Thursday, October 14, 2010

குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து கன்னியாஸ்திரியை கற்பழித்த கிறிஸ்தவ பாதிரியார் திருச்சி ஜோசப் கல்லூரியின் முதல்வர்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ்மேரி (வயது28). கன்னியாஸ்திரி. திருச்சி கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று நேற்று இரவு கொடுத்தார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 2006-ம் ஆண்டு திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. படித்து வந்தேன். அப்போது திருச்சி ஜோசப் கல்லூரியில் முதல்வராக பணியாற்றும் ராஜரத்தினத்துடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் இசை ஆல்பம் தயாரிப்பவர் என்பதால் அடிக்கடி அவரை சந்திப்பேன்.

கடந்த 22.1.2006 அன்று ராஜரத்தினத்தை பார்க்க சென்றேன். அப்போது பாதிரியார் ராஜரத்தினம் எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார்.

இதில் மயங்கிய என்னை பாதிரியார் ராஜரத்தினம் கற்பழித்து விட்டார்.

மேலும் அதை செல்போன் காமிராவில் படம் எடுத்தார். மயக்கம் தெளிந்து எழுந்த நான் பாதிரியார் நியாயம் கேட்டேன். அதற்கு ராஜரத்தினம் செல்போனில் ஆபாசபடம் எடுத்ததை காட்டி அவருக்கு உடன்படாவிட்டால் வெளியில் பரப்பிவிடுவன் என்று மிரட்டினார்.

தொடர்ந்து என்னை பாதிரியார் ராஜரத்தினம் பல ஊர்களுக்கு அழைத்து சென்றார். அங்கு உடல் உறவு வைத்து கொண்டார். இதற்கிடையே நான் கர்ப்பம் அடைந்தேன்.

இதை பாதிரியார் ராஜரத்தினத்திடம் கூறினேன். உடனே கடந்த 2008-ல் கருவை கலைத்து விடுமாறு கூறினார். அதன்படி திருச்சியில் உள்ள பிரபல ஆஸ்பத்திரிக்கு சென்று கருவை கலைத்தேன்.

இதற்கிடையே கன்னியாஸ்திரியுடன் நான் கர்ப்பமான தகவலும் கருகலைத்த தகவலும் வெளியில் தெரிந்தது. கன்னியாஸ்திரிக்கு உரிய புனிதத்தை மீறியதாக கூறி என்னை சபையில் இருந்து நீக்கி விட்டார்கள்.

இதனால் கன்னியாஸ்திரி உடையை அணியாமல் ஊருக்கு சென்றால் அசிங்கமாகி விடுமே என பயந்தேன். பாதிரியார் ராஜரத்தினிடம் சென்று நியாயம் கேட்டேன். அப்போது பாதிரியார் ராஜரத்தினம் இது தொடர்பாக என்னை பார்க்ககூடாது வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது. மீறினால் கொன்று விடுவதாக மிரட்டினார்.

பாதிரியார் ராஜரத்தினத்துக்கு ஆதரவாக திண்டுக்கலை சேர்ந்த பாதிரியார் தேவதாஸ், மதுரை பாதிரியார் சேவியர் பிரான்சிஸ் கருமாந்தூர் சேவியர் ஆகியோரும் என்னை மிரட்டினார்கள்.

இவ்வாறு அவர் மனுவில் கூறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கோட்டை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதுதொடர்பாக பாதிரியார் ராஜரத்தினம் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பாதிரியார்கள் தேவதாஸ், சேவியர் பிரான்சிஸ், கருமாந்தூர் பாதிரியார் சேவியர் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து கோட்டை போலீசார் பாதிரியார் ராஜரத்தினத்திடம் விசாரணை நடத்த உள்ளனர். மேலும் கன்னியாஸ்திரிக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து கோட்டை உதவி கமிஷனர் சீனிவாசனிடம் கேட்டபோது பிரான்சிஸ்மேரி கொடுத்த புகார் மீது விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார்.

கன்னியாஸ்திரியை பாதிரியார் கற்பழித்து கருவை கலைத்து, கொலை மிரட்டல் விட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புகாருக்கு உள்ளான ராஜரத்தினம் முதல்வராக உள்ள ஜோசப் கல்லூரியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், மத்திய மந்திரி நெப்போலியன், உள்பட பல பிரபலங்கள் படித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 150 ஆண்டு பாரம்பரியமிக்க ஜோசப் கல்லூரியின் முதல்வர் மீது எழுந்து உள்ள செக்ஸ் புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
http://www.maalaimalar.com/2010/10/12160507/pastor-torture-to-lady.html

No comments:

Post a Comment