்கை அறி முகப்படுத்தப்பட்டதற்கும் பா.ஜனதா கூட்டணி ஆட்சிதான் காரணம் என்றும் அதில் குறிப் பிடப்பட்டு இருந்தது. ஏற்கெனவே உச்சநீதி மன்றம் 2ஜி அலைக் கற்றை பிரச்சினையில் 2001ஆம் ஆண்டில் இருந்தே விசாரணை நடத்தும்படி உத்தர விட்டு இருந்தது.

அதைத் தொடர்ந்து, வாஜ்பேயி தலைமை யிலான பா.ஜனதா கூட் டணி ஆட்சியின்போது தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பதவி வகித்த அருண்ஷோரி யிடம் விசாரணை நடத்த சி.பி.அய். முடிவு செய்தது.

அதன்படி ஸ்பெக்ட் ரம் முறைகேடு புகார் பற்றி விசாரணை நடத் துவதற்காக பிப்ரவரி 21ஆம் தேதி நேரில் ஆஜ ராகும்படி அருண் ஷாரிக்கு, சி.பி.அய். சம் மன் அனுப்பி உள்ளது. இந்தத் தகவலை உறுதி செய்த அருண்ஷோரி, விசாரணையின்போது சில முக்கிய ஆவணங் களை சி.பி.அய்.யிடம் கொடுக்க இருப்பதாக தெரிவித்தார்.

50 உரிமங்கள் மறைந்த பிரமோத் மகா ஜன், அருண்ஷோரி, தயாநிதிமாறன் ஆகியோர் தொலை தொடர்புத் துறை அமைச்சர்களாக பதவி வகித்தபோது நடை பெற்ற கூட்ட நிகழ்ச்சிகளின் விவரங்கள் குறித்தும் சி.பி.அய் ஆய்வு செய்ய இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு மாறாக, பார்தி, வோட போன், அய்டியா போன்ற நிறுவனங்களுக்கு 50 உரிமங்கள் வரை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிறு வனங்களுக்கு வழங்கப் பட்ட உரிமம் தொடர் பான ஆவணங்கள் குறித் தும் விசாரணை நடத் தப்படும் என்றும் அவர் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் முறை கேட்டால் பயன் அடைந்தவர்கள் பற்றி யும் விசாரிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தின் புதிய உத்தரவுப்படி தனது விசாரணை வளை யத்தை சி.பி.அய். மேலும் விரிவுபடுத்தி யுள்ளது. தொழில் அதிபர் அனில் அம்பானியின் ஏ.டி.ஏ.ஜி. குழுமம் உள்பட பல் வேறு நிறுவனங்களின் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தி வரு கிறது.

அனில் அம்பானி நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவருக்கு இது தொடர்பாக சம் மன் அனுப்பப்பட்டு உள்ளது. எங்கள் விசா ரணையின் ஒரு கட்ட மாக பல்வேறு அதிகா ரிகளை விசாரணைக்கு அழைத்து இருப்பதாக சி.பி.அய். செய்தித் தொடர்பாளர் வினிதா தாகூர் நேற்று செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். கடந்த வாரத்தில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்த அருண்ஷோரி, ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து பிரதமர் மன் மோகன்சிங்கை சந்தித்து ஆரம்பத்திலேயே எச்ச ரித்ததாகவும், ஆனால் பிரதமர் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை என்றும் புகார் கூறி இருந்தார்.

பா.ஜ.க.மீதும் குற்றச்சாற்று

அதேபோல் பா. ஜனதா தலைவர்களும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக் கடி கொடுக்கத் தவறி விட்டனர் என்றும் அவர் குற்றம்சாற்ற இருந் தார்.

அருண்ஷோரிக்கு சி.பி.அய். சம்மன் அனுப்பி இருப்பது குறித்து கருத் துத் தெரிவித்த பா. ஜனதா செய்தித் தொடர் பாளர், பா.ஜன தாவிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்ப தால் எந்த விசாரணை யையும் சந்திக்க தயார் என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில், கடந்த 2007ஆம் ஆண் டிலேயே பா.ஜனதா தலைவர்கள் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோரிடம் இந்த முறைகேடு பற்றி தெரிவித்ததாகவும், அதற்கு அந்த தலை வர்கள் அமைதி காத்த தாகவும் அருண்ஷோரி குறிப்பிட்டு இருந்ததை அவர் நிராகரித்தார்.
http://viduthalai.in/new/e-paper/3405.html 

Sunday, February 13, 2011

நான்தான் அண்ணா பேசுகிறேன்

(அறிஞர் அண்ணா அவர்கள் இன்று இருந்தால் என்ன பேசுவார்?)
அறிஞர் அண்ணா

என் பெயரால் ஒரு கட்சி -அண்ணா திமுக; என் உருவம் தாங்கிய கொடி -அ.இ.அ.தி. மு.க. கொடி; அதற்கென்று ஒரு பத்திரிகை டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.

தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து, ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதை கண்டு திடுக்கிட்டுப் போனேன். மண் சோறு சாப்பிட்டீர்கள். மாள முடியாத பசி போலும் என்று நினைத்தேன். யாகம் நடத்தியதாகக் கேள்விப்பட்டேன். தோட்டத்துக்குள்தானே  தனி நபர் பிரச்னை என்று தள்ளி விட்டேன்.

சித்ரா பவுர்ணமியன்று வீட்டில் விளக் கேற்றி இருளை விரட்டுங்கள் என்று வெளி வந்த ஓர் அறிக்கையைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டேன்.

விநாயக சதுர்த்திற்கு வாழ்த்துத் தெரி வித்தாய்; நான் எழுதிய களி மண்ணும் கையுமாக (திராவிட நாடு 12.9.1942) என்ற கட்டுரையைப் படிந்திருந்தால் அல்லவா - இந்த வாழ்த்தை எழுதும்போது தயக்கம் ஏற்பட்டு இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்காக எத்தனை எத்தனைக் கூட்டங்களில் பேசி இருப்பேன், எத்தனை எத்தனை கட்டுரைகளை எழுதித் தள்ளியிருப்பேன்! - மாநாடுகள் கூட்டித் தீர்மானங்களை நிறைவேற்றியிருப்பேன், பேரணி களை நடத்தியிருப்பேன் - போராட்டங்களை நடத்தியிருப்பேன்!

அந்தச் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்ற என் பெயரை வைத்துக் கொண்ட கட்சியின் பொதுச் செய லாளர் உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கு கிறார் என்றால் தலையில்தான் அடித்துக் கொள்ள வேண்டியவன் ஆனேன். ராமர் பாலமாம். அதை இடித்தால் இந்துக்கள் மனம் புண்படுமாம். அட தங்கச்சி! என் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக் கொண்டா இந்த மோசடியைச் செய்ய வேண்டும்?

இராமாயணத்தைப் பற்றி தந்தை பெரியாரும், நானும் எழுதியதை, பேசியதைப் படித்து பார்த்ததுண்டா, அந்த நூல்களைக் கையால் தொட்டதுதான் உண்டா?

இரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோருடன் இராமாயணத்தைக் கொளுத்துவது குறித்து நான் விவாதம் செய்த வரலாறு உமக்குத் தெரியுமா? நீதிதேவன் மயக்கம் கேள்விப்பட்டதுண்டா?

வரலாறு தெரிந்தவர்கள் யாராவது உமது பக்கத்தில் வைத்துக் கொண்டதுண்டா?

இராமாயணம் என்பது ஆரியர் திராவிடர் போராட்டம் என்பதுபற்றியெல்லாம் ஏதாவது தெரியுமா?

உமக்கு எப்படித் தெரியும்? அப்படியே தெரிந்தாலும் நீ ஆரியத்தின் பக்கத்தில்தானே நிற்பாய்? அந்த அடிப்படையில் தான் இராமன் பாலத்தை இடித்து சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று வழக்குத் தொடுத்திருப்பாயோ?

தங்கச்சி, உன் அறிக்கை ஒன்றை உமது கட்சி ஏட்டில் (29.10.2009 _ நமது எம்.ஜி.ஆர். பக்கம் 1-9) படித்துப் பார்த்தேன்.

ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு அர்த்தம் உண்டு. ராமர் பிறந்தார். ராமரின் பிறவிப் பயன் என்ன? தீய சக்தியான ராவணனை அழிப்பது தான். ராமனின் பிறவிப் பயன் கிருஷ்ணன் பிறந்தார். கிருஷ்ணனுடைய பிறவிப் பயன் என்ன? கம்சன் என்னும் அரக்கனை ஒழிப்பது தான் அழிப்பதுதான். கிருஷ்ணரின் பிறவிப் பயன். சத்ய பாமாவின் பிறவிப் பயன். என்ன? நரகாசுரனை வதம் செய்வதுதான் சத்ய பாமாவின் பிறவிப்பயன் அதைப்போலவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிறவிப் பயன் என்ன? கருணாநிதி என்னும் தீய சக்தியை அழிப்பதும், ஒழிப்பதும்தான் அண்ணா தி.மு.க.வின் பிறவிப் பயன் என்று அந்த அறிக்கையைப் படித்து விட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

திராவிடர் இயக்கத்தின் ஆணி வேரை வெட்டுவதுபோன்ற வெட்டரி வாள் வீச்சு இது!

அசுரன் என்றும், அரக்கன் என்றும் புராணங்களில், இதிகாசங்களில் கூறப்பட்டிருப்பது எல்லாம் திராவிடர் கள் அதில் கூறப்பட்டிருப்பது எல்லாம் ஆரியர் -திராவிடர் போரே!

என்பதுதான் திராவிட இயக்கத்தின் அடிநாதம். வரலாற்று உண்மையும்கூட!

இதன் ஆரம்ப எழுத்தைக் கூடப் புரியாத ஒரு சீமாட்டி என் பெயரையும் திராவிட என்ற வரலாற்றுப் பெயரையும் தாங்கிய கட்சியின் பொதுச் செயலாளர் ஆனதால் ஏற்பட்ட விபரீதம்! விபரீதம்!!

புத்தர் இயக்கத்தில் புகுந்து ஊடுருவி ஆரியம் நாசப்படுத்தியதுபற்றி நான் எழுதாததா? பேசாததா? தந்தை பெரியார் கூறாததா?

இப்படியெல்லாம் சொன்ன இயக்கத்திலேயே ஆரியம் புகுந்து தன் விஷம வேலையைச் செய்து விட்டதே என்று எண்ணுகிறபோது, எதையும் தாங்கும் இதயம் படைத்த எனக்கே நெஞ்சம் வெடித்து விடும் போலி ருக்கிறதே!

இதனை ஏற்றுக்கொண்டு உம் கட்சியில் எப்படியிருக்கிறார்கள்? கொள்கை பற்றித் தெரியாத கூட்டம் உமது பின்னால் நிற்கிறது; - பதவி என்ற தீனியைப் போட்டால் போதும் புரட்சித் தலைவியே! என்று போர்ப் பாட்டுப் பாடுவார்கள் போலும்!

இந்த ஒரே ஒரு அறிக்கை ஒன்று போதும்  நீவிர் யார் என்பதற்கு!

இராமன் பக்கமும் கிருஷ்ணன் பக்கமும் நின்று திராவிடர்களை சூத் திரர்களை வீழ்த்துவதற்குப் புறப்பட்ட அணிக்குத் தலைமை தாங்குகிறாய்.

அதனால்தானே சோ இராம சாமிகளும், குருமூர்த்திகளும், தின மணிகளும் தினமலர்களும் கல்கி களும், இந்துக்களும் உம் தலைமையை ஏற்று அணிவகுத்து நிற்கின்றன.

ஆரிய வெறியின் சனாதனத்தின், மூடநம்பிக்கையின் உச்சக்கட்டத்திலே கட்சியை நகர்த்திச் சென்று விட்டாய், மிகவும் வெளிப்படையாக ஆரிய தி.மு.க.வாக மாற்றி விட்டாய் என்பதற்கு அடையாளமாக உமது ஏட்டில் நாள்தோறும் ராசிபலன் வெளியிட ஆரம்பித்து விட்டாய்.

இது ஓர் உச்சக் கட்டமான முடிவு; கட்சியில் இனி தட்டிக் கேட்க யாரா லும் முடியாது என்பதற்கான அறிவிப் பாகத்தான் இதனைக் கருத வேண்டும்.

அப்பட்டமாக அண்ணா தி.மு.க. ஆரிய மயமாகி விட்டது என்பதற்கான பிரகடனமாகத்தான் இதனைக் கருத வேண்டும்.

பார்ப்பனர்களையல்ல பார்ப்பனீ யத்தை எதிர்ப்பதுதான் எங்கள் கொள்கை என்று அறிவித்தது உண்மை தான். உம்மைப் பொறுத்தவரை அந்தப் பிரச்சினைக்கு இடம் இல்லை. பார்ப் பனராகவும் பார்ப்பனீயத்தை திராவிட இயக்கத்தில் திணிக்கும் பேர் வழியாக வும் நீர் ஆகிவிட்டாய். திராவிட இயக் கத்துக்கு இப்படி ஒரு விபத்தா? இது சூத்திரர்களின் அரசு? என்று என் தம்பி கருணாநிதி சட்டப் பேரவையில் அறிவித்தார். அவரை ஒழிப்பதுதான் அ.தி.மு.க.வின் பிறவிப் பயன் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டாய். அதற்கொப்ப இராமாயணத்தையும் துணைக் கழைத்து விட்டாய்; ஆரியர் -திராவிடர் போராட்டம்தான் அரசிய லாக நடக்கிறது என்பதற்கான அதிகாரப்பூர்வ மான அப்பட்டமான அறிவிப்பு உமது வாயாலேயே வெளிவந்துவிட்டது!

மானமும் அறிவும் உள்ள தமிழர்கள் சிந்திப்பார்களாக! ஆரியத் தலைமையால் உருவாக்கப்பட்ட இந்த அடிப்படை மோசடியை எதிர்த்து, கொள்கை ரீதியில் வினா தொடுக்க அ.இ.அ.தி.மு.க. வில் ஒரே ஒரு தொண்டன்கூட இல் லாது போய் விட்டாரா என்ற கேள்வி யோடு நான் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்

(அண்ணா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் இப்படித்தானே பேசி இருப்பார்?).

இணைப்பு I

சோதிடப் பரீட்சை தாசரதி

தியாகராசனும், வேணுவும் பச்சையப் பன் கல்லூரிச் சிநேகிதர்கள். வெகு நாள் பழக்கம் இல்லாவிட்டாலும் இரு வரும் மிகுந்த நட்புக் கொண்டிருந் தனர். வகுப்பில் இருவரும் சேர்ந்து வாசித்து வந்தனர். அதிகம் வளர்த்து வானேன்? இருவரும் மனமொத்த நண்பர்களாய் இருந்தார்கள்.

ஆனால், ஒரு விஷயத்தில் மாத்திரம் தியாகுவிற்கும், வேணுவுக்கும் அபிப்ராய பேதமிருந்தது. நாரதபுரம் நவீன சோதிட சாத்திரிகள் பேரில் வேணு அபாரமான அபிமானம் கொண்டிருந்தான். ஆனால், சோதிடத் தின் மேல் நம்பிக்கையற்றிருந்த தியாகுவுக்கு வேணுவின் வார்த்தைகள் வேப்பங்காய்களாய் இருந்தன. அடிக்கடி இருவருக்குள் தர்க்கம் நடக்கும்.

வார்த்தைகள் வலுத்தால் சண்டையில் முடியும் என்றறிந்த தியாகராசன் இறுதியில் சோதிட சாத்திரியாரையே பரீட்சிக்க நினைத்தான்.அன்றைய தினசரியில் கண்ட விளம்பரம் அவன் கண்ணைப் பறித்தது.

நாரதபுரம்
நவீன சோதிட சாத்திரியார்
எதிர்காலக் கேள்வி நான்கிற்கு அணா எட்டு.
எழுதும் நேரத்தையாவது எந்தப் பூவின்
பெயரையாவது குறிக்கவும்

இதைக் கண்ட தியாகு எடுத்தான் காகிதத்தை; எழுதினான் பின்வருமாறு;

அய்யா, கீழ்க்கண்ட கேள்விகளுக்குத் தயவு செய்து விடைகளைத் தெரி விக்கவும்.
1. என் தாயார் உடம்பு சீக்கிரம் குணமாகுமா?

2. என் நண்பர் வேணுவுக்கும், அவர் மனைவிக்கும் எப்பொழுது ஒற்றுமை ஏற்படும்?

3. அவருக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா?

புஷ்பம் -கனகாம்பரம்

தங்களன்புள்ள,
தியாகராசன்

இதை உடனே தபாலில் சேர்த்து விட் டான். அவசரத்தில் ஸ்டாம்பு (அஞ்சல் தலை) ஒட்ட மறந்து விட்டதால், சாத்திரி யார் இரண்டணா அதிகம் கொடுக்க வேண்டியது ஆயிற்று. தியாகு தன் நண்பன் விலாசத்தையே எழுதியிருந்தான்.

ஒரு வாரம் கழிந்தது. வேணுவுக்கு சாத்திரியாரிடமிருந்து வந்த கடிதத்தில் கண்டிருந்ததாவது:

உங்கள் தாயாரின் உடம்பு இன்னும் ஒரு வாரத்தில் குணமாகும். தங்கள் நண்பருக்கு ஆண் குழந்தை பிறக்கும். அது பிறந்தவுடன்; அவர் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
வேணு ஒன்றும் புரியாமல் விழித்தான். அருகிலிருந்து தியாகு வயிறு வெடிக்கச் சிரிக்காமல் இருக்க முடியுமா? தியாகுவின் தாயார் இறந்து அனேக வருடங்களாயின. வேணுவின் துரதிர்ஷ்டமோ, சாஸ்திரி யாரின் துரதிர்ஷ்டமோ வேணுவுக்கு இன்னும் விவாகம் ஆகவில்லை!

- அறிஞர் அண்ணா (திராவிட நாடு)

ராசிபலன் போடும் நமது எம்.ஜி.ஆர். சிந்தனைக்ககாக இது

இணைப்பு II

இராமன் - இராமாயணம்பற்றி அறிஞர் அண்ணா

இராமனும் இராவணனும் - உண்மை உருவங்களா? வரலாற்றுக் காலத்தவரா? அல்ல கற்பனைகள். இதனைக் கூறத் தன்மான இயக்கத்தார் தயங்குவதில்லை. ஆனால், அவர்தம் கேள்விகட்குத் தக்க விடையிறுக்க முடியாத நேரத்தில் மட்டுமே, செந்தமிழை வாணிகம் செய்வோர், இராமாயணம் ஓர் கற்பனைக் கதை என்றுரைப்பரேயொழிய, மற்றைப்போதினில், இராமனை நிஜ புருஷனாகவே எண்ணுவர், - மதிப்பர், - வணங்குவர். ஆராய்ச்சிக் கூடத் தில் மட்டுமே ஓரளவுக்கு அவர்களின் பஜனை மனப்பான்மை குறையும். மற்றப் போதெல்லாம் அவர்கள் இராமதாசர்களே.

இராமதாசர்களுக்கு இராவணதாசர் விடுக்கும் மறுப்புரை அல்ல இந்நூல். இராமதாசர்களுக்கு, தன்மானத் தமிழர் தரும் மயக்க நீக்க மருந்து இது. தாசர் நிலை கூடாது தமிழா! இராமதாசர் என்பது ஆரிய தாசராக்குவதற்கே பயன்படும் நண்பா! என்று அறிவுறுத்தவே இந்நூல் வெளிவந்துள்ளது.

திராவிட இன மக்களின் எழில் மிக்க வாழ்க்கையிலே, ஆரிய இனக் கலாச்சாரம் தூவப்பட்டது என்பதை மறுப்பார் எவருமில்லை. நாம், நமது கருத்துக்கு மாறானவர்கள், இருசாராரும் இதனில் மாறுபட்டோமில்லை. ஏனெனில், இது மறைக்க முடியாது உண்மையாகி விட்டது.

இராவண காவியமும், இராமாயணமும் இரண்டும் கற்பனைகளே. முன்னது இராமனைத் தேவனாக்க! இஃது இராவ ணனைத் தேவனாக்க அல்ல - தமிழனாக்க, அதாவது வீரனாக்க.

இராவண காவியத்திலிருந்து தப்ப வேண்டுமென்று விரும்பும் ஆரியர்க்கும், - ஆரிய நேசர்கட்கும் ஒரே ஒரு வழிதான் உண்டு. இராமாயணமே பொய்க்கதை. அதனை நாங்கள் ஏற்கோம் என்று அறிவித்து விடுவதுதான், வேறு மார்க்கம் இல்லை. - - அறிஞர் அண்ணா.
நூல்: புலவர் குழந்தையின் இராவண காவியம் முன்னுரையாக அண்ணா எழுதி யது இது.

இராமாயணம், இராமன் எல்லாம் கற் பனையே என்றும், ஆரியர் - திராவிடர் பிரச்சினை என்றும் இவ்வளவு தெளிவாக அறிஞர் அண்ணா எழுத்துருவில் கல்வெட் டாகச் செதுக்கியுள்ளாரே, அண்ணா பெய ரால் கட்சி நடத்துபவரின் பதில் என்ன?


நீங்கள் ஆரியரா? ஆரியதாசரா? திராவிடரா?


அ.இ.அ.தி.மு.க. தோழனின் பதில் என்ன?

நான்தான் அண்ணா பேசுகிறேன் 

சு.சாமியே, ஓடாதே, நில்-4


எவரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இறுமாப்புடன் பேசும் சு.சாமியின் கீழ்த்தரப்பட்ட யோக்கியதாம்சம் எத்தகையது என்பதற்கு மேலே கண்ட எடுத்துக்காட்டுகள் போதாதா?

உண்மைகளை மறைக்கிறார். பதில் அளிக்காமல் பிடிவாதம் காட்டினார் என்று கமிஷன் கூறுகிறதே - இந்தப் பேர் வழி ஒரு நாணயமான மனுசனாக இருந்திருந்தால் உண்மைகளை ஏன் மறைக்க வேண்டும் - பிடிவாதமாகப் பதில் சொல்ல ஏன் மறுக்க வேண்டும்? - பதுங்க வேண்டும்?

வீராதி வீரர்போல அரட்டைக் கச்சேரி நடத்துகிறாரே - கமிஷன் கேட்ட கேள்விக்கு உரிய பதில் சொல்ல முடியாமல் ஏன் வாலை சுருட்டிக் கொண்டு உட்கார வேண்டும்? விழி பிதுங்கி ஏன் திணற வேண்டும்? கவட்டிக்குள் ஏன் கவிழ்ந்து படுக்க வேண்டும்?

குற்றம் செய்தவர் எவராக இருந்தாலும் கூனிக் குறுகத்தானே வேண்டும்? வெல வெலத்துத்தானே போக வேண்டும்? - முகம் வெளிரத்தானே செய்யும்!

நியாயமாக உண்மைகளைச் சொல்லத் தவறிய காரணத்தால் - மறைத்த காரணத்தால் உள்ளே தள்ளப்பட்டு இருக்க வேண்டும். இரண்டு நாள் ஜெயிலில் இருந்திருந்தால் இந்தக் கோழையின் குணாதிசயங்கள் வெளிப்பட்டிருக்கும். மன்னிப்பு எழுதிக் கொடுத்துவிட்டு அப்ரூவராக ஆசாமி மாறியிருப்பார். என்ன காரணத்தாலோ, எந்தப் பூணூல் பாசத்தாலோ, நிருவாக அமைப்பில் உள்ள பஞ்சக் கச்சங்களின் பரிவாலோ ஒவ்வொரு சமயமும் இந்த ஆள் தப்பித்துக் கொண்டு வருகிறார்.

சு.சாமி தலைவராக இருக்கும் ஜனதா கட்சியின் அகில இந்திய செயலாளராக இருந்த தோழர் வேலுச்சாமி இந்தச் சு.சாமியைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்?

கூடவே இருந்தவராயிற்றே! அகம் - புறம் அறிந்தவராயிற்றே! சும்மா சூடு பிறக்கிறது வேலுச்சாமியிடமிருந்து! - அதையும் நாளை தெரிந்து கொள்ள வேண்டாமா?
http://viduthalai.in/new/page-8/3368.html 

Saturday, February 12, 2011

டார்வின்

அறிவியல் உலகத்தில் மகத்தான கண்டுபிடிப்பு என்பது - விஞ்ஞானி சார்லஸ் டார்வி னின் பரிணாமக் கொள்கை யாகும். அதுவரை மதம் நம்பி வந்த, கற்பித்துவந்த கடவுள் படைப்புக் கொள்கைக்கு மரண அடி கொடுத்த அந்த மாமனிதர் பிறந்த நாள்தான் இன்று (1809).

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்தவர். விலங் கியல், தாவரவியல் துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டவர். கப்பலிலேயே சுற்றிச் சுற்றி பல்வேறு இடர்ப்பாடுகளை ஏற்று ஏற்று, பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர்.

1859-இல் அவரால் எழுதப் பட்ட உயிரினங்களின் தோற் றம் (Origin of species) எனும் நூலும், 1871 இல் அவரால் எழுதப்பட்ட மனிதனுடைய பாரம்பரியம் (The Descent of Man) எனும் நூலும் மனித சமுதாய வளர்ச்சித் திசையில் மிகப் பெரிய திருப்பத்தைத் தந்த அரிய அறிவுக் கருவூலங்கள் ஆகும்.

இயற்கையானது, எந்த உயிர் தன் சூழ்நிலையில் வாழ் வதற்கு மிகவும் அனுகூலமான மாறுபாடுகளை உடையதோ, அந்த உயிரைத் தேர்வு செய்து கொள்கிறது. இத்தகு இயற் கைத் தேர்வு தொடர்ச்சியாகவும், வழி வழியாகவும் நடந்து வருவதால், சூழ்நிலையிலே எவ்வளவுக்கு வேறுபாடுகள் உண்டாகியிருக்குமோ, அந்த அளவுக்கு வேறுபட்ட விலங் கினங்களும் தோன்றிக் கொண்டு வரும் என்று டார்வின் தம் கண்டுபிடிப்பாகக் கூறினார். டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை என்பது இதுதான். குரங்கிலிருந்து படிப் படியாக மனிதன் உருவானான் என்பது அவர்தம் ஆய்வின் முடிவு.

தன்னைப் போலவே தேவன் மனிதனைப் படைத்தான் என்ற பைபிள் மொழிக்கு இது விரோதமாக இருக்கிறதே என்று உலகம் ஆத்திரப்பட்டது. கடவுளை மறுக்க வந்த சூழ்ச்சி, மனிதனின் ஆபாசமும், நஞ்சும் பொருந்திய துர்க்காற்று என்று தூற்றினர். இவர்கள் நரகத் துக்குத்தான் போவார்கள் என்று மண்ணை வாரி இறைத்தனர்.

டார்வின் கண்டுபிடிப்பு சரியானதே என்று சொன்ன தற்காக அமெரிக்காவின் கொலம்பியா மதக் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர் உட்ரோ வேலையி லிருந்து தூக்கியெறியப்பட்டார் (1884).

1925 ஆம் ஆண்டில் கூட அமெரிக்காவின் தென்னசி மாநிலத்தில் டார்வினின் பரிணாமக் கொள்கையைக் கற்பித்ததற்காக ஸ்கோபஸ் என்னும் ஆசிரியர் நீதி மன்றத் தின் கூண்டிலே நிறுத்தப் பட்டதுண்டு.

1950 ஆம் ஆண்டில்கூட 12ஆம் போப் பயஸ் பரிணாமக் கொள்கையை பயங்கரமாக எதிர்த்தார்.

என்ன அதிசயம்! 1996 இல் ஓர் அதிசயம் நடந்தது. போப் ஜான் பால் டார்வினின் தத்து வம் சரியானதே - ஏற்றுக் கொள் ளத் தக்கதே என்ற அணு குண்டைத் தூக்கிப் போட்டாரே பார்க்கலாம்.

ஃபோன்டிபிகல் அகாடமி ஆஃப் சயின்ஸ் என்ற அமைப் புக்கு அனுப்பியுள்ள செய்தியில், புதிய அறிவு பரிணாம வளர்ச் சித் தத்துவத்தினை அங்கீ கரிக்கச் செய்கிறது. பரிணாமக் கொள்கையை பள்ளிகளில் போதிக்க வேண்டும் என்றாரே பார்க்கலாம் The Hindu 26-10-1996)

போப் கத்தோலிக்க அமைப்பின் தலைவர் என்றால் இங்கிலாந்தைத் தலைமை இடமாகக் கொண்ட புரொட் டஸ்டண்ட் கிறித்துவப் பிரிவி னரின் தலைவரான ரைட் ரெவரெண்ட் டாக்டர் மால்கம் பிரவுனும் டார்வின் கொள் கையை எதிர்த்ததற்காக 126 ஆண்டுகளுக்குப் பின் மன்னிப் புக் கோரியுள்ளார்.

(இணைய தளச் செய்தி 15-9-2008).

அறிவியலா - மதமா? ஆம், அறிவியல், மதத்தை மண் கவ்வச் செய்துவிட்டது! வாழ்க டார்வின்!

- மயிலாடன்

http://viduthalai.in/new/page1/3304.html

வீட்டுக்கு வீடு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வருகிறார்களாம்

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸை வலுப்படுத்த 20 ஆயிரம் தொண்டர்கள் களத்தில் இறங்கப் போகிறார்களாம். இவர்கள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வார்களாம். இதற்காக 16 பக்க கையேடு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாம்.

ஆர்.எஸ்.எஸின் தோற்றம், ஆர்.எஸ்.எஸ்.பற்றி தேசிய தலைவர்களின் கருத்துகள் இடம் பெறுமாம். ஆர்.எஸ்.எஸைக் கடுமையாக விமர்சனம் செய்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் இராகுல்காந்தி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான விமர்சனங்களும் முன் வைக்கப்படுமாம்.

பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வீட்டுக்கு வீடு கையேடுகளையும், துண்டு அறிக்கைகளையும் வழங்குவார்களாம்!

வரட்டும் - அதைத் தான் நாமும் எதிர்பார்க் கிறோம். 1925ஆம் ஆண்டில்தான் இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் துவக்கப்பட்டன. சுயமரியாதை இயக்கம், பொதுவுடைமை அமைப்புகளும் அதே ஆண்டில்தான் தொடங்கப்பட்டுள்ளன.

இத்தனை ஆண்டுகாலமாக எவ்வளவோ முயற்சி எடுத்துப் பார்த்தும் தமிழ்நாட்டில் அவர்களின் பருப்பு வேகவில்லை. அதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்களும் அவர்கள் கண்ட தன்மான இயக்கமாம், திராவிடர் கழகமும்தான்!

ஆர்.எஸ்.எஸ். என்பது இந்து மதத்தினைப் பலப்படுத்தும் நோக்கம் கொண்டது. இந்து மதமோ பார்ப்பனர் ஆதிக்கத்தை, மேலாண்மையைக் கெட்டிப் படுத்தும் வெறி கொண்டதாகும்.

பார்ப்பனர் ஆதிக்கம் என்றால் பிறப்பில் அவர்கள் தான் முதன்மையானவர்கள். பிர்மா இந்த உலகத்தைப் படைத்ததே கூட பிராமணர்களுக்காகத்தான். அவர்கள் பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள்; மற்றவர்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்குத் தொண் டூழியம் செய்து கிடக்க வேண்டியவர்கள் என்ற நிலைப்பாடு இருந்து வருகிறது. இந்த நாட்டில் உழைக்கும் மக்கள் பஞ்சமர்கள் என்று ஆக்கப்பட்டார்கள். அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை இந்து மத - பார்ப்பன மதத்தில் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு காட்டப்பட்டது.

இந்த நிலையை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கிய தலைவர் தந்தை பெரியார்; இயக்கம் - திராவிடர் இயக்கமாகும்.

துயரப்படும் மக்கள் உண்மையை உணரும் அளவில் அவர்களுக்குப் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யப்பட்டது. சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்ற உணர்வு உச்ச கட்டத்திற்குச் சென்றது.

பார்ப்பனர்கள் திறந்த மேனியில் தங்களின் உயர் ஜாதி ஆணவச் சின்னமான பூணூல் அணிந்து வருதல், உச்சிக்குடுமி வைத்துக் கொண்டு நடமாடுதல் என்பது எல்லாம் - அறவே நிற்கும் நிலை உருவாக்கப்பட்டது.

ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, அய்யங்கார் பார்ப்பனருக்கு மூன்றுகொம்பு என்று கோலி விளையாடும் சிறுவன்கூட கேலி பேசும் நிலை உருவாக்கப்பட்டது. எப்படியோ ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் பார்ப்பனீயத்தோடு இணைந்து நின்ற அமைப்புகளாகி விட்டதால் எதிர்ப்பிரச்சாரப் புயலில் பார்ப்பனீயத்தோடு அதுவும் கட்டுண்டு தாக்குதலுக்கு ஆளானது.

தமிழ் மண்ணில் பார்ப்பன எதிர்ப்பு என்பது கட்சிகளைக் கடந்து நிற்கக் கூடியதாகும்; ஜாதி, மதங்களைத் தாண்டி இது செங்குத்தாக நிற்கிறது. தமிழ்நாடு சட்டப் பேரவையில்கூட ஜெயலலிதாவைச் சேர்த்து இரண்டே இரண்டு பார்ப்பனர்கள்தான் உறுப்பினர்கள். நூற்றுக்கு மூன்று கொடுத்துத் தொலையலாம் என்று நாம் நினைத்தால்கூட அதனைக்கூடக் கொடுக்க தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளோ, பொது மக்களோ தயாராக இல்லை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்து நின்ற பா.ஜ.க. அத்தனைத் தொகுதிகளிலும் கட்டிய பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை - டெபாசிட் காலியாயிற்று.

இடையில் திராவிட கட்சிகளின் துணையால் கொஞ்சம் துளிர்க்கப் பார்த்தது. அதுவும் நீடிக்க வில்லை. தனி மரமாக நின்று ஒப்பாரி வைக்கும் நிலை தான்.

வீட்டுக்கு வீடு ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரங்கள் வரட்டும்; வீட்டுக்கு வீடு பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கை விரும்புகிறோம்.

முதல் கேள்வி - பிறப்பின் அடிப்படையில் ஜாதி - உயர்வு தாழ்வை ஏற்றுக் கொள்கிறீர்களா? ஆம் என்றால், அத்தோடு அவர்களின் பிரச்சாரம் அஸ்தமனம்தான். ஏற்கவில்லை என்றால், அவற்றை வலியுறுத்தும் இந்துமத வேதங்கள், ஸ்மிருதிகள், சாத்திரங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றை பகிரங்க மாகக் கொளுத்தத் தயார்தானா என்ற கேள்வி எழும்.

சங்கர மடத்தில் அடுத்த சங்கராச்சாரி யார்? என்ற வினாவும் வெடிக்கும்.

சம்பளம் கொடுத்து அனுப்பப்படும் இந்தப் பேர் வழிகள் என்ன செய்வார்கள்? முடிவைச் சொல்லவோ, முடிவு எடுக்கக் கூடிய இடத்திலோ இவர்கள் இல்லையே! என்ன செய்வார்கள்? கைபிசைந்து நிற்பார்கள்.

கழக இளைஞர்கள், மாணவர்கள், இனவுணர் வாளர்கள், பகுத்தறிவாளர்கள் ஒருங்கிணைந்து ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை முறியடிக்கத் தயாராக இருக்க வேண்டும். இது பெரியார் பிறந்த மண் என்பதை நிரூபிக்க வேண்டும்.

நாங்கள் தயார்! தயார்!! நீங்கள் தயார்தானா? என்று கேட்கும் நிலை உருவாகட்டும்! உருவாகட்டும்!!

http://viduthalai.in/new/page-2/3311.html 

சு.சாமியே, ஓடாதே, நில்! -3

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் திராவிடர் கழகத்தின் தீவிர உறுப்பினர்கள் என்று அபாண்டமாக பழி சுமத்திய சு.சாமியின் உள்ளி மூக்கை உடைத்தது ஜெயின் கமிஷன் என்றால், மூக்கையே முழுவதும் வெட்டி முடித்தது திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்களின் விடுதலை அறிக்கை (10.10.2000)


எல்லாரிடத்திலும் விளையாடிப் பார்க்கலாம் என்று நினைத்த மனிதரின் ஆட்டபாட்டம் திராவிடர் கழகத்திடம் எடுபடவில்லை.

அந்த அறிக்கையிலே சு.சாமியின் அஸ்திவாரத்தையே நொறுக்கித் தள்ளி னார். அதில் ஒரு பகுதி இதோ:

ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கை மீது மத்திய அரசு மேற்கொண்ட அடுத்த கட்ட நடவடிக்கைபற்றிய ஓர் அறிக்கையில், இந்த யோக்கியர் சுப்பிரமணிய சுவாமியின் பங்கு ராஜீவ் காந்தி கொலையில் என்னவென்பது பற்றி என்ன குறிப்பிட்டிருக்கிறது என் பதை நாடு மறந்து விடுமா? நல்லவர்கள் மறந்து விடுவார்கள் என்பது இவரது நினைப்போ? 6 மாதங்களில் 8 முறை விசாரிப்பட்டவர் சு.சுவாமி (20-3-1995. 27-9-1995)

Memorandum of Action on the Final Report of Jain Commission of inquiry.

பக்கம் 17, 31 ஆகிய பக்கங்களில் என்ன கூறியிருக்கிறது - மத்திய அரசின் உள்துறை? இவரது குருஜி சந்திராசாமி, (அவரது டிரஸ்டில் இடம் பெற்றிருந்த டிரஸ்டிகளில் ஒருவர் சுப்பிரமணிய சுவாமி) பற்றி என்ன கூறியிருக்கிறது?

பக்கம் 16 மற்றும் பக்கங்கள் 26,27,28,29,30,31 Taking the entire evidence, material and circumstances brought on record into consideration, a doubt does arise regarding chanrdaswami’s complicity and involvement. so the matter requires further probe. Para 3, Page 232, vol iii) மற்றும் இந்த ATR இல் உள்ளவற்றை அப்படியே தருகிறோம். அதன் தமிழாக் கத்துடன் (தனியே இணைக்கப்பட் டுள்ளது. அது சுப்பிரமணிய சுவாமியின் முகமூடியைக் கிழித்துக் காட்டும்; நாளை வெளி வரும்)

இதன்படி பார்த்தால் ஜெயின் கமிஷன் பரிந்துரைகளை ஆராய்ந்தபின் மத்திய அரசு ((The Multi Disciplinary Monitoring agency) சுப்பிரமணிய சுவாமி பங்கு பற்றி மேலும் விசாரிக்கச் சொல்லித்தான் ஆணையிட்டிருக்கிறது.

திராவிடர் கழகத்தைப் பற்றியோ, வீரமணி பற்றியோ அல்ல.

அது மட்டுமா?

ஜெயின் கமிஷன் பரிந்துரைப்படி அவர் பல கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காமல் மழுப்பி மறைத்தமைக் காகவும், பொய்யான கருத்துகளையும் இட்டுக்கட்டி கூறியதற்காகவும் இந்திய குற்றவியல் சட்டம் (இ.பி.கோ.) IPC section 179,193 ஆகியவைகளின் படி அவர் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டுமென்றும் கூறியுள்ளது. வழக்கு நடந்து, இதன்படி சரியான தீர்ப்புக் கிடைத் தால் இவர் பத்தரை ஆண்டு தண்டனை யும், அபராதமும் செலுத்தி ஜெயிலில் தள்ளப்பட வேண்டிய நபர் ஆவார்.

1. இவரது கட்சியில் பொறுப்பில் இருந்தவரே இவரைப்பற்றிய சந்தேகம் கிளப்பி, இவரை அவரது வழக்கில் குறுக்கு விசாரணை ஜெயின் கமிஷனில் செய்தாரே அதற்கு விளக்கமான பதில் அளித்தாரா இவர்? (இதுபற்றிய தகவலும் வெளிவர உள்ளது)

2. அகில இந்திய காங்கிரஸ் கட்சி யின் சார்பில் ஆஜராகிய ஆர்.என்.மிட்டல் என்ற வழக்கறிஞர் கேள்விகளுக்கோ செல்வி ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கேள்வி களுக்கோ இவர் ஒழுக்காகப் பதில் அளித்தாரா? திணறி, திக்குமுக்காடி உளறிக் கொட்டவில்லையா - இந்த உத்தமபுத்திரர்?

3. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இந்தியா அப்ராட் (india Abroad - வாசிங்டன் நாள் 22.10.1990) என்ற ஏட்டிற்கு அளித்த பேட்டியில் விடுதலைப் புலிகள் முதன் முதலாக இஸ்ரேலியர் களிடம் தொடர்பு கொண்டு, மொசாட் என்ற இராணுவ அமைப்பிடம் இராணு வப் பயிற்சி பெற - தான் உதவியதாக கூறியவர் இந்த சுப்பிரமணிய சுவாமி தான். மேலும் சுப்பிரமணிய சுவாமி ஏற்கெ னவே எல்.டி.டி.யிடம் அனுதாபம் காட்டி வந்ததாகவும், ஈழப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆண்டன் பாலசிங்கம் தன்னை (CIA) சி.அய்.ஏ. ஏஜென்ட் என்று கூறிய தால் புலிகள் ஆதரவை தான் விலக்கிக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

ஜெயின் கமிஷனில் முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் வாதாடிய பிரபல வழக்கறிஞரும், முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான ராம்ஜெத்மலானி சுப்பிர மணிய சுவாமி பற்றி கமிஷனில் என்ன கூறினார்?

சுப்பிரமணிய சுவாமி நீண்ட கால விடுதலைப் புலிகளின் நண்பர். இந்தியா அப்ராட் பத்திரிகையின் செய்தியே அதற்குச் சான்று.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன் நண்பர்கள் ஊடுருவி இருப்பதாக சுவாமி கூறினார். நான் அடுத்தடுத்து குறுக்கு விசாரணை செய்தபோது, அவர் தன் கருத்தை மாற்றிக் கொண்டார். ராஜீவ் காந்திக்குப் போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்த காலகட்டத்தில் எஸ்.பி.ஜி பாதுகாப்பை மீண்டும் ராஜீவுக்கு வழங்க வேண்டும்; ஆனால் சுப்பிரமணிய சுவாமி அமைச்ச ராக இருந்த போது தக்க ஏற்பாடு எதுவும் செய்யவில்லை.

இந்தப் பாதுகாப்பை ராஜீவுக்கு வழங்க வேண்டும் என்று, அவர் பிரதமர் சந்திரசேகரிடம் விவாதிக்கவில்லை. சுப்பிரமணிய சுவாமி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தான் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார். எனவே அவர்தான் இதற்குப் பொறுப்பு. கருணாநிதிக்கோ சுவாமியைப் போன்று பிரதமராக வேண்டும் என்ற ஆசை கிடையாது. பிரதமர் ஆகும் தருணம் ராஜீவைவிட எனக்குத்தான் உண்டு என்று கூறியவரும் சாமிதான்.

இந்தியப் பிரதமராக சுப்பிரமணிய சுவாமி பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ராஜீவ் விரும்பினார் என்று சுவாமியே கூறுகிறார். இப்படி ஒரு வியாதி நமது நாட்டுக்குத் தேவையா? 91 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காலகட்டத்தில் அடுத்த பிரதமர் ராஜீவ்தான் என்பதை அனைவருமே பேசினர். இந்த நிலையில் சுப்பிரமணிய சுவாமி பிரதமராக வேண்டும் எனில் என்ன செய்வார்? - என்று ராம்ஜெத்மலானி ஜெயின் கமிஷனிலேயே கூறினார்.

இவ்வாறு அறிக்கையின் மூலம் திராவிடர் கழகத்துடன் மோதிய சு.சாமி பார்ப்பானின் முகமூடியை உடைத்தெறிந் தார் தமிழர் தலைவர்.

அதற்குப் பிறகு இந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை இந்தஆசாமி. இவரைப்பற்றி ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கைமீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் என்ன? அதையும் அடுத்துத் தெரிந்து கொள்வோமே!
http://viduthalai.in/new/page-2/3313.html