Tuesday, November 2, 2010

ஜார்ஜ் பெர்னாட்சா நினைவு நாள் (1950)

 ஜார்ஜ் பெர்னாட்சா நினைவு நாள் (02-11-1950) தந்தை பெரியார் போலவே 94 ஆண்டு கள் வாழ்ந்து மறைந்தவர் (1856-1950) மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாளர். ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாடகங்கள் காலங்கடந்து நிற்கக் கூடியவை. இலக்கியத் தொண்டுக்காக நோபல் பரிசு அளிக்கப்பட்டது (1925).

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் - பள்ளிப் படிப்பில் ஆர்வம் இல்லை - ஆனாலும், நூல்களைப் படிப்பதில் கட்டுக் கடங்கா ஆர்வம் கொண்டவர்.

பல எழுத்தாளர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் போலவே தொடக்கத்தில் அவர் எழுதிய எழுத்துகள் ஈர்க்கப்படவில்லை. விடா முயற்சியால் வெற்றி பெற்றார்.

ஆங்கில இலக்கியத்தில் நாடகப் பஞ்சம் என்ற விமர் சனத்தை வீழ்த்தும் வகையில் அரிய சாதனைகளைப் படைத் தவர் ஆவார். 50-க்கும் மேற் பட்ட நாடகங்களை எழுதினார்.

புராண மய்ய கருத்துகளைத் தூக்கியெறிந்து சமூக மாற் றத்துக்கான கருத்துகளை, சமூகச் சிக்கல்களை மய்யப் படுத்தி நாடகங்களைத் தீட்டி னார். கருத்தும், வசீகர நடையும் காந்தமாக மக்களை ஈர்த்தது. இசை, நாடகங்களைத் திற னாய்வு செய்வதில் விற்பன்னர் என்ற பெயரெல்லாம் இவருக்கு வந்து சேர்ந்தது.

நல்ல பேச்சாளராக மிளிர வேண்டும் என்ற ஆசை அவ ருக்கு உண்டு. ஆனாலும், சபைக் கோழை என்பது அவரைப் பிடித்து உலுக்கியது. தானாகப் பேசிக் கொண்டு போக ஆரம் பித்தார். அதன்பின் கூட்டம் உள்ள இடத்தில் உரக்கப் பேச ஆரம்பித்தார். அதன் விளைவு தலைசிறந்த ஆங்கிலப் பேச் சாளர் என்ற புகழின் உச்சியில் பளபளப்பாகப் பறந்தார்.

மிகுந்த நகைச்சுவை உணர்வைக் கொண்டவர். பேச்சிலும், எழுத்திலும் அவை போட்டி போடும்.

கிறித்துவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும், கார்ல் மார்க்சின் தத்துவம் இவரைக் கவர்ந்தது. அமைதி வழியில் சோசலிசக் கொள்கைகளைப் பரப்புவதற்காக நிறுவப்பட்டி ருந்த ஃபேபியன் கழகத்தில் (குயயை ளுடிஉநைவல) சேர்ந்தார்.

பெர்னாட்சாவைப்பற்றி ஏராளமான துணுக்குகளும், தகவல்களும் உலகம் பூராவும் பரவியுள்ளன.

பத்திரிகையாளர் ஒருவர் உலகில் மிகச் சிறந்த அறிவாளி யார்? என்று ஷாவைக் கேட்டார்.

இரண்டாவது இடத்தில் ஸ்டாலின், மூன்றாவது இடத் தில் அய்ன்ஸ்டீன், முதல் இடத் தில் உள்ளவரின் பெயரைச் சொன்னால் என்னைத் தற் பெருமைக்காரன் என்று சொல் லிவிடுவீர்கள் என்றாராம்.

அழகு கொழிக்கும் பெண் ஒருவர் ஷாவைச் சந்தித்து, நான் உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். நம்மிருவருக்கும் திருமணம் நடந்தால், என்னைப் போன்ற அழகும், உங்களைப் போன்ற அறிவும் கொண்ட குழந்தை பிறக்கும் அல்லவா? என்றார் அந்தப் பெண்மணி.

நீ சொல்வது சரியென் றாலும், என்னைப் போன்ற அழகும், உன்னைப் போன்ற அறிவும் கொண்ட குழந்தை பிறந்தால் என்னாவது? என்றாராம்.

பெர்னாட்ஷா எழுதி வைத்த உயில் புகழ் பெற்றது. சொத்தின் சரி பகுதியை அவரது நூல கத்திற்கு எழுதி வைத்தார். மீதிப் பகுதியை ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துகளை மேலும் குறைத்து 13 எழுத்துகளாக்கி ஆங்கிலம் எளிதாக உலகெங் கும் பரவச் செய்யும் ஆய்வுக்குப் பயன்படுத்தச் சொல்லி எழுதியிருந்தார்.

தமிழில் எழுத்துச் சீர்திருத் தம் செய்தால் குமட்டும் பெரு மக்கள் சிந்திப்பார்களாக!

- மயிலாடன
http://www.viduthalai.periyar.org.in/20101102/news02.html

No comments:

Post a Comment