Friday, November 12, 2010

இதற்கு பின்னால் உள்ள சக்தி எவை? சதி என்ன? அதுதான் இங்கே 'மில்லியன் டாலர் கேள்வி!-ஆ.ராசா

ஸ்பெக்ட்ரம் தொடர்பாக ஊடகங்கள் லாப நோக்குடன் திட்டமிட்டு சதி செய்கினன. அறியாமையுடன் நடந்து கொள்கின்றன என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா உறுதிபட தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஆ.ராசா அளித்த பேட்டி:
 தலைவர் கலைஞரைத் தாண்டி - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாரத பிரதமர் ஒப்புதல் இன்றி இன்னோருவர் எனக்கு அமைச்சர் பதவியையோ குறிப்பிட்ட இலாக்காவையோ தர முடியும் என்று நம்புகிற அளவுக்கு நான் அரசியலில் - நிர்வாகத்தில் முட்டாள் அல்ல. எனவே, சில ஊடகங்கள் தங்கள் அறியாமைக்கு என்னை இரையாக்க வேண்டியதில்லை.
 
நீரா ராடியா டாடா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான  பொதுத் தொடர்பு அலுவலர். அந்த வகையில் டாடா டெலிகம்யூனிகேசன் நிறுவனத்துக்காக நீரா ராடியா ஆப்ரேட்டர் கூட்டங்களிலும் இதர சந்திப்புகளிலும் கலந்துகொண்டுள்ளார்.என்னிடம் பல்வேறு சட்டப்படியான கோரிக்கைகளை கடந்த காலத்தில் வலியுறுத்தியுள்ளார்.

      ஆனால், ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்.. ஒரு நிறுவனத்தின் தலைவரோ, அதிகாரியோ என்னை துறை சர்பாக சந்திக்கிறார் என்பதற்காக அவர் துறைக்கு வெளியேயும் மற்ற இடங்களிலும் செய்கிற அல்லது ஈடுபடுகிற காரியங்களுக்கு எல்லாம் என்னை சம்பந்தப்படுத்திப் பேசுவது முறையல்ல. என்னோடு ஒரு விருந்தில் ஒருவர் கலந்து கொண்டு படம் பிடித்துக்கொண்டார் என்பதற்காக அவர் செய்யும் ஏனைய காரியங்களுக்கு நானே பொறுப்பு எனபதுபோல் செய்தி வெளியிட முயற்சிப்பது பத்திரிக்கை தர்மமல்ல என்பதை பத்திரிக்கை துறையிலே இருப்பவர்கள் உணரவேண்டும்.

      நீரா ராடியா என்ன பேசியிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் எந்த ஒரு விதிமுறையும் யாரோ ஒரு தனி நபரால் மாற்றக்கூடிய அளவுக்கு அரசாங்கம் பலகீனமானதல்ல... நானும் சட்டம் படிக்காதவனல்ல!


      என்னுடைய துறையின் பணி எனபது உரிமங்கள் மற்றும் அவைகளுக்கான அலைவரிசை ஒதுக்கீடு மட்டுமே. உரிமங்கள் வழங்கிய பிறகு ஒரு நிறுவனம் கொண்டுவரும் அன்னிய முதலீடு பற்றி நாங்கள் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டியது நிதி மற்றும் உள்துரை அமைச்சகங்களின் பணிதான்.

    இரண்டு துறைகளுக்கு இடையே நடக்கும் ரகசியக் கடிதப் போக்குவரத்துகள் மீடியாக்களில் வெளிவருகிறது.. இதன் பின்னணியில் எந்த சக்தி இருப்பதாகக் கருதுகிறீர்கள்?
      நான் பலமுறை எழுப்பும் கேள்விதான் இங்கும்... இந்தத் துறையில் நான் மட்டும் ஏன் கடுமையாக விமர்சிக்கப்படுகிறேன்... குற்றம் சாட்டப்படுகின்றேன்.? புதிதாக நான் ஏதாவது சட்டம் கொண்டு வந்தேனா? அல்லது இருக்கிற சட்டத்தை தூக்கியெறிந்து விட்டேனா? இல்லையே! ஸ்பெக்ட்ரம் அலைவரிசை இருப்பை வெளியுலகுக்கு காட்டாமல் மறைத்து வைத்துவிட்டு ஏர்டெல், ஏர்செல், வோடஃபோன், ஐடியா போன்ற ஏற்கனவே இருக்கும் நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து தொலைபேசி சேவை வழங்கினால் தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையும் உயராது. மக்கள் அளிக்கவேண்டிய கட்டணமும் குறையாது. அதனால் புதிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்ற ஒழுங்குமுறை ஆணையத்தின் கொள்கையை பிடிவாதமாக இருந்து நிறைவேற்றினேன். கால் நூற்றாண்டு காலமாக தங்கள் கையில் மட்டுமே இருந்த தொழில், இன்னும் சிலபேருக்கு கை மாறுகிறது என்ற கோபத்தில் - ஒரு வர்த்தக கூட்டு உடைக்கப்படுகிறது என்ற எரிச்சலில் சிலர் இருந்திருக்கலாம். இது இயற்கையான, சராசரி வியாபார உணர்ச்சிதான் அதன் விளைவுகளையும் நான் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

பிரதமர் இதுகுறித்து நன்றாகவே அறிவார். இந்த முயற்சியில் நான் இறங்காமல் இருந்திருந்தால் எனக்கு பிரச்சனையே இருந்திருக்காது. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கேள்வி வந்தபோது, நான் தேங்கிக் கிடக்கும் சாக்கடையாக இந்தத் துறையில் இருக்க விரும்பவில்லை. நீரோட்டத்தில்தான் மின்சாரம் வெளிப்படும். என்று குறிப்பிட்டு இருக்கிறேன். அது மட்டுமல்ல இந்தத் துறையில் எவ்வளவு அலைவரிசை கையிறுப்பு இருக்கிறது என்று முதன்முதலில் இணையதளத்தில் வெளியிட்ட இந்தக் துறையின் ஒரே அமைச்சர் நான்தான் என்பதையும் நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளேன். இவையெல்லாம் சிலருக்கு தொழில்ரீதியான பின்னடைவுகளை ஏற்படுத்தியிருக்கலாம்... அதன் காரணமாகவும் நான் குறி வைக்கப்படுகின்றேன்.

      2ஜி என்பது பொது விநியோகத்திட்டத்தில் வழங்கப்படும் அரிசி போன்றது. 3ஜி என்பதோ பிரியாணிக்கு பயன்படும் உயர்தர பாசுமதி அரிசிபோல! பொதுவிநியோகத் திட்டத்தில் ஒரு கிலோ அரிசி ஒருரூபாய்க்கு வழங்கப்படுகிறது. என்பதற்காக பாசுமதி அரிசியை ஒப்பிடு காட்டி ஒரு ரூபாய் அரிசி விநியோகத்தால் அரசுக்கு நஷ்டம் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? 2ஜி சேவை எனபது சதாரண மனிதனுக்கும் போய்ச் சேரவேண்டிய குரல் சேவை. 3ஜி என்பது வர்த்தக ஆவணங்களை அனுப்புவதற்க்கும், விடியோ சினிமா போன்ற உயர்ரக சேவைக்கும் உரியது. 2ஜி சேவை கல்வி, சுகாதாரம், கிராமிய வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் கடைசி மனிதனுக்கும் பயன்படவேண்டிய ஒன்று 3ஜி என்பது வர்த்தகம் சார்ந்த மற்றும் வசதி படைத்தவர்களுக்கு சேவை அளிக்கக் கூடியது. ஒழுங்குமுறை ஆணையம் உலக நாடுகளில் உள்ள நடைமுறைகளை எல்லாம் கருத்தில்கொண்டுதான், 3ஜி அலைவரிசையை ஏலம் விட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இப்போதைய இந்தியாவின் சமூகப் பொருளியல் புள்ளி விவரங்களின் அடிப்படையில் சாதாரண குரல் வழி சேவை வழங்கும் 2ஜி சேவைதான் சாதாரண சாமானிய மக்களுக்கு தேவையே தவிர 3ஜி அல்ல! இன்னுமொரு 10,20 ஆண்டுகள் கழித்து நிலைமை மாறலாம். 1994-ம் ஆண்டு 2ஜி சேவை வந்தபோது எத்தனை பேர்கள் செல்போனை பயன்படுத்தினார்கள்? இப்போது நிலை என்ன? அதேபோல கல்வி அறிவும், தொழில்நுட்பதாக்கமும் சாதாரண மக்களிடையே உயருமானால் இன்னும் சில ஆண்டுக்குப் பிறகு 3ஜி சேவை கூட எளிதாக்கப்படலாம்; பட வேண்டும். அப்போது 4ஜி சேவையும் வந்துவிடும். இது குறித்து ஒழுங்குமுறை ஆணையம் உரிய முடிவுகளை சூழலுக்கு ஏற்ப எடுக்கும் இப்போதைய ஒழுங்கு முறை ஆணையத்தின் முடிவின்படி 3ஜி ஏலம் விடப்படுகிறது.

      கம்பெனியின் பங்குகள் யார் யாருக்கு சொந்தம் என்பதை இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம். தகவல் உரிமைச் சட்டத்தினாலும் தெரிந்து கொள்ளலாம்.

  மீடியா ஸ்பெக்ட்ராம் விவகாரம் குறித்து விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன?

      ஊடகங்களுக்கு இவ்விஷயத்தில் எந்த சார்புத்தன்மையும் இல்லை என்று சொன்னால் பாமர மனிதன் கூட ஏற்றுக் கொள்ளமாட்டான். காரணம் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், மீடியாக்கள் மூலமாக விளம்பரத்திற்காக மட்டும் ஆண்டொன்றுக்கு 2,000 கோடி வரை செலவு செய்கின்றன. இந்த விளம்பர வருமானத்தை எந்த பத்திரிக்கையோ சேனலோ இழக்க முன்வருமா? எனவே, ஊடகங்கள் இந்த விஷயத்தில் பல நேரங்களில் நியாயமாக செயல்படவில்லையென்றே எண்ணத் தோன்றுகிறது. நான் இந்த துறைக்கு பொறுப்பேற்றவுடன் என்னென்ன மாறுதல் அடைந்துள்ளது என்பதைப் பற்றி பத்திரிக்கைகளும் ஊடகங்களும் எழுதுவதில்லை. தொலைபேசி இணைப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது மட்டுமல்லாமல்... கட்டணம் குறைந்துள்ளது. நாட்டில் எல்லா பொருளும் விலை ஏற்றத்தில் உள்ளன,. ஆனால், தொலைபேசிக் கட்டணம் மட்டுமே குறைந்து கொண்டே இருக்கிறது. மேலும் பல வசதிகள் கிடைக்கவுள்ளது. உள்ளூர் அழைப்பு 10 பைசாவுக்கும், அகில இந்தியக் கட்டணம் 25 பைசாவுக்கும் விரைவில் வரவுள்ளது. இப்படியிருக்க ஸ்பெக்ட்ரம் குறித்து ஒரு ஆங்கில பொருளாதார நாளேட்டில் ”இராஜாவின் அவமானம்” என்று எழுதினார்கள். நான் சொல்கிறேன்... “It is my pride’’. ஆம், இது எனது பெருமை! நல்ல விஷயங்களைப் பாராட்டவிட்டாலும் போகிறது... உண்மையை இவர்கள் பேச மறுப்பது ஏன்? அதற்கு பின்னால் உள்ள சக்தி எவை? சதி என்ன? அதுதான் இங்கே `மில்லியன் டாலர்` கேள்வி! 

http://www.tamizhankural.com/ Monday, 31 May 2010 05:02

ஸ்பெக்ட்ரம் பற்றி மேலும்

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு: முறைகேடு நடைபெறவில்லை உச்சநீதிமன்றத்தில் அரசு மனு தாக்கல்

No comments:

Post a Comment