2ஜி மொபைல் சேவைக்காக அலைவரிசை ஒதுக் கீட்டைப் பெற்ற பின், சுவான் டெலிகாம் மற்றும் யுனிடெக் வயர்லெஸ் நிறுவனங்கள் பெரும் லாபத்தை அடைந்தன என்று பலரும் கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில், 1999 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வந்த தொலைத் தொடர்புக் கொள்கை, வருவாயை அதிகப்படுத்தும் கொள்கை அல்ல என்ற காரணத்தால், எவ்வளவு வருமானத்தை அரசுக்கு ஈட்டி இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பி விடை தேடுவது சற்றும் பயனற்றது என்று திட்டக்குழுவின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா இதனை மறுத்துக் கூறியுள்ளார்.
இதைப் பற்றி விளக்கம் அளிக்க நான் முயல என்னை அனுமதியுங்கள். இச்செய்தி பரவலாகப் பேசப்பட்டு வந்தது என்றாலும், இந்த விஷயத்தில் பொதுமக்களுக்குத் தவறான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன என்று அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டினால் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று இந்தியத் தலைமைக் கணக்கு அலுவலரின் கணக்கீட்டை மாண்டேக் சிங் அலுவாலியா ஏற்றுக் கொள்ளாமல் மறுத்துள்ளார்.
வருவாயை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்றெல்லாம் நாம் கணக்கிடுவதில்லை. தலைமைத் தணிக்கை அதிகாரி இவ்வாறு செய்தது, அதாவது கணக்கிட்டது, எனது கருத்தின்படி, சரியான வழியல்ல என்று அலுவாலியா கூறினார்.
இழப்புப் பற்றி தலைமைத் தணிக்கை அலுவலர் மேற்கொண்ட அணுகுமுறை பற்றி கேள்வி எழுப்பிய அலுவாலியா 1999 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக் கப்பட்டு வந்த தொலைத் தொடர்புக் கொள்கை, வருவாயை அதிகப்படுத்தும் கொள்கை அல்ல என்ற காரணத்தால், எவ்வளவு வருமானத்தை அரசுக்கு ஈட்டி இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பி விடை தேடுவது சற்றும் பயனற்றது என்று அலுவாலியா கூறினார்.
2ஜி அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற சுவான் மற்றும் யுனிடெக் நிறுவனங்கள் புதிய பங்குகளை வேறு நிறுவனங் களுக்கு விற்றுள்ளன என்பது முற்றிலும் உண்மையே. ஆனால் அந்தப் பணம் அந்த நிறுவனங்களுக்குச் செல்லவில்லை; புதிய நிறுவனங்களுக்குச் சென்ற அந்தப் பணம் தொலைதொடர்புச் சேவைக் கட்டமைப்பை உருவாக்குவதற்குப் பயன்படுத்துவதற்கானது. அந்நிறு வனங்கள் தங்களின் ஈகுவிடி பங்குகளை விற்கவில்லை.
நிறுவனத்தின் ஈகுவிடி பங்குகளை விரிவுபடுத்தி, புதியவர்களை நிறுவனத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இது அந்நிறுவனங்கள் அதிக லாபம் பெற்றன என்பதாக ஆகாது என்று கூறிய அவர் முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ. இராசாவின் காலத்தில் தொலைத் தொடர்புத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்களைப் பற்றியும் குறிப் பிட்டார்.
http://viduthalai.in/new/archive/1567.html
No comments:
Post a Comment