தன்னுடைய வழக்கை விசாரிக்கும் நீதிபதியின் குடும்பப் பெயர், அவர் ஒரு பார்ப்பனர் என அடையாளப்படுத்துவதா லும், பார்ப்பனரிடம் தனக்கு நியாயம் கிடைக் காது என்பதாலும், தன் வழக்கை வேறு ஒரு நீதி பதியிடம் மாற்றவேண் டும் என, தாழ்த்தப்பட் டவர் ஒருவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத் துள்ளார்.
வேண்டுகோள் விடுத் தவரின் பெயர் அடுல் ராம்ஜிபாய் மக்வானா. ஜுனகாத் மாவட்ட நீதி பதி ஒருவர், 3 ஆவது மற் றும் 4 ஆவது நிலைப் பணியிடங்களுக்கு நபர் களைத் தேர்ந்தெடுப்ப தில் பார்ப்பனர்களுக்குச் சார்பாக இருப்பதாகக் கூறி, அவருக்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத் தில் மக்வானா வழக்குத் தொடுத்துள்ளார். அதை விசாரணைக்கு எடுத்துக் கொண்டவர், நீதிபதி ஆர்.ஆர். திரிபாதி. அவ ருடைய பெயரைக் கொண்டு அவர் ஒரு பார்ப்பனராக இருக்கக் கூடும் எனும் யூகத்தில் மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
திரிபாதி தள்ளுபடி!
மக்வானாவின் சார் பாக வழக்கை உரைத்த வர் ஏ.எம். சவ்ஹான் என்ற வழக்குரைஞர். அவர்மூலம் வேண்டு கோளைக் கேட்ட நீதி பதி ஆர்.ஆர். திரிபாதி, அதைத் தள்ளுபடி செய்துவிட்டார். அந்த உயர்நீதிமன்றத்தில்தான் நீதிபதியாகப் பதவி யேற்ற பின்பு இப்படி ஒரு வேண்டுகோளை ஒரு வழக்குரைஞர்மூலம் முதன் முறையாகக் கேட் பதாக அப்பொழுது அவர் கூறினார்.
வழக்குரைஞர் சவ் ஹான் வேண்டுகோள் விண்ணப்பத்தில் பின் வருமாறு குறிப்பிட்டி ருந்தார்:
தாங்களும் ஜுன காத் மாவட்ட நீதிபதி யின் வகுப்பைச் சார்ந்த பார்ப்பனர் எனத் தங் கள் குடும்பப் பெயர் தெரிவிப்பதால், தாங்கள் இந்த வழக்கை எடுத்து விசாரிப்பதை நான் விரும்பவில்லை.
நடவடிக்கையாம்!
மக்வானாவின் வழக் குரைஞர் இவ்வாறு வேண்டுகோள் விண்ணப் பத்தில் கூறியிருப்பதை நீதிபதி திரிபாதி ஏற்க வில்லை.
வழக்கறிஞருக்கு எதி ராக நீதிமன்ற அவ மதிப்பு நோட்டீசு அனுப் புவதற்குப் பொருத்த மான விசயம் இது. அவ ருடைய கட்சிக்காரர் சொல்லி, இவ்வாறு கூறி யிருப்பார் எனில், கட்சிக் காரர்மீதும் வழக்குத் தொடரலாம். ஆனால், அவ்வாறு செய்வதில் இருந்து இம்மன்றம் தன்னைத் தடுத்துக் கொள்கிறது. இந்த மன் றத்திற்கு அழுத்தம் தர வேண்டும், அதன்மூலம் சாதகமான ஆணை யைப் பெறவேண்டும் என்றோ அல்லது இந்த விசயத்தை இந்த மன்றத் திடமிருந்து மாற்றவேண் டும் என்றோ, வழக்குரை ஞர் மேற்கண்டவாறு சொல்லி விண்ணப்பித்தி ருப்பார் எனத் தோன்று கிறது என்று கூறி, வேண்டுகோளை நீதிபதி திரிபாதி தள்ளுபடி செய் தார்.
1921 இல் இதேபோன்று ஒரு நிகழ்ச்சி
இது தொடர்பாக 1921 இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கு ஒப்பிடத்தக்கது. ராகவ ரெட்டி, நெல்லூ ரைச் சேர்ந்த வழக்கறி ஞர் தன்னுடைய கட்சிக் காரர்களின் வழக்கை, பார்ப்பனரான துணை மாவட்ட நீதிபதி விசா ரிக்கக் கூடாது எனப் பார்ப்பனரல்லாத மாவட்ட நீதிபதிக்கு விண்ணப்பித் தார். ஆனால், அவரு டைய விண்ணப்பம் தள் ளுபடி செய்யப்பட்டது. அதன் பேரில், அரசாங்க உயர் வழக்கறிஞராகிய (அட்வகேட் ஜெனரல்) சி.பி. ராமசாமி அய்யரி டம் அதே கோரிக் கையை வைத்தார். அவரோ சென்னை உயர்நீதிமன் றத்திற்கு விண்ணப்பம் அனுப்பி, ராகவரெட்டி யின் மீது ஒழுங்கு நட வடிக்கை எடுக்கக் கேட் டுக்கொண்டார். தன்னு டைய கோரிக்கையான, பார்ப்பன நீதிபதி விசா ரிக்கக் கூடாது என்பதை விலக்கிக் கொள்ள அந்த நெல்லூர் வழக்கறிஞர் அறிவுறுத்தப்பட்டார்.
ஆனால், அவர் விலக் கிக் கொள்ளவில்லை. அதன் பேரில் நீதிமன்ற அவமதிப்புக்காக, ஆறு மாதம் அவர் தொழில் நடத்தக்கூடாது என்ற தடையின்மூலம் அவர் தண்டிக்கப்பட்டார். வழக் கைப் பிரிவி கவுன்சி லுக்கு எடுத்துச் செல்ல விண்ணப்பித்தார். ஆனால், உயர்நீதிமன்றம் அதை அனுமதிக்கவில்லை.
http://viduthalai.periyar.org.in/20101019/news02.html
No comments:
Post a Comment