கருங்கல் அருகே பிள் ளையார் சிலை ஊர் வலத்தில் திடீரென இரு பிரிவினர் இடையே மோதல் வெடித்தது. இதில் அரசு பேருந்து மற்றும் கடைகள் தீ வைத்து எரிக்கப்பட் டன. தனியார் நிதி நிறு வன அலுவலகத்துக்குள் வன்முறையாளர்கள் புகுந்து சூறையாடினர்.
குமரி மாவட்டம், கிள்ளியூர் ஒன்றியத்தில் இந்துமுன்னணி சார்பில் 155 விநாயகர் சிலைகள் ஆங்காங்கே வைக் கப்பட்டிருந்தன. இந்த சிலைகள் மார்த்தாண் டம் அருகே உள்ள மிடா லம் கடலில் கரைப்ப தற்காக கருங்கல் அருகே கூனாலுமூடு இசக்கி அம்மன் கோவிலுக்கு நேற்று (செப்.19) மதியம் சுமார் ஒரு மணியளவில் கொண்டு வரப்பட்டன.
பின்பு, அங்கிருந்து சுமார் 250 வாகனங் களில் ஊர்வலமாக பிள் ளையார் சிலைகளை எடுத்து சென்றனர். ஊர் வலம், மங்கலக்குன்று, உதயமார்த்தாண்டம் வழியாக மாலை 4 மணி யளவில் மிடாலம் கடற் கரை பகுதியை சென்ற டைந்தது. கடற்கரைக்கு வந்ததும், தங்கள் கொண்டு வந்த பிள்ளையார் சிலை களை, கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த மீன் பிடிப் படகுகள் மீது வைத்ததாக தெரிகிறது.
இதற்கு, அந்தப் பகு தியை சேர்ந்த ஒரு பிரி வினர் எதிர்ப்பு தெரிவித் தனர். இதனால், இருபிரி வினர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, சிலைகளை கரைப்ப தற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், சம்பவ இடத் தில் இருபிரிவினரும் மாறி மாறி கல் வீச்சில் ஈடுபட்டனர். இதனால், ஊர்வலமாக வந்தவர் கள் சிலைகளுடன் பின் னோக்கி வந்தனர். இதைத் தொடர்ந்து உதய மார்த் தாண்டம் சந்திப்பு பகுதி யில் மோதல் ஏற்பட் டது. அந்த பகுதியில் ஏராளமான கடைகள், வீடுகள் தீ வைத்து எரிக் கப்பட்டன. பல கடை கள் உடைக்கப்பட்டு சூறையாடப்பட்டன. அந்தபகுதியில் இருந்த நியாயவிலைக் கடை ஒன்று சூறையாடப் பட்டு, அரிசி சாலையில் கொட்டப்பட்டது. மேலும், அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று தீ வைத்து எரிக் கப்பட்டது. இதனால், அந்தப் பகுதி போர்க் களம் போல் காட்சி அளித்தது.
அப்போது ஒரு கும் பல் அந்தப் பகுதியில் இருந்த தனியார் நிதி நிறுவனத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்து சூறையாடியது. உள்ளே இருந்த பல லட்சம் மதிப்புள்ள நகைகள், ரூ.7 லட்சம் பணம் போன்றவற்றை சூறை யாடப்பட்டன. திடீ ரென தோன்றிய இந்த மோதலால் ஊர்வலத் தில் வந்த பெண்கள் உள்பட பொதுமக்கள் அலறியடித்து கொண்டு அங்கும் இங்கும் ஓடினர்.
கடைகள், வீடுகள் எரிக்கப்பட்டதால், தீய ணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட் டது. தீயணைப்பு படை யினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால், விநாயகர் சிலை ஊர்வ லத்தில் பங்கேற்ற வாக னங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டி ருந்ததால் தீயணைப்பு படையினர் உள்ளே செல்ல முடியாமல் திண றினர். இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ, காவல் துறை கண்காணிப்பா ளர் ராஜேந்திரன் மற் றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், திருநெல்வேலி யில் இருந்து ஏராள மான அதிரடி படையி னர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. அங்கு தொடர்ந்து பதற்றமான நிலை நிலவுகிறது. இந் நிலையில் நள்ளிரவில் மிடாலம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டனவாம்.
ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் ஊர்வலம் என்ற பெயரால் கலவரம் ஏற்படுத்துவதை வாடிக் கையாகக் கொண்டுள் ளது கலவரம் மற்றும் சங் பரிவார்க் கும்பல்.
No comments:
Post a Comment