கோவை - சாரதாம்பாள் கோவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி சிர்புர்கர் உரிமைகளைவிட கடமைகள் ஆற்றுவதே மிக முக்கியம்; நமது அரசமைப்புச் சட்டத்தில் கடமையை பின்னால் தள்ளிவிட்டு, உரிமையை முதலிடத்தில் வைத்துவிட்டது என்றெல்லாம் விரிவாகப் பேசிவிட்டு, மனுதர்மம்பற்றி அவர் தெரிவித்துள்ள கருத்து மிகவும் அதிர்ச்சியூட்டக் கூடியதாக உள்ளது.
ளுஅடையைசடல ஆயரேளஅசவை டிகவந அளைவேநசயீசநவநன யனே அளைரனேநசளவடிடின யன டிடேல அயனேயவநன அய வடி யீசடிவநஉவ றடிஅந வாநசை எயசடிரள ளவயபநள. ஐவ றயள டிவ வடி நெ பஎந கசநநனடிஅ யனே டநெசவல, ந நஒயீடயநேன என்று பேசியுள்ளார்.
மனுஸ்மிருதி அடிக்கடி தவறாக விளக்கம் அளிக்கப்பட்டு, தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. பெண்களைப் பல நிலைகளிலும் ஆண்கள் பாதுகாக்க வேண்டும் என்று மட்டுமே அது கூறுகிறது. பெண்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ கொடுக்கக் கூடாது என்று மனுதர்மம் கூறவில்லை என்று பேசி இருக்கிறார்.
(தி இந்து, 10.10.2010, பக்கம் 4).
உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கக் கூடிய ஒருவர் எப்படி இவ்வளவு உண்மைக்கு மாறான கருத்தினை கூறுகிறார் என்பதைப் புரிந்துகொள்ளவே கடினமாக உள்ளது.
மனுஸ்மிருதி அடிக்கடி தவறாக விளக்கம் அளிக்கப்படுகிறது, தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது என்று நீதிபதி கூறியிருப்பது மற்றவர்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, கண்டிப்பாக இந்தக் கருத்தினைக் கூறிய நீதியரசர் சிர்புர்கர் அவர்களுக்கு நூற்றுக்கு நூறாகவே பொருந்துகிறது. அசல் மனு தர்ம நூலை அவர் படித்திருப்பாரேயானல், மனுதர்மம் குறித்து இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை.
சோ ராமசாமி போன்ற ஆசாமிகள் எழுதிய ஹிந்து மகா சமுத்திரங்களைப் படித்துவிட்டு தவறான புரிதலுக்கு ஆளாகி இருக்கக்கூடும்.
பிறப்பின் அடிப்படையில் நான்கு வருணங்களைப் படைத்ததாகக் கூறும் கீதையை உயர்ந்த தத்துவ நூலாக மடைமாற்றிப் பேசுவதில்லையா? வெளிநாடுகளுக்குச் செல்லும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் (ஈ.கே. நாயனார்) போன்றவர்களே கீதையைக் கொண்டுபோய்க் கொடுத்து - இந்தியாவின் கலாச்சாரப் பொக்கிஷமாகக் கூறுவதில்லையா?
அதே நிலைதான் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. மனுதர்ம நூல் மனித சமத்துவத்தை எந்த ஒரு சுலோகத்திலாவது கூறியதுண்டா?
அந்தப் பிரம்மா ஆனவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர, வருணத்தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்.
(மனுதர்மம் அத்தியாம் 1, சுலோகம் 87).
பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும், பிரம்மாவின் உயர்ந்த இடத்தில் (முகத்தில்) பிறந்ததனாலும் இந்த உலகத்தில் உண்டாகியிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்கி அவனே பிரபுவாகிறான்.
(மனுதர்மம் அத்தியாயம் 1, சுலோகம் 100).
வைதீகமாயிருந்தாலும், லவுகீகமாயிருந்தாலும் அக்நியானது எப்படி மேலான தெய்வமாகவே இருக்கிறதோ, அப்படியே பிராமணன் ஞாநியாயிருந்தாலும், மூடனாயி ருந்தாலும் யவனே மேலான தெய்வம்.
(அத்தியாயம் 9, சுலோகம் 317).
மெத்த படித்த உச்சநீதிமன்ற நீதிபதி அவர்களுக்கு இதுபற்றி விண்டுரைக்கத் தேவையேற்படாது.
பெண்களுக்கு விடுதலை கொடுக்கக் கூடாது என்று மனுதர்மம் கூறவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி கூறியிருப்பது உச்சக்கட்டமான தவறான தகவலும், கருத்துமாகும்.
பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், - யெவனத்தில் கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பின்பு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்கவேண்டியதல்லாமல் ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக்கூடாது.
(மனுதர்மம் அத்தியாயம் 5, சுலோகம் 148).
பெண்ணானவர் எந்தப் பருவத்திலும், நிலையிலும் ஆண்களைச் சார்ந்தே வாழவேண்டும்; சுய சிந்தனையுடை யவராக இருக்கக் கூடாது என்று மனுதர்மம் கூறுவதுதான் பெண்களுக்கு உரிமை கொடுத்திருக்கும் அதிவேக லட்சணமா?
படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.
(மனுதர்மம் அத்தியாயம் 9, சுலோகம் 17).
இதைவிடப் பெண்களை தரங்கெட்டவர்களாக, ஒழுக்கம் கெட்டவர்களாக வேறு யாரால்தான் சொல்லியிருக்க முடியும் - மனுவைத் தவிர?
தந்தை பெரியார் சிந்தனைகள் உச்சநீதிமன்ற நீதிபதிவரை தேவைப்படுகின்றன என்பதுதான் - இதன்மூலம் பெறப்படும் உண்மையாகும்.
http://www.viduthalai.periyar.org.in/20101015/news06.html
No comments:
Post a Comment