Monday, December 20, 2010

பெரியார் நேரம்!

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (18.12.2010) முக்கியமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப் பட்டுள்ளது. நீண்ட காலமாகக் கழகத் தோழர்களும், கழகத்திற்கு அப்பாற்பட்ட பெருமக்களும் கோரி வந்த கருத்துக்குச் செயலுருவம் கொடுக்க நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அது.

2011 ஜனவரி முதல் தனியார்த் தொலைக்காட்சி ஒன்றில் பெரியார் நேரம் என்ற பகுதியைத் தொடங்கி, பெரும் அளவில் பகுத்தறிவுக் கருத்துப் பிரச்சாரத்தை முடுக்கிவிடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது என்பதுதான் அந்தத் தீர்மானம்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பின் கொள்கைப் பிரச்சாரப் பயணத்தில் காலத்திற்கேற்ற அணுகுமுறை களோடு, அறிவியல் ரீதியில் பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது.

விடுதலை ஏட்டைப் பொறுத்தவரை 8 பக்கங்களாக ஆக்கப்பட்டது; திருச்சிராப்பள்ளியில் கூடுதலாக இன் னொரு பதிப்புத் தொடங்கப்பட்டது. நவீன வகையில் கணினி, நவீன அச்சு இயந்திரம் இவையெல்லாம் நிறுவப் பட்டு, வணிக ஏடுகளையும் விஞ்சக் கூடிய அளவுக்குச் சிறப்பான பொலிவோடு கருத்து வளத்தோடு ஏறுநடை போட்டு வருகிறது.

கழக வெளியீடுகள் என்பது நமது பிரச்சாரக் களத்தில் முன்னிலை வகிக்கக் கூடியதாகும். தொழில் ரீதியான பதிப்பகத்தார்களை மிஞ்சும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டு, அச்சிடப்பட்டு மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது. புதிய புதிய வெளியீடுகள் அலை அலையாக வந்து கொண்டிருக்கின்றன.

அரசு மற்றும் தனியார் நடத்தும் கண்காட்சிகளில் எல்லாம் நமது புத்தக அரங்கு கண்டிப்பாக இடம் பெற்று விற்பனையிலும் சாதனை படைத்து வருகிறது. பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தை அதன் பணியைப் பூமிப் பந்தின் தொடர் சுழற்சிபோல செய்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டு வரும் ஞானசூரியனை வாங்கிப் படியுங்கள் என்று அறிக்கை வெளியிட்டாலும் வெளி யிட்டார், அந்நூல் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் சென்றடையும் வண்ணம் திட்டம் தீட்டப்பட்டு, அனேகமாக அந்தப் பணியும் முற்றுப் பெற்றுவிட்டது. பல்லாயிரக் கணக்கில் மக்கள் மத்தியில் சென்றடைந்துவிட்டது. ஒவ்வொரு பக்கத்தையும் படிக்கும் ஒவ்வொருவரும், திராவிட இயக்கத்தின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ளும் சிப்பாயாகப் புறப்படுவார்கள் என்பதில் எட்டுணையும் அய்யமில்லை.

பார்ப்பனியத்தின் ஒடுக்கும் கருவிகளாக இந்து மதமும், அதன் வேத, புராண இதிகாசங்களும், உபநிஷத்துகளும் எந்த அளவு கூர்மையுடையவை என்பதை அக்கக்காக ஆதாரங்களுடன் திகழும் நூல்தான் சுவாமி தயானந்த சரசுவதி அவர்களால் எழுதப்பட்ட ஞானசூரியன் ஆகும்.

இந்நூலுக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அணிந்துரை - சிறப்புரை தந்திருக்கிறார். தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் புகழ் மகுடம் சூட்டியிருக்கிறார்.

பார்ப்பனர் அல்லாதார் உணர்வைப் பெறுவதற்கான நுழைவு வாயில் இந்நூல் என்று கூடச் சொல்லலாம்.

ஆரியர் - திராவிடர் போராட்டம் தோன்றவேண்டிய உணர்வினைப் பார்ப்பனர்களே முன்வந்து முரசு கொட்டி விட்ட இக்காலகட்டத்தில், ஒரு சரியான சந்தர்ப்பத்தில் ஞானசூரியன் நூலைக் கையில் எடுத்துக் கொள்ளச் சொல்லியிருந்தார் - மானமிகு கலைஞர் அவர்கள்.

திராவிட இயக்கத்தின் புதிய தலைமுறையினர் தம் வாசிப்பை உடனடியாகத் தொடங்கவேண்டும். ஆரிய ஏடுகள் கழுகு நகங்களை எழுதுகோலாக்கிக் கோர நர்த்தனம் பொழிகின்றன. அதன் திமிர் அடக்கும் ஆயுதம்தான் இந்த ஞானசூரியன்

இது ஒரு பக்கத்தில் நடந்துகொண்டாலும், இன்றைய முக்கிய ஊடகமாகத் தொலைக்காட்சி ஒவ்வொரு வீட்டின் அறையிலும் சட்டமாக உட்கார்ந்து கொண்டு விட்டது. துளித்துளி விஷமாக நம்முடைய மூளை நரம்புகளில் பார்ப்பனியச் சரக்குகள், பிற்போக்குக் கசுமாலங்கள் நம்மை அறியாமலேயே ஏறிக் கொண்டு இருக்கின்றன. அதன் ஆபத்துகள் நமக்கு நன்றாகவே புரியவும் ஆரம்பித்தன. நம் வீட்டுக் குழந்தைகளின் போக்கில்கூட அடாத போக்குகள்; இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில்கூட சமூக உணர்வு, பகுத்தறிவு உணர்வு ஏற்படுவதற்குப் பதிலாக அழுகல் உணர்வுகளும், ஆரோக்கியமற்ற போக்குகளும் தலை எடுப்பதைப் பார்த்து கவலைப்பட்டால் மட்டும் போதாது.

இந்த அபாயப் போக்கிலிருந்து தமிழர் வீட்டுப் பிள்ளைகளையும், இளையோரையும் மீட்டெடுக்க, முள்ளை முள்ளாலே எடுப்பதுபோல, தொலைக்காட்சி என்ற நவீன ஊடகத்தை நாமும் பயன்படுத்தியே தீரவேண்டும்.

பெரியாரியல் சிந்தனை மூலிகைதான் நம் மக்களின் மயக்கம் தீர்க்கும் நல் மருந்தாக இருக்க முடியும்.

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு எடுத்த முடிவு - உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியிலே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பெரியார் தொலைக்காட்சி வருவதற்குமுன் முன்னோட்டமாகப் பெரியார் நேரம் பவனி வரவிருக்கிறது. பொருளாதாரம் - மிக முக்கியம் - விளம்பரங்கள் கிடைக் காமல் தொடர்ந்து நடைபோடுவது கடினம் என்பதை நன்குணர்ந்து விளம்பரங்களைப் பெற்றுத் தருவதில் நமது தோழர்கள் போதிய முயற்சியை மேற்கொள்ளவேண்டும்.

வணிக நிறுவனங்களை நடத்தும் நமது ஆதர வாளர்கள், தமிழர்கள் கழகம் மேற்கொண்டிருக்கும் இந்த உன்னதப் பணிக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும் - நீட்டுவார்கள் என்ற நம்பிக்கையும் நமக்கு இருக்கிறது!

நாம் எடுத்த செயல் எதிலும் தோல்வி கண்டதில்லை. அதேபோல, இந்த அரும்பணியிலும் வெற்றி பெறுவோம் - வாழ்க பெரியார்!
http://www.viduthalai.periyar.org.in/20101220/news01.html

சிறீஅரிகோட்டா விஞ்ஞானி செயற்கைக் கோளை ஏவுமுன் காளஹஸ்தி கோயிலில் அர்ச்சனை செய்வதா?-கி.வீரமணி

ஜோதிடத்தை நம்பி குழந்தையைக் கிணற்றில் வீசி எறிந்த பெண்
சிறீஅரிகோட்டா விஞ்ஞானி செயற்கைக் கோளை ஏவுமுன் காளஹஸ்தி கோயிலில் அர்ச்சனை செய்வதா?அரசமைப்புச் சட்டம் கூறும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கும் இலட்சணம் இதுதானா? வேண்டுமானால் பக்தி வீட்டுக்குள்ளிருக்கட்டும்!

தமிழர் தலைவர் கண்டனம்

விண்வெளி ஆய்வுக்கூடமான சிறீஅரிகோட்டாவில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோளை ஏவுவதற்கு முன் ஆந்திர மாநில காளஹஸ்தி கோயிலுக்குச் சென்று விஞ்ஞானி அர்ச்சனை செய்வது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட விஞ்ஞான மனப்பான்மைக்கு எதிரானதல்லவா - விஞ்ஞானிக்குப் பக்தி இருந்தால், அது அவர் வீட்டுக்குள் பூஜையறையில் இருக்கட்டும் - ஆனால், மதச் சார்பற்ற அரசுப் பணியில் அதனைத் திணிக்கலாமா? என்று வினா எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.


அறிக்கை வருமாறு:

இன்றைய ஆங்கில நாளேடு ஒன்றில் வெளிவந்துள்ள நெஞ்சை உருக்கும் செய்தி ஒன்று, மூட நம்பிக்கையால் நம் மக்கள் வாழ்வு எப்படி சீரழிந்து சின்னாபின்ன மாக்கப்படுகிறது என்பதை விளக்குவதாக உள்ளது!


ஜோதிடத்தால் பெற்ற பிள்ளையைக் கிணற்றில் தூக்கி எறிந்த குரூரம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை கிராமத்தைச் சேர்ந்த காளீஸ்வரி என்ற 25 வயது நிறைந்த பெண், தன் குடும்பத்தாரின் சம்மதமின்றி தத்தூர் என்ற ஊரில் உள்ள ஒரு ஸ்பின்னிங்மில்லில் வேலை பார்க்கும் தர்மராஜ் என்பவரை இரண்டாண்டு களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்; இரண்டு குடும்பங்களுமே இந்தக் காதல் திருமணத் தம்பதிகளை ஏற்க மறுத்துவிட்டன. (ஜாதி மறுப்புத் திருமணமாகவும்கூட இது இருந்திருக்கலாம் - உறுதியாகத் தெரியவில்லை).

இவர்களுக்கு 18 மாத ஆண் குழந்தை ஒன்று பிறந்து வளர்ந்துவரும் நிலையில், இந்த காளீஸ்வரி என்ற (தாய்) பெண், எவனோ வழியில் போகும் ஒரு ஜோசியக் காரனிடம் ஆரூடம் கேட்டாராம்; அவன், நீ இந்தக் குழந்தையை எப்படியாவது விட்டொழித்தால்தான் உங்களது குடும்பத்தவர்கள் உங்களை ஏற்றுக் கொள்வர் என்று ஜோசியம் கூறினானாம்!

அதைக் கேட்டு, இந்த மூட நம்பிக்கையால் தனது 18 மாத ஆண் குழந்தையை ஒரு கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்ய முன்வந்தாராம்!


நாடகம் அம்பலமானது

இதைச் செய்துவிட்டு, கழுத்தில் போட்டிருந்த செயினைத் திருட, யாரோ ஒரு இளைஞன் தனது குழந்தையைப் பிடுங்கி கிணற்றில் வீசி எறிந்ததாக, காவல் துறையினரிடம் ஒரு போலி நாடகம் ஆடியுள்ளார்! காவல்துறை அதிகாரிகள் உண்மையை வரவழைத்து விட்டனர்!

என்னே மனிதாபிமானமற்ற கொடுமை!

இதில் ஜோதிட மூட நம்பிக்கை, காதல் திருமண எதிர்ப்பு, ஜாதி ஒழிப்புக்கு மறுப்பு என்ற சமூகக் கட்டுப்பாட்டு மூட நம்பிக்கை என்ற மூவகை மூடத்தனங்களும் சேர்ந்து, அந்த 18 வயது குழந்தையைக் கொன்றுள்ளது என்பது தானே உண்மை?

வன்மையான கண்டனத்திற்குரிய இச்சம்பவம் உணர்த்துவது என்ன? இன்னமும் பெரியாரும், அவர்தம் இயக்கமும், கொள்கைப் பிரச்சாரமும் எவ்வளவு தேவைப்படுகிறது என்பதுதானே!

இவராவது படிக்காத ஒரு கிராமத்துப் பெண், இளம் வயதில் இப்படி ஒரு முடிவு எடுத்தால் இனிவரும் வாழ்வை வளப்படுத்திக் கொள்ளும் தப்புக் கணக்கு அதற்கு அடிப்படையாக இருக்கலாம்.

அதைவிட வெட்கத்தாலும், அவமானத்தின் ஆழத் தாலும் மிகவும் வேதனை அனுபவிக்கவேண்டிய மற்றொரு முக்கிய செய்தி:


விண்வெளி விஞ்ஞானியின் மூடநம்பிக்கை

சிறீஅரிகோட்டாவிலிருந்து இன்று பறந்திருக்க வேண்டிய ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் - ஜி சாட் 5 பிரைம் என்ற செயற்கைக்கோள் (விண்வெளி ஆராய்ச்சித் துறையினரால்) தள்ளி வைக்கப்பட்டுவிட்டதாம்!

ரஷ்யாவிலிருந்து வந்த கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட இந்த ராக்கெட் என்ஜினில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு, கசிவு காரணமாக, புறப்படுவது தள்ளி வைக்கப்பட்டுவிட்டதாம்! தேதி பின்னர் அறிவிக்கப்படுமாம்!

இதன் தலைவர் (இஸ்ரோ இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர்) திரு. ராதாகிருஷ்ணன் என்ற கேரளத்தைச் சார்ந்த விஞ்ஞானி (இவர் மாதவன் நாயருக்கு அடுத்தபடி இந்தப் பதவியை ஏற்றவர்) இந்த விண்வெளிக்குப் புறப்படும் ராக்கெட் நல்லபடி புறப்பட, ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டு வந்தாராம்!

ஒரு விண்வெளி ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானி, காளஹஸ்தி கோவிலில் உள்ள கடவுளை வேண்டினார் என்பது எவ்வளவு அறியாமை! மடமை! மூட நம்பிக்கை! அறிவியலுக்கு நேர்மாறானது!

அந்தக் கோபுரம் இடிந்து கோயிலே சில மாதங்களுக்குமுன் தரைமட்டமான பிறகும்கூட - இவர்களுக்குப் புத்தி வரவில்லையே!

தன்னைக் காக்கத் தெரியாத - முடியாத கடவுளா உன்னைக் காப்பாற்றுவான் என்று தந்தை பெரியார் கேட்பார்; அதுதான் நினைவுக்கு வருகிறது! அதன் பின்னரும் கிளம்பவில்லையே! இதுதான் பக்தியின் சக்தி!


அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி நமது அரசு மதச்சார்பற்ற (Secular) அரசு; அதுமட்டுமல்ல - ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படைக் கடமை (Fundamental Duties) என்பதில் அறிவியல் மனப்பாங்கு Scientific Temper,’’ ‘‘Spirit of Enquiry - கேள்வி கேட்கும் ஆராய்ச்சி, Humanism - மனிதநேயம், Reform - சீர்திருத்தம் - இவ்வளவும் தேவை என்று 51ஏ பிரிவின்படி கூறியுள்ளதே!


இவர்களுக்கு - மேதைகளுக்குப் பொருந்தாதா?

மதச் சார்பின்மை, அறிவியல் மனப்பான்மை எல்லாம் இவர்களால் குழிதோண்டிப் புதைக்கப்படுகிறதே இது நியாயந்தானா?

திருப்பதி கோயிலுக்குச் சென்றபோதும் பலன் ஏற்பட்டதா?

ஏற்கெனவே, இவரின் முன்னோடி, விண்வெளி ஆராய்ச்சி செய்து கண்டறிந்த ராக்கெட்டை அனுப்புமுன் திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை வேண்டுவது, குருவாயூருக்குச் சென்று, குருவாயூர் கிருஷ்ணனை வேண்டுவது போன்ற கேலிக் கூத்தான செயல்களைச் செய்து வந்திருக்கின்றனர்! கடைசியில் பலனின்றித் தோல்வியில் முடிந்ததும் உண்டு.

நாடு முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்கள், மதச்சார்பின்மை தத்துவங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்கள் இதனைக் கண்டித்துத் தீர்மானம் போட்டு அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பவேண்டும்.


பக்தி வீட்டுக்குள் இருக்கட்டும்!

அந்த விஞ்ஞானிக்குப் பக்தியிருந்தால் அது அவரது வீட்டுக்குள்தான் இருக்கவேண்டும். விண்வெளிக் கூடத்திற்கு வரவழைக்கப்படலாமா?

இந்த மெத்தப் படித்த மேதாவிகளின் கேலிக் கூத்துக்குமுன், ஆனைமலை காளீஸ்வரிகளின் மூட நம்பிக்கை வெகுசாதாரணமான சின்ன கோடாக மாறிவிடுகிறதே!

படிப்புக்கும், அறிவுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா நம் நாட்டில்? மகா வெட்கக்கேடு!
http://www.viduthalai.periyar.org.in/20101220/news16.html

தான் போட்ட கையொப்பத்தையே மறுத்த ஜெயலலிதா- ஊழல்பற்றிப் பேசலாமா? முதலமைச்சர் கலைஞர் கடிதம்

தன் கையொப் பத்தையே தான் போடவில்லை என்று மறுத்த ஜெயலலிதா ஊழலைப் பற்றிப் பேசத் தகுதி உடையவர்தானா என்ற வினாவை எழுப்பியுள்ளார் முதலமைச்சர் கலைஞர்.


முரசொலியில் கடிதமாக அவர் எழுதியிருப்பதாவது:

உடன்பிறப்பே,
ஸ்பெக்ட்ரம் பிரச்சினை குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக் கையில் மத்தியிலும், மாநிலத்திலும் அரசியல் பலம் வாய்ந்த பெரும்பா லோனோர் இந்த ஊழலின் பின்ன ணியிலும், இந்த ஊழலுக்குத் துணை யாகவும் செயல்பட்டிருக்கிறார்கள் என்று வழக்கம்போல நீட்டி முழக்கி அறிக்கை விட்டிருப்பதைப் பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது. ஊழலைப் பற்றி ஜெயலலிதா குற்றம் சாட்டி அறிக்கைவிட்டால் சிரிப்பு வராதா என்ன? அதிலும் மத்திய புல னாய்வுத் துறையின் விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணிக்கும் என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தான் வரவேற்பதாகவும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே சொல்லியிருக் கிறார்.

உச்சநீதிமன்றம் இந்த ஒரு வழக் கிலே மாத்திரமா தீர்ப்பு சொல்லி யிருக்கிறது. தமிழக அரசுக்குச் சொந்த மான டான்சி நிலத்தை முதல் அமைச்சர் பொறுப்பிலே இருந்த போது ஜெயலலிதா அடிமாட்டு விலைக்கு வாங்கியதைப் பற்றி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன? அந்தத் தீர்ப்பையும் ஜெயலலிதா வரவேற்றிருக்க வேண்டியதுதானே?


டான்சி வழக்கில் முக்கிய சில பகுதிகள் :-

அரசிடம் அனுமதி பெறப்பட்டதா?

பொதுத் துறைக்குச் சொந்தமான நிலங்கள் ஜெயலலிதா பங்குதாரராக உள்ள கம்பெனிகளுக்கு, அவர் முதல மைச்சராக பதவியிலே இருந்த காலத் தில் விற்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. டான்சி நிறுவனத்தின் விதிமுறைகளின்படி அதை விற்பனை செய்வதற்கு முன்பு அரசிடமிருந்து ஒப்புதல் பெற்றாக வேண்டும். அதுவரை விற்பனை முழுமை அடைந்ததாகாது. இந்த வழக்கைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு கம்பெனிகளை விற்க வேண் டியதற்கான அனுமதியினை முதல் குற்றவாளியின் (ஜெயலலிதா) தலை மையிலே நடைபெறும் அரசே வழங்க வேண்டிய நிலையில், அரசு தன் னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதால் அங்கே ஒரு அக்கறை மோதுதல் ஏற்படுகின்றது. இப்படிப்பட்ட இரு வேறு அக்கறை மோதுதல்கள் இருக்கும்பட்சத்தில், நியாயமான விற்பனை நடைமுறை களைக் குந்தகப்படுத்தக் கூடிய வாய்ப் புள்ள ஒருவருக்கு இந்த விற்பனை, சட்டப்படி தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். வழக்கு சம்பந்தப்பட்ட சொத்துக்களின் மதிப்பு குறித்து எங்களின் முடிவு எதுவாக இருந்த போதிலும், அதிலே ஜெயலலிதா விற்கு லாபம் இருந்ததா இல்லையா என்பதைவிட, முதல் அமைச்சரே வழக்கு சொத்துக்களை வாங்க யத்தனித்துவிட்ட நிலையில், அதிகார வர்க்கம் அளவுக்கு மீறி அதிலே ஆர்வம் காட்டி இந்த விற்பனையை சுமூகமாக முதலமைச்சர் ஜெயலலிதா விரும்பும் விலைக்கே முடித்திருக்கி றார்கள் என்பதை எங்களால் தெரிந்து கொள்ள முடிகிறது. எந்த நிலையி லும், ஜெயலலிதாவின் இந்தச் செயல் கள் நடத்தை விதிகளின் உட்பொரு ளுக்கு விரோதமானதாகும். நியாய மாக பேசவேண்டுமென்றால், அரசின் சிறு அதிகாரிகளுக்காக ஒரு சட்ட மும், முதலமைச்சருக்காக ஒரு சட்ட மும் இருக்க முடியுமா? இதுபோன்ற நிலைகளில், நன்னடத்தை விதி என்பது அருங்காட்சியகத்திலே வைக் கப்பட வேண்டிய வெறும் ஆடம்பரப் பொருள் மட்டும்தானா? அது கடைப் பிடிக்கப்பட வேண்டிய ஒன்று அல் லவா? இவைகள்தான் எங்களுடைய மனச் சாட்சியைத் துன்புறுத்துகிறது. முதல் குற்றவாளியான ஜெயலலிதா தான் இந்த வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக டான்சி நிலப் பத்திரத்திலே உள்ள, அவருடைய ஆடிட்டரும் அரசு அதி காரிகளும் ஏற்றுக்கொண்ட அவரு டைய கையெழுத்தையே இல்லை என்று மறுக்கக்கூடிய அளவிற்குச் சென்றிருக்கிறார்.

Further, criminal law is meant to deal with criminals ordinarily, while code of conduct is observed as gentlemen’s agreement.
Good ethical behaviour on the part of those who are in power is the hallmark of a good administration and people in public life must perform their duties in a spirit of public service rather than by assuming power to indulge in callous cupidity, regardless of self imposed discipline. Irrespective of the fact whether we reach the conclusion that A.1 is guilty of the offences with which she is charged or not, she must atone for the same by answering her conscience in the light of what we have stated not only by returning the property to TANSI unconditionally but also ponder over whether she had done the right thing in breaching the spirit of the Code of Conduct and giving rise to suspicion that rules and procedures were bent to acquire the public property for personal benefit, though trite to say that suspicion however strong cannot take place of legal proof in a criminal case and take steps to expiate herself.

வெட்கப்பட்டாரா ஜெயலலிதா?

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ஜெயலலிதா வரவேற்றாரா? அதற்காக வெட்கப்பட்டாரா? மனச் சாட்சிக்கு இடம் கொடுத்தாரா? அப் படிப்பட்டவர் தற்போது ஊழல்பற்றி அறிக்கைவிட தகுதி படைத்தவரா?

வருமானத்துக்கு அதிகமாக ஊழல் செய்து 66 கோடி ரூபாய்க்குச் சொத்து சேர்த்து, அதற்காகவே ஏழாண்டு காலமாக ஜெயலலிதா மீது வழக்கு நடைபெறுகிறதே; அந்த வழக்கிலே, நீதி பரிபாலன முறையின் புனிதத்தையும், அதன் மீது சாதாரண மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை யும் நிலைநாட்ட இந்த வழக்கு விசாரணையை கருநாடக மாநில நீதிமன்றத்திற்கு மாற்றுகிறேன் என்று உச்சநீதிமன்ற நீதியரசர்கள் எஸ்.என். வரியவா மற்றும் எச்.கே. சேமா ஆகியோர் 18.11.2003 அன்று தீர்ப்பு வழங்கினார்களே, அந்தத் தீர்ப்பைப் பெற்ற ஜெயலலிதா அந்தத் தீர்ப்புக்கு ஒத்துழைக்கும் வகையில் பெங்களூ ருவில் வழக்கு விசாரணையை விரை வில் முடிக்க ஒத்துழைப்பா கொடுக் கிறார்? எந்த அளவிற்கு அதனை தாம தப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு தாமதப்படுத்த முயற்சிக்கிறார். தற் போதுகூட அந்த வழக்கை தாமதப் படுத்த உச்சநீதிமன்றம்வரை ஜெய லலிதா மேல் முறையீடு செய்து, உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை தடைசெய்ய மறுத்து தீர்ப்பளித்துள் ளதே! அதுவும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தானே?

1993-94ஆம் ஆண்டுக்கான வரு மான வரி கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை என்று வருமான வரித் துறையே அவர்மீது வழக்கு தொடுத்து - அந்த வழக்கில் 24.2.2006 அன்று ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போதே, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.என். அகர் வால், ஏ.கே. மாத்துர் ஆகியோர் லுடிர (துயலயடயடவையய) யசந அயமபே ய அடிஉமநசல டிக வாந துரனஉயைட ஞசடிஉநளள. ழடிற டடிபே லடிர உய னசயப வாந யீசடிஉநநனபேள? என்று விமர் சனம் செய்தார்களே, அதை ஜெய லலிதாவே மறந்துவிடலாமா? உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்தினை ஜெய லலிதா மதித்தாரா? வரவேற்றாரா? அதுபற்றி அறிக்கைவிட்டாரா? ஜெய லலிதாவின் வீட்டைச் சோதனை யிட்ட போது கிடைத்த பொருள் களும், அதன் மதிப்பும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து ஏடு களிலும் ஒரு பட்டியலாகவே வெளி யிடப்பட்டது. அந்தப் பட்டியலில் குறிப்பிட்டவாறு -

ஜெயலலிதாவின் 86 வகையான நகைகள் மதிப்பு - 17 லட்சத்து 50 ஆயிரத்து 31 ரூபாய்.

சசிகலாவின் 62 வகையான நகை கள் மதிப்பு - 9 லட்சத்து 38 ஆயிரத்து 460 ரூபாய்.

ஜெயலலிதாவின் 26 வகையான நகைகள் - 19 லட்சத்து 30 ஆயிரத்து 852 ரூபாய்.

ஜெயலலிதாவின் 41 வகையான நகைகள் - 1 கோடியே 40 லட்சத்து 75 ஆயிரத்து 958 ரூபாய்.

ஜெயலலிதாவின் 394 வகையான நகைகள் - 3 கோடியே 12 லட்சத்து 67 ஆயிரத்து 725 ரூபாய்.

சசிகலாவின் 34 வகையான நகை கள் - 17 லட்சத்து 54 ஆயிரத்து 868 ரூபாய்.

1116 கிலோ எடையுள்ள வெள்ளிப் பாத்திரங்கள் - 48 லட்சத்து 80 ஆயி ரம் ரூபாய்.

இந்தியன் வங்கி, அபிராமபுரம் கிளையில் முதலீடு - ஒரு கோடி ரூபாய்.

சொகுசு பேருந்து எண் டி.என். 09-எப். 2575 - 32 இலட்சத்து 40 ஆயிரத்து 278 ரூபாய்.

91 கைக் கடிகாரம் - 6 இலட்சத்து 87 ஆயிரத்து 350 ரூபாய்.

7 விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் - 9 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்.

914 புதிய பட்டுச் சேலைகள் - 61 லட்சத்து 13 ஆயிரத்து 700 ரூபாய்.

6195 மற்ற புதிய சேலைகள் - 27 லட்சத்து 8 ஆயிரத்து 720 ரூபாய்.

2140 பழைய சேலைகள் மற்றும் துணிமணிகள் - 4 லட்சத்து 21 ஆயிரத்து 870 ரூபாய்.

389 ஜோடி காலணிகள் - 2 இலட்சத்து 902 ரூபாய்.

இவ்வளவு சொத்துக்களும் ஜெயலலிதாவுக்கு எப்படி கிடைத்தன? ஊழல் சொத்துக்கள்தானே?

நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் வெளி யிட்ட விவரப்படி எடுத்துக் கொண்டால் 1-7-1991 அன்று ஜெயலலிதாவின் சொத்துக்களின் மதிப்பீடு 2 கோடியே ஒரு லட்சத்து 83 ஆயிரம் ரூபாய். 1991 ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு மே திங்கள் வரையில் ஜெயலலிதாதான் தமிழகத்தின் முதல் அமைச்சர். 30.4.1996 அன்று ஜெயலலிதாவின் சொத்துக்களின் மதிப்பு 66 கோடியே 44 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய். எப்படி வந்தது இந்த 66 கோடி ரூபாய் சொத்துக்கள்? இதற்காகத்தானே இப்போது பெங்களூருவில் சிறப்பு நீதிமன்றத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி வழக்கு நடைபெறுகிறது!

சாட்சிகள் பல்டி!

சொத்துக் குவிப்பு வழக்கினை வேறு மாநிலத்துக்கு - பெங்களூருக்கு மாற்றி தீர்ப்பு வழங்கியபோது உச்ச நீதிமன்றம் தெரிவித்தவை வருமாறு:- 1. ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவியேற்ற பிறகு பல சாட்சிகள், தாங்கள் ஏற்கனவே கொடுத் திருந்த வாக்கு மூலத்திலிருந்து பல்டி அடித்துள்ளனர்

2. சுதந்திரமான நியாயமான முறையில் வழக்கு விசாரணை நடைபெறாவிட்டால் நீதி வழங்கும் முறையில் மக்களின் நம்பிக்கை சீர்குலைந்து விடும்

3. இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற விதத்தைப் பார்க்கும்போது, நீதி தோல்வி அடைந்து விடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது 4. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜெயலலிதா விசாரணை நீதிமன்றத்தில், நீதிமன்றம் கேள்வி கேட்கும்போது சென்னையில் இருந்துகொண்டே ஆஜராகவில்லை

5. குற்றஞ்சாற்றப்பட்டவர் வெகுதூரத்தில் இருந்தால் மட்டுமே கேள்விப் பட்டியலைப் பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் ஒரேயொரு வழக்கில் விதிவிலக்காகக் கொண்டுவந்த முறையை - இந்த விவகாரத்தில் கடைப்பிடித்ததை ஏற்க இயலாது

6. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இந்த வழக்கில் திரும்ப அழைக்கப்பட்ட 76 அரசு தரப்பு சாட்சிகளில் 64 பேர் பல்டி அடித்துள்ளனர். அவர்கள் மீது அரசு வழக்கறிஞர் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என்பதும் கண்டனத்திற்குரியது

7. நீதி பரிபாலன முறையின் புனிதத்தையும் அதன் மீது சாதாரண மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் நிலைநாட்ட இந்த வழக்கு விசாரணை கருநாடக மாநில நீதிமன்றத்துக்கு மாற்றப்படுகிறது.

போதுமான ஆதாரம் உள்ளது

இந்தத் தீர்ப்பினை 18.11.2003 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.என். வரியவா, எச்.கே. சேமா ஆகியோர் அளித்ததோடு, அதனை முடிக்கும்போது, தி.மு.க. தொடர்ந்துள்ள வழக்கில் போதுமான முதல் நிலை ஆதாரங்கள் இருப்பதாகவே நீதிமன்றம் கருதுகின்றபடியால் இவ்வழக்கை தமிழ்நாட்டில் நடத்தினால் நியாயம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. எனவே இவ்வழக்கு மாற்றப்பட வேண்டிய வழக்கேயாகும். நீதி வழங்கப்படுவது முக்கியமெனினும், நீதி வழங்கப்படுவதாக மக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவதும் நீதிமன் றங்களின் கடமையாகும்; எனவே இந்த வழக்கு மாறுதல் செய்யப்படுகிறது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, கர்நாடக அரசோடு கலந்து பேசி, இந்த வழக்கிற்காக ஒரு சிறப்பு நீதி மன்றத்தை ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஆறு வார காலத்திற்குள் பெங்களூருவில் அமைக்க வேண்டும். குற்றவியல் வழக்குகளில் பயிற்சி பெற்ற முதுநிலை வழக்கறிஞர் ஒருவரை இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமிப்பதுடன், அவருக்கு இளநிலை வழக்கறிஞர் ஒருவரும் அமர்த்தப் படவேண்டும். வழக்கறிஞர் ஊதியம் உள்பட, கட்டணங்கள் அனைத்தையும் கர்நாடக அரசு செலுத்த வேண்டும்; பிறகு தமிழ்நாடு அரசு அதனை கருநாடக அரசுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும். தலைமை நீதிபதியினால் நியமிக்கப் படும் அரசு வழக்கறிஞர் ஏற்கனவே பிறழ் சாட்சியம் அளித்த- பல்டி அடித்த அரசுத் தரப்பு சாட்சிகளை (ழடிளவடைந) மீண்டும் அழைத்து மறு விசாரணை செய்வதுடன், வேண்டுமென்றே மாற்றி சாட்சியமளித்த அந்தச் சாட்சிகள் மீது குற்றவியல் நடவடிக்கைகளை தனியே எடுக்கவும் அறிவுறுத்தப்படுகின்றது. சாட்சிகளுக்கு மிரட்டுதல் இருப்பதாக கருதும் பட்சத்தில், அவர்களுக்கு கருநாடக அரசு போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் கேள்வி எழுப்பப்படும்போது நீதிமன்றத்தில் தவறாது ஆஜராவதுடன், இவ்வழக்கை தினமும் (னுயடைல க்ஷயளளை) எடுத்து விசாரிக்க வேண்டும். வழக்கு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் தமிழ்நாடு அரசு உடனடியாக சிறப்பு நீதிமன்றத் திற்கு அனுப்பி வைக்க வேண்டும். என்று கூறியிருக்கிறார்கள்.

இவ்வளவு புகழுக்கும், பெருமைக்கும் உரிய ஜெயலலிதா ஊழல் பற்றி அறிக்கை விடலாமா?

ஜெயலலிதா ஊழலைப்பற்றி கேள்வி கேட்கலாமா?

பெங்களூரு சிறப்பு நீதி மன்றத்தில் தற்போது நடைபெறும் சாட்சிகளின் விசாரணை முடிந்து என்ன தீர்ப்பு அளிக்கப்படவிருக்கிறதோ என்று காத்திருக்கும் நிலையிலே உள்ள ஜெயலலிதா ஊழலைப் பற்றி அறிக்கை விடலாமா? அதைப் படிப்பவர்கள் சிரிக்க மாட்டார்களா? ஊழல் என்றால் என்ன விலை என்று கேட்கக்கூடிய அளவிற்கு தன்னை உத்தமியாகக் கருதிக் கொண்டு, ஜெயலலிதா ஊழலைப் பற்றி கேள்வி கேட்கலாமா?

நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைத்தே தீர வேண்டுமென்று நாடாளுமன்றத்தையே நடத்த விடாமல் செய்த பெரிய எதிர்க்கட்சிகள் எல்லாம் இப்போது அதைப் பற்றி வேகமாகக் குரல் கொடுக்க வில்லையே; அது ஏன்? ஏன்?

இவ்வாறு முரசொலியில் இன்று முதலமைச்சர் கலைஞர் எழுதியுள்ளார்.
http://www.viduthalai.periyar.org.in/20101220/news03.html

விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்: ஆ.ராசா


சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறேன் என, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக ஆ.ராசாவுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியதாக செய்தி வெளியானது. இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மருத்தவ பரிசோதனைக்கு பிறகு வீடு திரும்பினார்.

அப்போது சி.பி.ஐ. சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறதே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஆ.ராசா,

ஸ்பெக்ட்ரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் விசாரணையை கண்டு ஓடி ஒளியப்போவதில்லை. சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறேன்.


நான் ஒரு வழக்கறிஞர் என்பதால் எனக்கு சட்டங்கள் தெரியும். எந்த சட்ட விதிமுறைகளையும் நான் புறக்கணிக்க மாட்டேன். நான் முன் ஜாமீன் எதுவும் கோரப்போவதில்லை. ஏனென்றால் நான் எந்த குற்றமும் செய்யவில்லை.

வீணாக நீங்கள் யாரும் குழப்பிக்கொள்ள வேண்டாம். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நான் பயப்படுவதாக சில ஊடகங்கள் எனக்கு எதிராக மக்கள் மத்தியில் செய்தி வெளியிட்டு வருகின்றன. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றார்.
http://nakkheeran.in/users/frmNews.aspx?N=45510

Sunday, December 19, 2010

தந்தை பெரியாரின் இறுதிப்பேருரையாம் மரண சாசனத்திலிருந்து

இன்றைய தினம் சமுதாய இழிவு ஒழிப்பு சம்பந்தமாக, சென்னையில் நடைபெற்ற மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கவே இந்தப் பொதுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்கள். நான் இந்தத் தியாகராயர் நகருக்குக வந்து சுமார் 10 ஆண்டு களுக்கு மேலாகிறது. இதன் காரணமாக எனது புதிய கருத்துகள் இந்தப் பகுதி மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லாமலும் போயிருக்கலாம். நான் பேச்சுத் துவக்குவதற்கு முன்பாக நண்பர் வீரமணி அவர்கள் கடவுள் மறுப்பு வாசகத்தைக் கூறினார்கள். கடவுள் இல்லை - கடவுள் இல்லவே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் -கடவுளை பரப்பியவன் அயோக்கியன் - கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி ! இதன் தன்மைகளைப்பிறகு விளக்கு கிறேன்.

பழக்கத்தில் நம்மை ஈன ஜாதி, கோயிலுக்குள் வர வேண்டாம்; கல்லைத் தொட்டால் சாமி தீட்டாகிவிடும் என்கிறான்; சூத்திரனுக்குத் திருமணம் கிடையாது என்கிறான்; சுயராஜ்யம் என்கிறான்; அந்த சுயராஜ்யத் திலும் நாம் சூத்திர்கள், தேவடியாள் மக்கள் என்கிறான்.

இந்து என்றால் என்ன?

எதன்படி என்றால் சாஸ்திரப்படி, மதப்படி மட்டுமல்லாமல், இன்றைய அரசியல் சட்டப்படியும்கூட. இந்தச் சாஸ்திரம் என்றைக்கு எழுதினான்? இதுபோல் அயோக்கியத்தனம் உலகில் உண்டா? என்றைக்கோ, எவனோ பேர் தெரியாத அனாமதேயம், அவன் சொல்லுவான் வசிஷ்டன், நாரதன், எக்கியவல்கியன், அவன் இவன் எழுதினான் என்றெல்லாம் சொல்லு வான். இவன்களுக்கு வயது என்ன? நாரதன் 5 கோடி வருஷத்துக்கு மேல் இருந்திருக்கிறான். ஒரு கர்ப்பம் என்றால் 5 கோடி, 10 கோடி வருடம் என்பார்கள். 2,3 கர்ப்பம் முன்பு இருந்திருக்கிறான் நாரதன். அப்படி ஒருத்தன் இருந்தானா? இருக்கமுடியுமா? அதை வைத்துத் தீர்ப்பு சொல்லுகிறானே கோர்ட்டிலே; இதனுடைய அர்த்தம் என்ன? ஆளுகிறவர்கள் அயோக்கியர்கள், ஆளப்படுகிறவர்கள் இத்தனை மானங்கெட்ட பக்தர்கள். இதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும்?

வீரமணி இப்போது சொன்னாரே, இந்து லா என்கிறானே; யார் இந்து? இந்து என்றால் என்ன அர்த்தம்? என்றைக்கு முதற்கொண்டு இந்து வந்தான்? எவ்வளவு இலக்கியம் இருக்கிறது. ராமாயணம், பாரதம், விஷ்ணு புராணம், கந்த புராணம் என்று பார்ப்பானுக்கு எவ்வளவோ இலக்கியங்கள் இருக்கின்றன. நம்ம புலவர்களுக்கும் ஏராளமாக இருக்கிறது; பஞ்சகாவியம், அய்ந்து இலக்கணம், அது இது என்று ஏராளமாக இருக்கிறது. எதிலாவது இந்து என்ற வார்த்தை இருக்கிறதா? எந்தப் புத்தகத்திலாவது இருக்கிறதா? இந்து என்பவன் எப்படி வந்தான் என்பது அவர்கள் சொல்லுவதிலே அசிங்கமாக இருக்குதே. சிந்துநதி காரணமாகச் சிந்துவாகி பிறகு இந்து என்ற அழைக் கப்பட்டான் என்கிறான். சிந்து நதிக்கும் நமக்கு என்ன சம்பந்தம்? ஆரியன் வந்தபோதுதானே சிந்துநதி இங்கே வந்தது?

சிந்திக்க நாதி இல்லை!

இந்து என்றால், இரண்டு ஜாதி. அதிலே ஒன்று பார்ப்பான்; மற்றவன் சூத்திரன் . பார்ப்பான் என்றால் மேல் ஜாதி; சூத்திரன் என்றால் கீழ் ஜாதி. சூத்திரன் மனைவி என்றால், பார்ப்பானுக்கு வைப்பாட்டி. இது சட்டத்திலே, சாத்திரத்திலே இருக்கிறது என்று சொன்னால், பிறகு நாம் விடியறது தான் எப்போது? ஒரு மனிதனிடம், ஏண்டா உன் பொண்டாட்டி இப்படி.... என்று சொன்னால், கத்தியை எடுத்துக்கிறான். இத்தனை பேரையும் தேவடியாள் மகன் என்று சொன்னால் ஒருவனுக்கும் மானம் இல்லை என்றால், என்ன அர்த்தம்?

நமக்கு மானமிருந்தால், இந்த நாட்டில் பார்ப்பாரக் குஞ்சு இருக்குமா? எவனாவது பூணூல் போட்டுக் கொண்டு நம்முன் வருவானா? பூணூல் போட்டிருந்தால் என்ன அர்த்தம்? போடு செருப்பாலே, அப்படி என்று கிளம்ப மாட்டானா? உன்னை இன்னொருத்தன் பெண்டாட்டி என்ற சொன்னால், எவ்வளவு ஆத்திரம் வரும்? அதைவிட மேலாக அல்லவா சூத்திரன் என்றால் ஆத்திரம் வரும்? இதைப்பற்றிச் சிந்திக்கவே ஆள் இல்லையே; நாதி இல்லையே!

உலகம் எவ்வளவு முன்னேறுகிறது?

பெரிய சமுதாயம், எவ்வளவு முன்னுக்கு வர வேண்டியவர்கள்? நாதியற்ற காட்டுமிராண்டியாக அல்லவா வாழுகிறோம்? வெள்ளைக்காரளைப் பாரய்யா; எவ்வளவு முன்னுக்கு வந்துவிட்டான்! மிகவும் காட்டு மிராண்டியாக இருந்தவர்கள் வெள்ளைக்காரர்கள். இன்றைய தினம் , ஆகாயத்திற்கு, சந்திரனுக்கு அல்லவா பறக்கிறார்கள்?

அமெரிக்காவைப் பார்!

அமெரிக்காவில் ஆண் இந்திரியம் கொண்டுவந்து சீனாவிலே போய் பெண் இந்திரியம் கொண்டுவந்து இரண்டையும் சேர்த்துப் பிள்ளை உண்டாக்குகிறானே. இப்ப நேற்று, முந்தாநாள் வந்த விஷயத்திலே இரண்டு பேர் இந்திரியத்தையும் டப்பியில் வாங்கி வைத்து 10 வருடம் கழித்துப் பிள்ளையை உண்டாக்கலாம். இங்கிருந்து அமெரிக்காவுக்கு டெலிபோனில் பேசுகிறோம். நம்ம முட்டாள் பசங்களுக்கு 100, 200 கடவுள்! ஒரு காரியமும் செய்யமுடியவில்லை இவன்களாலே! இதற்கு எவ்வளவு செலவு? கல்யாணம், கருமாதி, உற்சவம் என்று எவ்வளவு செலவு? வேளைக்கு வேளை சோறு, உற்சவம்! அரசாங்கம் வரி போடுகிறது என்று சொல்லுகிறானே தவிர, இதை எவன் எதிர்க்கிறான்?

கோயிலுக்குப் போகிறான், குளிக்கிறான், முழுகு கிறான். கடவுள் சாமிகிட்ட போன உடனே டக் என்ற வெளியே நிற்கிறானே! ஏண்டா வெளியிலே நிற்கிறே என்றால், சூத்திரன் உள்ளே போகலாமா என்கிறான். எப்போ? 1973 -இல்! நமக்கு ஒரு நாடாம்; நாம் ஒரு சமுதாய மாம். இதற்கு யார் பாடுபடுகிறார்கள்? நாம் மூணே முக்கால் பேரைத் தவிர யார் இதைப் பேசுகிறார்கள்?

இந்தியக் கம்யூனிஸ்ட்கள்!

ரஷ்யாவிலே கம்யூனிஸ்ட் இருக்கிறான் என்றால் கோயில்களை எல்லாம் இடித்தான்; பாதிரிகளை எல்லாம் வெட்டினான். இங்கே இருக்கும் கம்யூனிஸ்ட் என்ன செய்கிறான்? பொறுக்கித் தின்கிறான்! மனிதனைப் பற்றி எவனும் பேசவில்லையே. இவ்வளவு மாநாடு நடத்தினோம்! எவனய்யா எங்களை ஆதரித்தான்? பயப்படுகிறானே, ஓட்டுப் போய்விடும் என்று!

இருப்பது கஷ்டமல்ல; சாவதே கஷ்டம்!

ஆகவே, தோழர்களே! முதலில் நமக்கு இருக்கிற இழிவு நீங்க வேண்டும். மனிதனுக்கு இருக்கிற ஜாதி உரிமை என்ன தெரியுமா? ஒவ்வொரு மனிதனும் குறைந்தது 500 வருடம் இருக்கலாம். இப்போது சராசரி 52 வயதுதான். வெள்ளைக்காரன் வந்ததனாலே இந்த அளவாவது இருக்கிறோம். அவன் வருவதற்கு முன்பு இங்கு சராசரி வயது 10கூட இல்லை; 7 வயதுதான். அவன் வந்த பிறகு வைத்தியம் சுகாதாரம் எல்லாம்.

எல்லாம் நமக்கு அவன் ஏற்றிய பிறகுதானே இவ்வளவு உயர்ந்தது. ரஷ்யாவிலே கிட்டத்தட்ட 100 வயது சராசரியாக வாழுகிறான். நாமும் இன்னும் 10 வருஷத்தில் 75 வயதுவரை வாழ்வோம். இப்படி நாளாக, நாளாக 500 வயதுவரை வாழ வேண்டி வரும்! இருப்பது கஷ்டமல்ல; சாவதுதான் கஷ்டம்! அவ்வளவு அற்புத அதிசயங்களை எல்லாம் கண்டுபிடித்திருக்கிறான்.

சுயமரியாதை இயக்கம் இல்லாவிட்டால்

நாம் வளர்ச்சி அடையாததற்குக் காரணம், நாம் தேவடியாள் மகனாக இருப்பதால்தான். நமக்கு, நமது சுயமரியாதை இயக்கம் வராவிட்டால் படிப்பேது? சொல்லுங்கள்! சுயமரியாதை இயக்கம் வராவிட்டால், 100-க்கு 10 கூட படித்திருக்கமாட்டார்களே! சுயமரியாதை இயக்கம் வந்ததற்குப் பிறகுதானே இவ்வளவு! சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை என்ன தெரியுமா? கடவுள் ஒழியவேண்டும்; காந்தி ஒழியவேண்டும்; பார்ப்பான் ஒழிய வேண்டும். அன்று முதல் இன்று வரை அதே கொள்கைதான்.

காந்தியாரை பார்ப்பான் விட்டுவைத்தானா?

காந்தி நம்ம கொள்கைப் பக்கம் திரும்பினார். காங்கிரசுக்கும், கடவுளுக்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லை என்று சொன்னார். உடனே காந்தியைக் கொன்று போட்டான், சொன்ன 30 நாளிலே! இவரும் ராமசாமி ஆகிவிட்டார்; இவன் இந்தியாவிலே பெரியஆள்; இவனை விட்டுவைக்கக் கூடாது என்று உடனே கொன்று போட்டான்.

செருப்பால் அடித்தோமே கடவுளை!

கடவுள் கதையும் சிரிப்பாய்ச் சிரிக்குது. அதுதான் வீரமணி சொன்னாரே; செருப்பால் அடித்தார்களே கடவுளை! என்ன ஆகியது? செருப்பாலே அடித்தால் ஓட்டுப் போடமாட்டான் என்று காமராஜர் முதற்கொண்டு பிரசாரம் செய்தார். தி.மு.க. 183 வந்துவிட்டதே! காங்கிரசு, காமராசர், கடவுள், வெங்காயம் எல்லாம் சேர்ந்து 20பேர்கூட வரவில்லையே. சாமியைத் திட்டுகிறோம் என்று குறை சொல்லுகிறார்களே தவிர, சாமியை செருப்பாலடித்தவர்கள் 200 பேர் வந்து விட்டார்களே!

நாம் பள்ளத்தில் கிடக்கிறோம்!

ஆனதனால் மக்கள் அறிவு பெற்று வருகிறார்கள்; நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். விஷயங்களை எடுத்துச் சொல்லவேண்டும். தெரியாது அனேகம் பேருக்கு. இப்போது நாம் முன்னேற்றம் அடைய வேண்டும். மேலே வரவேண்டும். அப்புறம் இன்னும் மேலே போகலாம். இப்போது நாம் பள்ளத்தில் கிடக்கிறோம். 4ஆவது ஜாதி, 5ஆவது ஜாதி, தீண்டப்படாத ஜாதி, பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் என்றல்லவா நாம் இருக்கிறோம்? இது அல்லவா மாற வேண்டும்? இது மாறாமல் மேலே போக முடியுமா? இதை மாற்றிவிட்டு அல்லவா மேலே போகவேண்டும்? நாங்கள் தொடர்ந்து ஏதாவது செய்துகொண்டு வருகிறோம்; எங்களால்தான் முடிய வேண்டும என்று இருக்கிறது நிலைமை! வேறு எந்தக் கட்சிக்காரருக்கும் கவலை இல்லை! எலக்ஷனிலே ஓட்டுப் போய்விடும் என்று பயப்படுகிறார்கள். ஆகவே நாம் மாநாடு போட்டோம்,. அதற்குக் காரணம் கூட வீரமணி சொன்னாரே!

சட்டத்தில் தந்திரம்!

தீண்டாமை இல்லை என்று சட்டம் செய்துபோட்டான். எல்லாவற்றிலும் தீண்டாமை ஒழிந்துவிட்டது என்ற சொல்லிவிட்டு மதத்திற்கு மட்டும் தீண்டாமை என்று நிபந்தனை போட்டுவிட்டான். நாம் கர்ப்பகிரகத்திற்குள் போகக்கூடாது என்று சட்டம் செய்தான். எனவேதான். மாற்றவேண்டும் என்கிற நிலைமைக்கு வந்துவிட்டோம். சட்டத்திலும், சாஸ்திரத்திலும் இருப்பதாலே முதலில் அதை மாற்ற வேண்டும் என்ற முடிவு செய்துவிட்டோம்.

ஆட்சியை ஒழித்தாக வேண்டும்!

சட்டத்திலே இருப்பது ஒழியவேண்டுமானால், சட்டத்தை ஒழித்தால்தான் உண்டு; சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்றால் ஆட்சியை ஒழித்தால்தான் உண்டு! அந்த அளவுக்கு நாம் பக்குவமாக வேண்டும். ஆனால், அவன் ஆட்சி ஒழியும்படி இல்லாமல் பாதுகாத்துக் கொண்டான். நாடு கூட்டாக இருந்தால் எல்லாம் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்று நாட்டை 14,15 நாடாகப் பிரித்தான். அந்தந்த நாடு மற்ற நாட்டோடு சம்பந்தம் இல்லை என்றான். 16 மாநிலத்திலே மக்கள் இருக்கிறார்கள்.அவனுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லையே! மலையாளம் , தெலுங்கு, இந்தி வங்காளி என்று தனித்தனி மாநிலங்கள்.

அரிய முயற்சி தேவை!

தமிழ்நாட்டில் உள்ள நாலரைக் கோடி மக்களில் துலுக்கன், கிறிஸ்தவனைத் தவிர, மூன்று கோடி மக்கள் சூத்திரன்தானே? முஸ்லிம், கிறிஸ்துவன் எல்லாம் சேர்த்தால் 10 லட்சம் இருக்கும். ஆகவே, இதை மாற்றியாக வேண்டும்; பெரிய விஷயந்தான். பெரிய முயற்சி செய்ய வேண்டும்! பெரிய முயற்சி செய்ய வேண்டும்!!

மனிதன் இருக்க வேண்டும்!

ஒரு அரசாங்கம் நடக்க வேண்டுமானால் அரசியல் சட்டம் வேண்டும்; ஒத்துக்கொள்கிறேன். அதற்காக அரசாங்கம் நடக்க வேண்டும் என்பதற்காகப் பார்ப்பான் இருக்க வேண்டுமா? அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதற்காகச் சூத்திரன் இருக்க வேண்டுமா? மனிதன் தானே இருக்க வேண்டும்? மற்ற நாட்டிலேயும்தான் அரசாங்கம் நடக்கிறது. அங்கு பார்ப்பான், சூத்திரன் இருக்கிறானா? ஆகவேதான், அவன் வைத்திருக்கிற பாதுகாப்பு எல்லாம் எல்லோரும் ஒன்று சேரக்கூடாது என்பது, பார்ப்பானுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதாற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடு. நாம்தான் மாற்ற வேண்டும் என்கிறோம்.

மாறு அல்லது மாண்டு போ!

நாம் நடத்திய மாநாட்டுக்கு வேறு கட்சிக்காரர்கள் ஒருவரும் வரவில்லையே; ஓர் உதவியும் செய்ய வில்லையே; சி. அய். டி. யும் வேறு கட்சிக்காரன் வருகிறானா என்று கவனித்து வந்தான். எனவே பயந்து கொண்டு ஒருவரும் வரவில்லை. இழிவுக்கு ஆளான வன் எல்லாம் வரவேண்டுமே! வந்து உதவி செய்ய வேண்டுமே! மந்திரிகள் வரவேண்டுமே! ஆகவே விஷயம் முக்கியமானது, மாறியே ஆகவேண்டும்; மாறாவிட்டால் சாகவேண்டும்!
http://www.viduthalai.periyar.org.in/20101219/news01.html

அய்யப்பர்களின் ஒழுக்கம்!

பக்திக்கும், ஒழுக்கத்திற்கும் சம்பந்தா சம்பந்தம் கிடையவே கிடையாது. பக்திக்கும், அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று.

கடவுள்பக்தி இருந்தால்தான் பாவம் செய்யப் பயப்படுவார்கள்.அது இல்லாவிட்டால் அவிழ்த்து விட்ட மாதிரி மக்கள் குற்றங்களில் ஈடுபட்டு விடுவார்கள் என்று சமாதானம் கூறுவதுண்டு.

ஆனால் நடைமுறை உலகம் எப்படி இருக்கிறது? அன்றாடம் ஏடுகளில் வெளிவரும் செய்திகள் என்ன?

நடுநிலையோடு சிந்திப்பவர்கள் எந்த முடிவுக்கு வரவேண்டும்?

குளித்தலையில் மூக்கு முட்டக் குடித்துவிட்டு, வேட்டி அவிழ்ந்தது கூடத் தெரியாமல் சுருண்டு விழுந்து கிடந்த அய்யப்ப பக்தரை, திராவிடர் கழகத் தோழர்கள், தண்ணீரை ஊற்றி, போதையைத் தெளிய வைத்து வீட்டுக்கு அனுப்பினர் என்ற செய்தி விடுதலையில் வெளிவந்தது நினைவில் இருக்கலாம்.

நேற்று ஒரு செய்தி பரவலாக ஏடுகளில் வெளி வந்தது. தூத்துக்குடியில் அய்யப்ப பக்தர்கள் 12பேர் அன்னதானம் வழங்கப்போவதாகக் கடைக்குக் கடை சென்று நன்கொடை திரட்டியுள்ளளனர். சாமி விஷயம் என்றால்தான் மூட மக்கள் அள்ளி அள்ளிக் கொடுப்பார்களே!

இவர்கள் நடத்தையில் சந்தேகப்பட்ட பொதுமக்கள் காவல்துறையில் பிடித்துக் கொடுத்துள்ளனர். இவர் கள் புதுக்கோட்டை மாவட்டம் குலைவாழைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது.

இதே ஊரைச் சேர்ந்த 19 பேர் அய்யப்பன் விரத உடையில் இருவர் இருவராகப் பிரிந்து ஊரில் வசூல் செய்து, அந்தப் பணத்தைக் கொண்டு தங்கும் விடுதி யில் அறை எடுத்துக் கொண்டு சூதாட்டம் நடத்தி யுள்ளனர். காவல் துறையினரின் சோதனையின்போது வசமாகச் சிக்கிக் கொண்டனர். இதற்கு முன்பும் இதே பக்தி போர்வையில் இவர்கள் இறங்கி மக்களிடம் வசூலித்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

பக்தி விளைவிக்கும் யோக்கியதை ஒழுக்கம் எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்கு இதைவிட ஓர் எடுத்துக் காட்டும் தேவையாக இருக்காது. பக்தி வந்தால் ஒழுக்கம் வளரும் தவறு செய்யப் பயப்படுவார்கள் என்று சொல்லுவதெல்லாம் அப்பட்டமான மாய்மாலம் என்பதையும் பொதுமக்கள் உணரவேண்டும்.

எல்லா மதங்களிலுமே பாவ மன்னிப்பு, பிராயச் சித்தம், தொழுகை என்று வைத்துக் கொண்டு தானிருக்கின்றன. செய்த பாவங்களுக்கு எளிதாகப் பரிகாரம் வைத்திருந்தால், கொள்ளை லாபம், குறைந்த முதலீடு என்ற கண்ணோட்டத்தில்தானே மக்களின் சிந்தனையும் செயல்பாடும் அமையும்.

12 வருடங்கள் செய்த பாவம் மகாமகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஒரு முழுக்குப் போட்டால், அத்தருணமே போகும், புண்ணியம் கிடைக் கும் என்றால் தவறு செய்ய யார்தான் தயங்குவார்கள்?

12 வருடங்களில் எத்தனை எத்தனைக் குற்றங்களை ஒரு மனிதன் செய்திருப்பான்? அவனுக்குத் தண்டனை ஏதுமின்றி, ஒரு முழுக்கு மூலம் தப்பிவிடுவான் என்று கூறுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்! அதனால்தான் உலகத் தலைவர் தந்தை பெரியார் கூறினார் - பக்தி தனிச் சொத்து, ஒழுக்கம் பொதுச் சொத்து என்றார். கடவுளை மற- மனிதனை நினை என்றார்.

ஆனால், காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதி என்ன கூறுகிறார்?

நல்ல ஒழுக்கம் இருந்தால் போதுமென்றும், கடவுள் அவசியமில்லை என்றும் சிலர் கூறுகின்றனர். இது தவறான கருத்து. கடவுள் அருள் இல்லையானால் ஒரு தனி நபருக்கோ, நாட்டுக்கோ விமோசனம் இல்லை. (கல்கி, 8.4.1958)

சங்கராச்சாரியார் சொல்லுகின்ற அந்தக் கடவுள் கள் கூட யோக்கியமாகப் படைக்கப்பட்டுள்ளனவா? அவர் எந்த மதத்துக்குத் தலைவர் என்று கருதப்படு கிறாரோ, அந்த இந்து மதத்தில் உள்ள எந்தக் கடவுளிடத்திலாவது ஒழுக்கம் உண்டா? சண்டை போடாத கடவுள் உண்டா? கொலை செய்யாத கடவுள் உண்டா? கற்பழிக்காத கடவுள் உண்டா?

படைத்தல் கடவுள் பிரம்மா என்று சொல்லுகிறார் களே, அவன் யோக்கியதை என்ன? பெற்ற மகள் சரஸ் வதியையே பெண்டாட்டியாகக் கொண்டவன்தானே! இதற்கு மேலாகவா எடுத்துச் சொல்லி விளங்க வைக்க வேண்டும்?

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி யின் யோக்கியதை என்ன? அவர் எந்தக் குற்றத்தில் சிக்கி இப்பொழுது ஜாமீனில் நடமாடுகிறார்? அவர் ஏன் சிறைக்குச் செல்ல நேர்ந்தது?

பக்தர்கள் ஒரே ஒரு நொடி இவற்றையெல்லாம் கண்முன் நிறுத்திக் கருத்தோடு சிந்தித்தால், மதமும் அது காட்டும் வழியும் மக்களுக்கு ஆபத்தானது என்பதை விளங்கிக் கொள்ளலாம் அல்லவா!
http://www.viduthalai.periyar.org.in/20101218/news04.html

ஸ்பெக்ட்ரம் இழப்பு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடியா? பெரிய பலூனில் காற்று இறங்குது?

சென்னையில் நேற்று (18.12.2010) டெல்லி பல்கிவாலா பவுண்டேஷனும், (மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்) சென்னை வர்த்தக தொழில் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய ஒரு கூட்டத்தில், வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, தகவல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி (பார்ப்பனர்) அவர்கள் பேசியுள்ளார்.

2001 முதலே சி.பி.அய். 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுவிட்ட நிலையில், ஊழல் களின் உண்மை முக்கியத்துவம், என்ற தலைப்பில் மேற்படி கூட்டத்தில் உரையாற்றினார் அருண் ஷோரி. பிரதமர் மன்மோகன் சிங்கை குற்றம் சுமத்திப் பேசியதோடு, ஆ.இராசா வையும் குற்றம் சுமத்திப் பேசினார்.

அதில் மீடியாக்களுக்கு நான் அறிவுறுத்த விரும்புகிறேன்; நீங்களே (ஊடகங்களே) ஒரு கற்பனையான தொகையான 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்று எழுதி அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அநேகமாக இத்தொகை 30 ஆயிரம் கோடிதான் இருக்கக் கூடும் என்றார்!

1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் பலூனில் எவ்வளவு காற்று இறங்கி விட்டது பார்த்தீர்களா?
(ஆதாரம் 19.12.2010 இந்து நாளேடு)
பார்ப்பன ஏடுகளின் பொய்ப் பிரச்சாரத்திரையை அருண்ஷோரி அய்யர்களே கிழிக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டு விட்டது பார்த்தீர்களா?

இதன்படி, (அருண்ஷோரி கூற்றுப் படி) 1 லட்சத்து 46 ஆயிரம் கோடி திடீரென்று மறைந்துவிட்டதே!

இதுதான் CAG என்ற மத்திய கணக்குத் தணிக்கையாளரின் துல்லி யக் கணக்குக்கு நற்சான்றிதழா?

இது மட்டுமல்ல, ஏற்கனவே, சி.பி.அய் தாக்கல் செய்துள்ள முதல் அறிக்கையில் 2009இல் குறிப்பிடப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?வெறும் 22,000 கோடிதான்!



இதன்படி, அவாள் பிரச்சார 1,76,000 கோடி பலூனில் இறங்கிய தொகை 1 லட்சத்து 54,000 கோடி எப்படி திடீரென போயிற்று?

இதிலிருந்து தெரியும் உண்மை- இந்தப் பொய்ப் பிரச்சாரத் தொகை தான் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்பதுதானே!

இதைத்தான் CAG என்ற பெரிய தணிக்கை அதிகாரி-இழப்புத் தொகை விவாதித்து முடிவுக்கு வரவேண்டும் (Debatable) என்று முடித்தார் போலும்!

எங்காவது கணக்கில் கட்டப் பஞ்சாயத்து உண்டா? உண்மை களைப் பலியாக்குகிற ஒருவர், பழிபோட்டு மக்கள் விழியை மறைக்க முயலுகிறார். ஏமாறாதீர்! ஏமாற்றாதீர்!!

(இதைத் துண்டறிக்கையாகவும் அடித்து மக்களுக்கு வழங்குங்கள்

-ஆசிரியர்)
http://www.viduthalai.periyar.org.in/20101219/news07.html