கவிஞர் வாலி அவர்கள் ஆனந்தவிகடன் இதழில் ஒரு தொடரை எழுதிக் கொண்டு வருகிறார். எளிய தமிழில் சுவையாகவே இருக்கிறது. அவர் ஓர் ஆன்மிக வாதி என்பது அவரது தோற்றத்தைப் பார்த்தாலே எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வார இதழில் இரண்டு நாத்திகர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஒருவர் - அவரது ஊர்க் காரர் - இளமைக்காலந் தொட்டுப் பழகி வந்த நண்பர் நடராஜசுந்தரம்.
சிறீரங்கம் கழுதை மண்டபத்தில் ஒரு நிகழ்ச்சி. ஒரு நாள் வாலியும் அவரது நண்பரும் பேசிக் கொண்டிருந்த போது, வாலியின் பின்னால் வந்த கோதுமை நாகத்தை அடித்துக் கொன்று வாலியை மரணத்திலிருந்து நடராஜசுந்தரம் காப்பாற்றினாராம்.
அந்த நண்பர் - நடராஜ சுந்தரம் சிறீரங்கம் பொதுக் கூட்டத்தில் பேசினாராம். பாம்பையும், பாப்பானையும் கண்டால் முதலில் பாப்பானை அடி எனப் பேசி னாராம்.
ஆனால் மறுநாள் வாலி என்ற பாப்பானை பாம்பு கடிக்க வந்தபோது, அவரது நண்பரான நடராஜசுந்தரம் வாலியை அடிக்காமல் பாம்பை அடித்து, அதன் மூலம் வாலியான பார்ப்பனரைக் காப்பாற்றியிருக்கிறார்.
இந்தப் பழமொழி பெரியார் சொன்னதாக அவர் கூறியுள்ளார். அதுகூடத் தவறுதான். தந்தை பெரியார் அப்படிக் கூறியதாக எந்த இடத்திலும் இல்லை; இன்னும் சொல்லப்போனால் அது வட இந்தியாவி லிருந்து வந்த ஒன்று என்ற ஒரு கருத்துக்கூட இருக்கிறது.
பார்ப்பான் பணக்காரனாக ஆவது பற்றி எனக்குக் கவலையில்லை. அவன் உயர்ஜாதிக்காரனாகவும், இன்னொருவன் தாழ்ந்த ஜாதியாகவும் நிலவும் நிலை மாற்றப்பட வேண்டும் என்பதுதான் தனது கருத்து என்று பார்ப்பான் பணக்காரனானால் என்னும் கட்டு ரையிலே குடி அரசில் (9.11.1946) தந்தை பெரியார் எழுதியுள்ளார்.
நீ சினிமாவுல ஒரு பெரிய ஆளா வருவே! என்று தமது நாத்திக நண்பர் சொன்னது இப்பொழுது பலித்துவிட்டது என்று எழுதும் கவிஞர் வாலி , நடராஜ சுந்தரத்தின் வாக்கு தெய்வ வாக்காகப் பலித்தது; நான் சினிமாவில் பெரிய கவிஞனாக வளர்ந்து விட்டேன். அதைப் பார்க்க அவன்தான் இல்லை என்கிறார்.
நாத்திகரான நடராஜசுந்தரம் கூறியது ஒரு கணிப்பே தவிர, அது தெய்வவாக்கு என்பது நடராஜ சுந்தரம் ஏற்றுக் கொண்ட கருத்தை ஒரு வகையில் கொச்சைப் படுத்துவதாகவே கருதவேண்டும்.
இதற்கு முன்பேகூட இதே தொடரில் (17.11.2010) பின்வருமாறு எழுதியுள்ளார்:
சுப்பிரமணிய துதியமுது பாடிய பாவேந்தர் - பின்னாளில் பகுத்தறிவைப் பாடினாலும் - அதையும் அவர் உள்ளிருந்து ஓதிய எம்பிரான் முருகன் எனலாம் என்று எழுதியுள்ளார். இதுவும் தன் கருத்தை புரட்சிக் கவிஞர் மேல் திணிக்கும் முறையாகும்.
1926 இல் சுப்புரத்தினமாக இருந்த நிலையில், சிறீ மயிலம் சுப்பிரமணியன் துதியமுது நூலை எழுதியது உண்மைதான். 1928 இல் தந்தை பெரியார் கொள் கையை ஏற்றுக் கொண்ட நிலையில், 1933 இல் ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் நடை பெற்ற நாத்திகர் மாநாட்டின் பதிவேட்டில், நான் ஒரு நிரந்தர நாத்திகன் என்று எழுதி கையொப்பமிட் டுள்ளார் புரட்சிக்கவிஞர்.
அத்தகைய புரட்சிக் கவிஞரை வாலி அவர்கள் பாடபேதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மானமிகு கலைஞர் அவர்களைப் பற்றிக்கூட இதே பாணியில் கவிஞர் வாலி கூறியதுண்டு. அதே போல எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கைப் பற்றிக் கூறும்போது ஒரு காலத்தில் அவர் நாத்திகராக இருந்தார். இப்பொழுது குருத்துவாரத்தில் சரண டைந்தார் என்று எழுதியுள்ளார்.
ஆனால், குஷ்வந்த் சிங் தன்னைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள கருத்து டெக்கான் கிரானிக்கல் ஏட்டில் (28.11.2010) வெளிவந்துள்ளது. அதில் தன்னை, அக்னாஸ்டிக் என்றே குறிப்பிட்டுள்ளார். அதாவது கடவுள் உண்டு என்றோ, இல்லை என்றோ கூறாத - நம்பாத ஒரு நிலையினர் ஆவார்.
இந்த வார ஆனந்த விகடனில் (29.12.2010) இன் னொரு நாத்திகரைக் குறிப்பிட்டுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் என்னைச் சந்தித்து, எனக்குப் பேச்சு வரும் என்று சொல்லி, அவர் சொன்ன சொல் பலித்தது என்று சொன்னேனே - அவர் ஒரு நாத்திகர். அவர்தான் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு திரு. வீரமணி அவர்கள் என்று கூறியுள்ளார்.
தமது கருத்தை இந்த நாத்திகர் மீது திணிக்காதது வரவேற்கத் தக்கது.
இந்தத் தொடரில் ஒரு கருத்தை கவிஞர் வாலி பதிவு செய்துள்ளார்.
நாணயமான ஒரு நாத்திகன், நாணயமற்ற ஓர் ஆத்திகனை விட நூறு மடங்கு மேலானவன் என்று எழுதியுள்ளார்.
உண்மைதான். நாணயமான மனிதராக வாழ நாத்திகமே நன்னெறி!
http://viduthalai.periyar.org.in/20101225/news02.html
Saturday, December 25, 2010
Friday, December 24, 2010
பா.ஜ.க.வின் ஆட்சிக் காலத்தில் வாஜ்பேயி பிரதமராக இருந்த காலகட்டத்தில், ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறியதை எடுத்துக்காட்டி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை
2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினை: வாஜ்பேயி பிரதமராக இருந்த காலகட்டத்தில் ரூ.ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி இழப்பு! மத்திய அமைச்சர் கபில்சிபல் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார் அரசியல் நோக்கத்தோடு தேர்தலுக்காக பா.ஜ.க. செய்யும் சூழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்
தமிழர் தலைவர் வெளியிட்ட அறிக்கை
தொலைத்தொடர்புத் துறையின் தற்போதைய அமைச்சர் திரு. கபில்சிபல் அவர்கள் நேற்றிரவு தனியார் செய்தித் தொலைக்காட்சி (ஆங்கிலத்தில்) ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
பல்வேறு திடுக்கிடக் கூடிய தகவல்களை ஆணித் தரமான முறையில் விளக்கியுள்ளார்.
பா.ஜ.க. ஆட்சியில் இழப்பு
1999 ஆம் ஆண்டில் - பாரதீய ஜனதா ஆட்சியில், வாஜ்பேயி அவர்கள் பிரதமராக இருந்த காலகட்டத் தில் - கடைப்பிடிக்கப்பட்ட தொலைத்தொடர்பு கொள்கையினால், மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடியாகும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு சம்பந்த மாக இந்த இழப்பு - இது இப்போது சொல்லப்படுவது போன்ற யூகத்தின் (கற்பனையின்) அடிப்படையில் சொல்லப்படும் தொகை அல்ல; நடைமுறைக் கணக்குப்படி ஏற்பட்ட இழப்புத் தொகையாகும்!
9.12.2010 அன்று சென்னைப் பொதுக்கூட்டத்தில் நாம் பேசியபோது, இதுபற்றிய விசாரணை 2001 முதல் தொடங்குவதைவிட, நியாயமாகப் பார்த்தால் 1999 ஆம் ஆண்டு முதலே தொடங்கப்படல் வேண்டும் என்று வற்புறுத்தினோம். காரணம், அப்போது வெளியான நியூ ஏஜ் (CPI) ஏட்டின் கட்டுரை ஒன்றில் ரூ.50 ஆயிரம் கோடிக்குமேல் வாஜ்பேயி ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறையில் இழப்பு - ஊழல் என்று வெளிவந்தது. இதைச் சுட்டிக்காட்டினோம்!
மத்திய அமைச்சர் கபில்சிபல் இதனைக் கூறுவ தோடு, எப்படி இது ஏற்பட்டது என்பதையும் விளக்கி யுள்ளார்.
ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்த ஏலத்தில் விடும் கொள்கைக்குப் பதிலாக, வருவா யில் பங்கு (Revenue Sharing) என்ற அடிப்படையில், ஒதுக்கீடு மாற் றப்பட்டதுடன், 10 ஆண்டுகாலத்துக்கு இருந்த லைசென்சு முறையை 20 ஆண்டுகளுக்கு அப்போது உயர்த்தி சலுகை காட்டப் பட்டது.
யூகத் தொகை நட்டம் - இன்றைய கணக்கு ஆய்வு அதிகாரி அறிக்கைப்படி ரூபாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி - இதை அவரே விவாதித்து முடிவு செய்யலாம் என்று முடித்துக் கையொப்பமிட்டுள்ளார்.
அருண்ஷோரி கூறியது என்ன?
வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, பிரமோத் மகாஜனுக்கு அடுத்து, அத்துறைக்கு அமைச்சரான அருண்ஷோரி (2001 இல்) கூற்றுப்படி, உத்தேச இழப்பு இப்போது ரூ.30,000 கோடிதானே ஒழிய, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அல்ல என்று கூறியுள்ளார்- சில நாள்களுக்குமுன் சென்னைக்கே வந்து.
21 அக்டோபர் 2009 இல் பதிவான வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் சி.பி.அய்.யால் குறிப்பிடப்பட்ட தொகையோ 22,000 கோடி ரூபாய்தான் உத்தேச இழப்பு என்பதும் சுட்டிக்காட்டப்படவேண்டும்.
பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட இழப்பு - ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் என்றால், எது அதிகமானது?
அதில்கூட கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது ரூ.1,76,000 கோடி இழப்பு வெறும் யூகத்தின் அடிப் படையில்,
அது ரூ.22,000 கோடி என்ற சி.பி.அய். அறிக்கை முரணானது.
பா.ஜ.க. காலத்திய ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடித் தொகை இழப்பு பெரிய தொகையா?
22,000 கோடி ரூபாய் இழப்பு பெரிய தொகையா?
ஒரு பொய்யையே திரும்பத் திரும்பக் கூறினால், அது மெய்யாகி விடுமா?
ஏற்கெனவே 2001 இல் பா.ஜ.க. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுப் (Telecom Policy) படி தானே, அமைச்சர் இராசா காலத்திலும் செயல்பட்டிருக் கிறார்கள்.
அதுவும்கூட டிராய் (TRAI) என்ற அந்த அமைப்பை மீறியா செயல்பட்டிருக்கிறது இராசாவின் அமைச்சகம்?
இராசா காலத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகம்
2001 இல் 3 கோடி தொலைப்பேசி பயனாளிகளாக இருந்தது; 2009 இல் (அமைச்சர் இராசா காலம்) இது 79 கோடியாக உயர்ந்து, நாட்டின் தொழில் வர்த்தகப் புரட் சிக்கும் உதவியது என்பதைக் குறிப்பிடத் தவறவில்லை அமைச்சர் கபில்சிபல்.
மிகக் குறைந்த லைசென்ஸ் தொகை 1658 கோடி ரூபாய்தான் ஒரு போட்டியாள் ஒருமுறை நுழைய என்பது 2001 முதல் 2009 வரை இருந்தது என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார் - அந்தப் பேட்டியில்.
இப்படிப் பல்வேறு செய்திகள் வெளியே வரவிருப்ப தால்தான் பா.ஜ.க.வினர் அந்த விசாரணையை ஏற்க மறுக்கின்றனர் அல்லது தயங்குகின்றனர்!
ஜே.பி.சி. (JPC) என்று திரும்பத் திரும்ப எதிர்க்கட்சி கள் கோஷ்டிகானம் பாடிக் கொண்டுள்ளனரே என்று கேட்டபோது, அமைச்சர் கபில்சிபல் மிகவும் தெளிவாகப் பதிலளித்துள்ளார்!
பொதுக்கணக்குக்குழு (PAC) தனது விசாரணையைத் தொடங்கி செயல்படும் நிலையில், இந்தக் கோரிக்கை அர்த்தமற்றது; உள்நோக்கம் கொண்டது.
தேர்தலுக்கான தந்திரம்!
பிரதமர் தானே, வழமைக்கு மாறாக, அக்குழுவின் முன் ஆஜராகி விசாரணைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளவும் தயார் என்று கூறிய பிறகும், ஏன் பிடிவாதம் இவர்களுக்கு எனக் கேட்ட கபில்சிபல், சி.பி.அய். எப்படி விசாரணையை நடத்துவது என்பதை உச்சநீதிமன்றமே கண்காணித்து ஆணை வழங்கு வதைவிட ஜே.பி.சி. அதிகமாகச் செயல்பட்டுவிட முடியுமா? முடியாதே! பின் ஏன் இந்தக் கோரிக்கை என்றால், இதை வைத்து நீட்டி, 2014 தேர்தல் வரை மக்களிடம் இதனைத் தங்களுக்கு ஒரு பிரச்சார மூலதனமாக்கவே எதிர்க்கட்சிகள் முயலுகின்றன. 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரலில் - இன்னும் 5 மாதங்களுக்குள் வர இருப்பதால் - அதற்கு இதைப் பயன்படுத்தவேண்டும் என்பதே அவர்களின் உள்ளூரத் திட்டம் என்பதை நன்கு விளக்கி விட்டார்!
தூங்குகிறவர்களைத்தான் தட்டி எழுப்ப முடியும்; தூங்குவதுபோல பாசாங்கு செய்பவர்களை எப்படி எழுப்ப முடியும் என்பதுபோல, எல்லாம் தெரிந்து கொண்டே வேறு சரியான வாய்ப்பு இல்லாததால் இதை ஊதி ஊதிப் பெரிதாக்கி அரசியல் லாபம் பெற எண்ணுகிறார்கள்.
இவர்கள் இப்பிரச்சினையை, ஊதி ஊதி பலூனைப் பெரிதாக்க நினைத்தால், கடைசியில் அது வெடித்து புஸ் என்று ஆவது நிச்சயம்!
http://www.viduthalai.periyar.org.in/20101222/news01.html
பாரதீய ஜனதா ஆட்சியில், அரசுக்கு ரூ.ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி இழப்பு மத்திய அமைச்சர் கபில்சிபல் பகிரங்கக் குற்றச்சாற்று
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடு புகார் நாட்டை உலுக்கி வரும் நிலையில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலும் ஸ்பெக்ட் ரம் ஒதுக்கீட்டில் முறை கேடு நடைபெற்றதாக மத்திய அரசு குற்றம்சாற்றி வந்தது. அப்போதைய மத்திய அரசு கடைப் பிடித்த கொள்கையி னால், 1999 ஆம் ஆண் டில் மத்திய அரசுக்கு ரூ.ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக, மத்திய தொலை தொடர் புத் துறை அமைச்சர் கபில்சிபல் நேற்று அறி வித்தார். தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதுபற்றி அவர் மேலும் கூறியதா வது: ஏற்கெனவே நடை முறையில் இருந்து வந்த ஏலத்தில் விடும் கொள் கைக்குப் பதிலாக, வரு வாயில் பங்கு என்ற அடிப் படையில் ஒதுக்கீடு மாற்றப்பட்டதுடன், 10 ஆண்டு காலத்துக்கு இருந்த உரிமம் வழங்கும் முறையை 20 ஆண்டு களுக்கு அப்போது உயர்த்தப்பட்டது குறிப் பிடத்தக்கது.
ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றை ஒதுக்கீட்டை பொறுத்தவரை, எந்த வித பாரபட்சமும் இல் லாத கொள்கையை கடைப்பிடித்து வருகி றோம். கடந்த 2001 முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட் டிற்காக யாரும் பணம் செலுத்தவில்லை.
ஒவ்வொரு ஆப்ரேட் டர்களும் ஒரு முறை மட்டும் நுழைவுக்கட் டணமாக ரூ.1658 கோடி மட்டும் செலுத்தினால் போதும். இந்த அள வுக்கு குறைந்த கட்ட ணம் அமலில் இருந்த தால்தான், கடந்த சில ஆண்டுகளில், தொலை தொடர்பு துறையில் இந்த அளவுக்கு அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள செல்போன்களின் எண்ணிக்கை விகிதம் 3 சதவிகிதம்தான். 2007 ஆம் ஆண்டில் இது 18.22 சதவிகிதமாகவும், 2009 இல் இது 61 சத விகிதமாகவும் (அதாவது 72 கோடி செல்போன் கள்) அதிகரித்தது குறிப் பிடத்தக்கது.
தொலைத் தொடர்பு கொள்கையை அமல் படுத்தியதில் நடை பெற்ற முறைகேடு தொடர் பாக, சில நிறுவனங்க ளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி இருக் கிறோம். அதுகுறித்து இப்போது மேற்கொண்டு விவரங்கள் எதையும் சொல்ல முடியாது. ஆனால், கொள்கை தொடர்பான முறைகேடு குறித்து தொலை தொடர்பு துறை அமைச்சகம் ஏற்கெனவே நடவடிக்கையை தொடங்கி விட்டது. கிரிமினல் குற்றச்சாட்டு குறித்து சி.பி.அய். விசாரணை நடத்தி வரு கிறது.
இவ்வாறு கபில்சிபல் கூறினார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக, மத்திய அரசுக்கு ரூ.ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக, தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி அளித்த அறிக்கையில் குற்றம் சாற்றப்பட்டு இருந்ததைத் தொடர்ந்து இந்த பிரச்சினை பெரிதானது.
இந்த நிலையில், பா.ஜனதா ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட தொலை தொடர்பு கொள்கையால், ஒரே ஆண்டில் அரசுக்கு ரூ.ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக, கபில்சிபல் குற்றம் சாட்டி இருப்பது குறிப் பிடத்தக்கது.
தொழிலதிபர்கள் சந்திப்பு
இதற்கிடையில், நாட்டில் உள்ள முக்கிய தனியார் தொலை தொடர்பு நிறுவன அதிபர்களை கபில்சிபல் நேற்று சந்தித்து பேசினார். சுனில் மிட்டல் (பார்தி), அனில் அம்பானி (ரிலையன்ஸ்), ரத்தன் டாடா (டி.டி.சி.எல்.) ஆகியோருடன் ஏறத்தாழ 45 நிமிடம், துறையின் தற்போதைய நிலை குறித்து ஆலோசனை நடத்தி னார்.
இந்த சந்திப்பின்போது ஸ்பெக்ட் ரம் அலைக்கற்றை பற்றாக்குறை பற்றி தங்கள் கவலையை தெரிவித்த தொழில் அதிபர்கள், அதை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தியதாக தெரிகிறது. ஸ்பெக்ட் ரம் ஒதுக்கீடு கொள்கையில் வெளிப் படையான தன்மை கடைப்பிடிக்கப் படும் என்று, அவர்களிடம் அமைச்சர் கபில்சிபல் உறுதி அளித்தார்.
http://www.viduthalai.periyar.org.in/20101222/news04.html
இராசா எங்கே - அத்வானிகள் எங்கே?
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி 2ஜி அலைக்கற்றை தொடர்பான பிரச்சினையில் சி.பி.அய். தனது விசா ரணையை ஆரம்பித்துள்ளது. பல இடங்களில் சோதனை கள் நடத்தப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து சம்பந் தப்பட்டவர்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
சோதனைகள் நடந்தபோது முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று சி.பி.அய். அதிகாரிகளே கூறியிருக்கின்றனர். அதேபோல, விசாரணைக்கும் போதிய ஒத்துழைப்பை அளிப்பதாக கூறியிருக்கின்றனர்.
அதே நேரத்தில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன?
பாபர் மசூதி இடிப்பு வழக்கு 18 ஆண்டுகாலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே - போதிய ஒத்துழைப்புக் கொடுத்திருந்தால் இந்த வழக்கு விசாரணை முடிந்து பா.ஜ.க.வின் பெரும் தலைவர்கள் சிறைக் கொட்டடியில் கிடந்திருக்கவேண்டிய நிலைகூட ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டே!
குற்றங்கள் என்ன சாதாரணமானவையா? இந்திய குற்றவியல் சட்டம் 153(ஏ), 149, 153(பி) மற்றும் 505 பிரிவுகள் ஆயிற்றே!
கலகம் விளைவித்தல் மக்களிடையே குரோத உணர்ச்சிகளைத் தூண்டுதல், ஒரு சமுதாயத்துக்கு விரோதமாகக் குற்றம் செய்யத் தூண்டுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல், பீதியை உண்டாக்குதல் என்கிற குற்றங்கள் சாதாரணமானவையா?
ஊழலை விட பன்மடங்கு அபாயகரமான குற்றங் களாயிற்றே!
இதில் வெட்கக்கேடு என்னவென்றால் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட திருவாளர் எல்.கே. அத்வானி அதிகாரத்தில் இருந்த காரணத்தால், தொழில்நுட்பக் காரணங்களைச் சொல்லி இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாரே! ஆகா, எவ்வளவுப் பெரிய யோக்கிய சிகாமணிகள்; அதிகாரத்தைச் சற்றும் துஷ்பிரயோகம் செய்யாத உத்தம சீலர்கள் இவர்கள் - அப்படித்தான் மற்றவர்களும் நம்பித் தொலைக்கவேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு!
மேல்முறையீட்டின் காரணமாக அலகாபாத் உயர்நீதிமன்றம் மீண்டும் அத்வானியை வழக்கில் இணைக்கும்படி நேர்ந்தது.
அதேபோல, பாபர் மசூதி இடிப்புக் குறித்த நீதிபதி லிபரான் ஆணையத்தின் விசாரணையில் இதே அத்வானி எப்படியெல்லாம் நடந்துகொண்டார்?
அத்வானியைக் குறுக்கு விசாரணை செய்தவர் அரசு வழக்கறிஞர் அனுபம் குப்தா என்பவர். இவரின் கேள்வி களுக்கு முன் அத்வானி நிலை குலைந்து போனார். நேர்மை இல்லாத இடத்தில், இத்தகைய இடர்ப்பாட்டைச் சந்திக்கத் தானே நேரும்?
அத்வானி நீதிபதி லிபரானிடம் சரணடைந்த நிலையில், நீதிபதியே அரசு தரப்பு வழக்கறிஞரைப் பார்த்து மென்மையான அணுகுமுறையைப் பின்பற்றுங்கள் என்று கேட்டுக் கொள்ளவில்லையா?
லிபரான் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் முன்னாள் பிரதமர் வாஜ்பேயி பெயரும் குற்றவாளிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், என்ன சொன்னார்கள் இந்த உத்தமப் புத்திரர்கள்? வாஜ்பேயியை எப்படி சேர்க்கலாம் என்று எகிறிக் குதிக்கவில்லையா?
ஒரு நீதிபதியின் தலைமையில் அமைந்த ஆணையம் சங் பரிவார்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப நடனம் ஆட வேண்டுமா? இதுதானே இந்தக் கூட்டத்தின் எதிர்பார்ப்பு?
இப்படி விசாரணைக்கும், நீதிமன்றத்திற்கும் ஒத்துழைக்காது அடம்பிடித்த ஆசாமிகள் எங்கே?
2ஜி அலைக்கற்றை விசாரணைக்கு எல்லா வகைகளிலும் ஒத்துழைப்புக் கொடுத்துவரும் இராசாக்கள் எங்கே?
விசாரணைக்குத் தயார் - எந்தத் தேதியில் சி.பி.அய்.க்கு வசதிப்படுகிறதோ அந்தத் தேதியில் நேரில் வரத் தயார் என்று மிகவும் நேர்மையாகப் பதில் தந்துள்ள இராசாவைப் பார்த்து கைநீட்டிப் பேச அத்வானி வகையறாக்களுக்குக் கிஞ்சிற்றும் தகுதி உண்டா என்று சவால் விட்டுக் கேட்கின்றோம்.
பா.ஜ.க.வைப் போலவே அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவும் நடந்து கொள்கிறார். இவர்மீது சாற்றப்படாத ஊழல் குற்றச்சாற்றா?
நீதிமன்ற நடவடிக்கைகளை முடக்குவதிலும், கால தாமதத்துக்கு ஆளாக்குவதிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர் இவர்.
இந்த அம்மையார் ஊழலைப்பற்றிப் பேசினால், அது கடைந்தெடுத்த நகைச்சுவைப் பெரும் விருந்தாகத்தான் இருக்கும்.
ஊழல் வண்ணத்தால் கறைபடிந்த மனிதர்களும், நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத பேர்வழிகளும், வெறும் யூகத்தின் அடிப்படையில் இழப்பு ஏற்பட்டது என்று கூறி ஆ.இராசாமீது சேறு வாரி இறைக்கத் தகுதி உடையவர்கள்தானா?
சி.பி.அய். விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கும் இராசாமீது, விசாரணைகளுக்கு ஒத் துழைக்காத பேர்வழிகள் விமர்சனம் செய்யக்கூடத் தகுதி அற்றவர்கள் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்களாக!
http://www.viduthalai.periyar.org.in/20101222/news05.html

நுழைவுத் தேர்வும் - எதிர்ப்பின் வரலாறும் - கலி. பூங்குன்றன்
எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில் தொழிற்கல்லூரிகளில் சேர மாணவர் களுக்கு நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டது.
தமிழ்நாடு அரசு செய்தி, சுற்றுலா மற்றும் (தமிழ்) பண்பாட்டு (செய்தி வெளியீட்டுத்துறை) செய்தி வெளி யீடு எண். 322; நாள் 30.5.1984 நுழைவுத் தேர்வுக்கான சுற்றறிக்கையாக இது அமைந்தது.
இதனை எதிர்த்து முதலாவதாகப் போர்ச் சங்கு ஊதி கலகக் கொடி உயர்த்தியவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி ஆவார்கள் (விடுதலை, அறிக்கை, 8.6.1984).
நுழைவுத் தேர்வுக்கு அரசு ஆயத்தமாகிவிட்டதாம்; நாமும் கிளர்ச்சிக்கு ஆயத்தமாவோம்!
கிராம மக்களே,
பெற்றோர்களே,
தயாராகுங்கள்!
பல ஆயிரக்கணக்கானோர் சிறைச் சாலைகளை நிரப்பத் தயாராகுங்கள்!
அரசின் வீண் பிடிவாதம் உடையும்வரை போராடு வோம்!
காமராஜர் செய்யாததை, அண்ணா செய்யாததை, எம்.ஜி.ஆர். செய்வது எவ்வளவு சமூகத் துரோகம்?
இதனை எதிர்த்துப் போராடுவோம்!
நுழைவுத் தேர்வு ஒட்டகம் நுழையும் கதைதான் - மறந்து விடாதீர்கள்! (விடுதலை, 8.6.1984) என்று திரா விடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டார்.
அதற்கு முன்னதாகவே திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று அவசர அவசரமாக சென்னை பெரியார் திடலில் கூட்டப்பட்டது (25.3.1984). திராவிடர் கழகப் பொதுச்செயலாளர், கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்: திருவாளர்கள் எஸ்.ஜே. சாதிக் பாட்சா (தி.மு.க. பொருளாளர்) அப்துஸ் சமது எம்.பி., டி.என்., அனந்தநாயகி (காங்கிரஸ், தேவர் பேரவை) தி.சு. கிள்ளிவளவன் (பொதுச்செயலாளர், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ்), கே.ஆர். ராஜகோபால் (தலைவர், ஜனநாயகக் கட்சி, இளைஞர் பிரிவு) அய். சங்கரமணி (சாலியர் மகாஜனசங்கத் தலைவர்) ஆர். அருணாசலம் (பொதுச்செயலாளர், பிற்படுத்தப்பட்ட அரசு அலுவலர் சங்கம்) கே. சண்முகவேலு (தலைவர், தமிழ்நாடு சேனைத் தலைவர், மகாஜன சங்கம்), டாக்டர் வி. இராமகிருஷ்ணன் (பொதுச்செயலாளர், தமிழ்நாடு தேவர் பேரவை), ஆர். கதிர்வேலு (தலைவர், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் முற்னேற்ற சங்கம்), ஆர். நாகராசன் (துணைத் தலைவர், அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் இரயில்வே தொழிலாளர் கழகம்), அர. அரவிந்தன் (பொதுச்செயலாளர், அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் அஞ்சல் - தந்தித் துறை ஊழியர் சம்மேளனம்), பண்டரிநாதன் அய்.ஏ.எஸ்., (ஓய்வு) (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முன்னாள் இயக்குநர்) முதலியோர் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் தொழில் படிப்பு சொல்லித்தரும் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்களைச் சேர்க்க, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த நேர்முகத் தேர்வை நிறுத்திவிட்டு, இந்த ஆண்டுமுதல் நுழைவுத் தேர்வு ஒன்றைக் கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதை இந்தக் கூட்டம் மிகவும் கவலையோடு விவாதித்தது. நம்முடைய வருங்கால சந்ததியினருடைய படிப்பு பெரிதும் பாதிக் கப்படும் என்பதாலும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் தொழிற்கல்வி வாய்ப்புப் பெரிதும் பாதிக்கப்படும் என்பதாலும், குறிப்பாகத் திறந்த போட்டி என்ற பொதுப் போட்டியில் கிடைக்கவேண்டிய பங்கு மற்ற முன்னேறிய ஜாதிக்காரர்களால் கபளீகரம் செய் யப்படும் என்பதாலும் ஊழலை ஒழிப்பது என்பதுதான் இதன் அடிப்படை என்றால், நுழைவுத் தேர்வுமூலம் ஊழல் வராது என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை என்பதாலும், தமிழக அரசு அறிவித்துள்ள நுழைவுத் தேர்வு முறையை உடனடியாக கைவிடவேண் டும் என இக்கூட்டம் ஒருமனதாகக் கேட்டுக்கொள் கிறது.
அப்படி உடனடியாகக் கைவிடவில்லையானால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மக்களையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டம் நடத்துவதென்றும், திராவிடர் கழகம் இதனை முன்னின்று நடத்தவேண்டுமென்றும் இதற்கு அனைவரும் தோளோடு தோள் நின்று ஒத்துழைப்புக் கொடுப்போம் என்றும், இதை அரசியல் பிரச்சினை யாகக் கருதாமல் சமுதாயக் கண்ணோட்டத்தோடு எல்லா அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் இதற்கு ஒத்துழைக்கவேண்டும் என்றும் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
திராவிடர் கழகம் மூட்டிவிட்ட எதிர்ப்புத் தீ நாடெங் கும் பற்றிக்கொண்டு விட்டது. எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் அவர்கள் கண்டன மாரி பொழிந்தார்.
கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி யில் பின்வருமாறு குறிப்பிட்டார்:
செய்தியாளர்: தொழிற் கல்லூரிகளுக்கெல்லாம் இன்டர்வியூ முறையை நீக்கிவிட்டு நுழைவுத் தேர்வு முறையை வைக்கப் போவதாக சொல்லியிருக்கிறார் களே?
கலைஞர்: இண்டர்வியூ முறையினால் ஊழல் ஏற்படுகிறது என்று சொல்லிவிட்டு அதை ஒழிப்பதாகச் சொல்கிறார்கள். இண்டர்வியூ முறை என்பது காமராசர் காலம், பக்தவத்சலம் காலம், அண்ணா அவர்கள் காலம், நான் முதலமைச்சராக இருந்த காலம் - அப் போதெல்லாம் அந்த முறையில்தான் நடைபெற்றிருக் கிறது. அப்போது யாராவது மாணவர்கள் ஒன்றிரண்டு பேர் தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறார்கள்.
ஆனால், எம்.ஜி.ஆர். ஆட்சியில் 140-க்கு மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டு நீதிமன்றம் சென்று மீண்டும் ஒரு இண்டர்வியூ தேர்வு அவர்களில் பெரும் பாலோருக்கு நடைபெற இருக்கிறது. அதனால் அந்த முறையில் ஒன்றும் தவறு இல்லை. அதை நடைமுறைப் படுத்துகிறவர்கள் ஊழல் புரிகின்ற காரணத்தி னால்தான் இப்படிப்பட்ட நிலைமை ஏற்படுகிறது.
ஏற்கெனவே ப்ளஸ் 2 (பன்னிரண்டாவது வகுப்பு) அரசுத் தேர்வு எழுதி அதில் தேறியவர்கள் மீண்டும் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒரு பரீட்சை எழுதவேண்டும் என்பது முதலில் அரசாங்கம் நடத்திய பரீட்சையை சந்தேகிப்பதாக ஆகும்.
புதிய முறை ஏற்கப்பட்டால், இண்டர்வியூ முறை எடுக்கப்பட்டால், அது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்குத்தான் தீங்காக முடியும்.
வகுப்புவாரி பிரதிநிதித்துவ - இட ஒதுக்கீட்டு முறை யின்மீது எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு ஒரு வெறுப்பு உண்டு. அதை பலமுறை அவரே வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். உண்மையான திராவிடர் இயக் கத்திற்குப் பயந்துகொண்டுதான் அந்த முறை இப் பொழுது அமலில் இருப்பதற்கு எம்.ஜி.ஆர். இடம் கொடுத்திருக்கிறார். அவருடைய எண்ணத்தைச் செயல்படுத்தக் கையாளுகின்ற வேறொரு வழிதான் இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள முறையாகும்.
மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி அட் மிஷன்களுக்கு அமைச்சர்களும், ஆளுங்கட்சிக்காரர் களும் லட்சக்கணக்கிலே லஞ்சம் பெற்றதால் இப் பொழுது ஏற்பட்டுள்ள விளைவுகளுக்கு இன்டர்வியூ முறையைக் குறை கூறுவது சரியல்ல.
இது எப்படி இருக்கிறது என்றால், ஜலதோஷம் பிடித்துவிட்டது என்பதற்காக மூக்கை அறுப்பதுபோல் இருக்கிறது என்று கூறினார் கலைஞர் அவர்கள்.
முசுலிம் லீக், வன்னியர் சங்கம் (வன்னிய அடி களார்), ஃபார்வர்டு பிளாக், யாதவர் மகாசபை, நாயுடு சங்கம், அம்பேத்கர் மக்கள் இயக்கம், மக்கள் கட்சி (டாக்டர் சந்தோஷம்), இந்தியக் குடியரசுக் கட்சி, ஜனதா கட்சி, காமராஜ் காங்கிரஸ் (பழ. நெடுமாறன்) முதலியோர் எதிர்ப்புக் கற்களை வீசினர்.
அ.தி.மு.க.வுக்குள்ளேயே மதுரை முத்து அவர்கள் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டார். அமைச்சர் கள் காளிமுத்து, எஸ்.டி. சோமசுந்தரம் போன்றவர் களும் நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்ததில் அதிருப்தி உள்ளவர்களாக இருந்தனர்.
எம்.ஜி.ஆர். அவர்களுக்கு திராவிட இயக்கப் பின் னணியோ, அதனைச் சார்ந்த சித்தாந்தமோ தெரிந் திருக்க - தெரிந்திருந்தாலும் உளப்பூர்வமான ஈடுபாடு கொள்ள வாய்ப்பில்லையே! அவர் நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்ததும், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பினைக் கொண்டு வந்ததும் இந்தத் தன்மையால்தான்.
இல்லாவிட்டால் இப்படிப் பேசியிருப்பாரா?
பிராமணர்கள் சங்கம் வைத்திருக்கிறார்கள். இதற்கும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. அவர்கள் ஏன் சங்கம் வைத்திருக்கிறார்கள்? அந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் (மாலைமுரசு, 31.5.1981, தஞ்சாவூர்).
இப்படிப் பேசியிருப்பவர் எப்படி திராவிட இயக்கத் தைச் சேர்ந்தவராக, அய்யா - அண்ணா கொள்கை களைப் புரிந்தவராக இருக்க முடியும்?
இன்னொரு படி மேலே சென்றும் பேசினார்:
நானாக ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கிய பொழுது, ராஜாஜி என் பின்னால் இருந்து ஆதரவு காட்டி அறிவுரைகளை வழங்கினார். அவர் கூறிய அறிவு ரையைப் பயன்படுத்திய நேரத்தில், அதைப் பார்க்க அவர் இல்லையே என்று எண்ணுகிறேன். (சென்னை, பாரதீய வித்யா பவன் நடத்திய விழாவில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பேசிய பேச்சு, 20.4.1984).
அரசியலில் நுழைந்த திராவிடர் இயக்கத்தின் பாட்டையில் பல காலகட்டங்களில் இத்தகு தடு மாற்றங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன.
தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நுழைவுத் தேர்வை எதிர்த்துப் போராட்டத்தினை அறிவித்துவிட்டார்!
23 இடங்களில் நுழைவுத் தேர்வு ஆணையினை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் இப்போராட்டத்தில் கருஞ்சட்டைத் தோழர்கள் குதித்தனர். நாடே தீப்பற்றி எரிந்தது போன்ற உணர்வு ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலே தகித்தது.
இதுதான் தமிழ்நாடு. இதனைப் புரிந்துகொள்ளா மல், டில்லியில் உள்ள மருத்துவக் குழுமம் வாலாட்டிப் பார்க்கிறது.
வரும் 29 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் மாணவர் கழகம் - இளைஞரணியினர் களத்தில் குதிக்கின்றனர். ஆர்ப்பாட்டப் போர்ச் சங்கு முழங்க இருக்கின்றனர்.
தமிழகம் தொடங்கிவிட்டது - இந்தியா எதிரொலிக்கப் போகிறது.
http://www.viduthalai.periyar.org.in/20101223/news18.html

தடை செய்க சோதிடத்தை!
சோதிடம் என்னும் மூட நம்பிக்கையால் அன்றாடம் நிகழும் கொடுமைகள் நாளேடுகளில் வந்துகொண்டுதானிருக்கின்றன.
சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த வில்வராஜ் என்ற துணி வியாபாரி, சோதிடன் கூறினான் என்று கூறி, ஏற்கெனவே மனைவி இருக்க, வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அதற்காக ஈடுபட்ட நிலையில், இன்னொரு பெண்ணால் ஆள் வைத்துக் கொல்லப்பட்டார் என்ற செய்தி ஏடுகளில் வெளிவந்துள்ளது.
தன் பிள்ளை பிறந்த நேரம் சரியில்லை என்று சோதிடர் சொல்ல, பெற்ற பிள்ளையையே அடித்துக் கொன்றான் என்ற ஒரு செய்தி சில மாதங்களுக்கு முன்பு வந்தது.
சோதிடனின் பேச்சைக் கேட்டு தான் பெற்ற பிள்ளையைக் கிணற்றில் வீசி எறிந்தாள் ஒரு பெண் என்ற செய்தி இந்த வாரமே வெளிவந்தது.
சென்னையில் பிரபல ஓட்டல்காரர் சோதிடனின் பேச்சைக் கேட்டு, இன்னொரு பெண்ணைத் திரு மணம் செய்து, அதன் பின்விளைவாக என்னென்ன வெல்லாம் நிகழ்ந்தன என்பது பரவலாகத் தெரிந்த தகவலாகும்.
உலகில் ஒரே ஒரு இந்து ராஜ்ஜியம் நடக்கும் நாடு என்று பெருமையாகப் பேசப்பட்ட நேபாளத்தில் என்ன நடந்தது?
சோதிடன் பேச்சை நம்பி இளவரசனுக்குத் திரு மணத் தேதியைத் தள்ளிப் போட்டுக் கொண்டே போனதால், ஆத்திரப்பட்ட இளவரசன் தன் பெற் றோர்கள் உள்பட பலரை துப்பாக்கிக் குண்டுகளால் தீர்த்துக் கட்டி தன்னையும் சுட்டுக்கொள்ள வில்லையா?
இவ்வளவுக்குப் பிறகும் கூட சோதிடக் கிறுக்கு நம் மக்களை ஆட்டிப் படைப்பது ஒரு வகையில் பரிதாபமும், இன்னொரு வகையில் வேதனையும் பகுத்தறிவாளர்களை, மனிதநேயர்களைப் பிய்த்துத் தின்னுகிறது.
மக்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் எழுதி வைத்துக் கொண்டு - இதுபோன்ற சோதி டர்களை அனுமதிப்பது எந்த வகையில் சரி?
ஆங்கில ஏடுகள் உள்பட சோதிடப் பலன்களை, அன்றாட இராசிப் பலன்களை வெளியிட்டுக் கொண்டிருந்தால் மக்கள் புத்தி எப்படி திருந்தித் தொலையும்? போதும் போதாதற்குத் தொலைக் காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு, இந்த சோதிட மூட நம்பிக்கையைப் பரப்புவதில் தீவிரம் காட்டித் தொலைகின்றன.
ஒரு நாளேட்டில் ஒருவருடைய இராசிபலன், வியாபாரம் லாபம் என்று இருக்கும். அதே ஆசா மிக்கு இன்னொரு ஏட்டில் நட்டம் என்றிருக்கும். இந்த முரண்பாடுகளை யார் கண்டுகொள்ளப் போகிறார்கள் என்ற தைரியம்தான்.
தெய்வப் பிரசன்னம் பார்க்கும் உன்னிக் கிருஷ்ண பணிக்கரே இப்பொழுது சிக்கலில் மாட்டிக் கொண்டு இருக்கிறார். ஜெயமாலா என்ற சினிமா நடிகை அய்யப்பன் விக்ரகத்தைத் தொட் டது தொடர்பான பிரச்சினையில் உன்னிக்கிருஷ்ண பணிக்கர்தான் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப் பட்டுள்ளார்.
ஜெயலலிதா அம்மையாருக்கும் இவர்தான் சோதிடர். தன் சோதிடத்தை அவரால் கணித்துக் கொள்ள முடியவில்லையே! சோதிடத்தின் யோக்கியதை இதுதான்!
காந்தியாருக்கு திருத்தணி சோதிடர் வி.கே. கிருஷ்ணமாச்சாரி என்பர் 125 வயது என்று ஆயுள் கணித்தாரே - என்ன நடந்தது - எண்பது ஆண்டு காலம் கூட அவர் உயிர் வாழ முடியவில்லையே!
கடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் சோதிடத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.
விளைவு என்ன? விளக்கெண்ணெய்க்குக் கேடானதே தவிர, பிள்ளை பிழைத்தபாடில்லையே!
மக்களை மடையர்களாக்கும், இழப்புகளுக்கு ஆளாக்கும் சோதிடத்தை அரசுகள் கண்டிப்பாகத் தடை செய்யலாம். தனி மனித உரிமை என்று சொல்லுவதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. திருடுவது, விபச்சாரம் செய்வதுகூட தனி மனித உரிமை என்ற தலைப்பின்கீழ் வந்துவிடுமே!
எனவே, மக்களின் நலன் கருதி சோதிடத்தைத் தடை செய்யவேண்டும் என்பதே நமது வேண்டு கோள்!
http://www.viduthalai.periyar.org.in/20101223/news17.html

அலைவரிசை அரசியல்... அரசிற்கு வருவாய் இழப்பா...? இல்லவே இல்லை... எப்படி?
உலகிலேயே மிகப்பெரிய சிறந்த ஜனநாயக நாடான இந்தியாவின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் எவ்வித விவாதமுமின்றி கூச்சல் குழப்பத்துடன் முழுமையாக செயல்படாத நிலையில் முடிவுற்றுள்ளது. இச்செயல் ஜன நாயகத்திற்கே விடப்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாகும்.
தொலைத்தொடர்பு துறையில் இரண்டாம் தலை முறை 2ஜி சேவைக்கான உரிமம் ஏலமின்றி முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற திட்டத்தின் அடிப்படையில் 2008இல் வழங்கப்பட்டதால் அரசுக்கு 1,76,645 கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்று இந்திய தலைமை கணக்கு அதிகாரி குறிப்பிட்டுள்ளது பற்றி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிடிவாதமாக வலியுறுத்தி இச்செயலில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டன.
இதுபற்றிய சில உண்மைகளை பகிர்ந்து கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
ஏதோ இராசா அதுவரை கடைப்பிடித்து வந்த ஏல முறையைக் கைவிட்டது போன்ற தோற்றத்தை உரு வாக்க முயற்சிக்கிறார்கள். ஏல முறையை கைவிட்டது யார்? ஏன்?
1994 தேசிய தொலைத்தொடர்புக் கொள்கை
இக்கொள்கையின் அடிப்படையில் டில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய பெரு நகரங்களுக்கு, ஒவ்வொரு நகருக்கும் தலா இரண்டு நிறுவனங்களுக்கு ஏலமின்றி மிகக் குறைந்த உரிமக் கட்டணத்தில் (உ.ம் - சென்னை RPG/Skycell: முதலாண்டுக்கு ரூ.1 கோடி, இரண்டாம் ஆண்டுக்கு ரூ.2 கோடி, 3 ஆம் ஆண்டுக்கு ரூ.4 கோடி) உரிமம் வழங்கப் பட்டது. M4.4 MHzஅலைக் கற்றையும் கட்டணமின்றி வழங்கப்பட்டது.
1995 - ஏலமுறை அறிமுகம்
மேலே குறிப்பிட்ட பெருநகரங்கள் தவிர, பிற 18 நகரங்களுக்கு ஏலமுறை அடிப்படையில் இரண்டு இரண்டு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. மிகப் பெரிய வருவாயை எதிர்பார்த்து ஏலத்தில் போட்டி போட்டு பங்கேற்ற நிறுவனங்களால் போதிய வருவாய் இல்லாததால் அரசிற்கு செலுத்த ஒப்புக் கொண்ட உரிமக் கட்டணத்தை செலுத்த முடியாமல் தத்தளித்தனர். சேவை விரிவாக்கமும் முடங்கியது. 1994 தேசிய தொலைத் தொடர்புக் கொள்கையின் நோக்கம் நிறைவேறவில்லை. இந்த தேக்க நிலையை கருத்தில் கொண்ட வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி. அரசு இந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டிய சுமார் ரூ.50,000 கோடியை 1999ஆம் ஆண்டில் ரத்து செய்தது. புதிய தொலைத்தொடர்புக் கொள்கையை உருவாக்கியது.
1999 - புதிய தொலைத்தொடர்புக் கொள்கை
இந்தக் கொள்கையின்படி 2000-த்தில் BSNL/MTNL மூன்றாவது நிறுவனமாக செயல்பட அனுமதி வழங்கப் பட்டது. 2001 இல் 17 நிறுவனங்கள் ஒரு சேவைப் பகுதியில் 4 ஆவது நிறுவனமாக செயல்பட ஏலமுறை யில் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுமதிக்கப் பட்டனர். இந்த ஏலக் கட்டணம் தான் ரூ.1658 கோடியாகும்.
2003- ஒருங்கிணைந்த சேவைக்கான உரிமம்
டிராயின் பரிந்துரையின்படி 2003ல் பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில், ஜஸ்வந்சிங், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அருண் ஜேட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கொண்ட அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையை ஏற்று, அமைச்சரவை முடிவின்படி, அடிப்படைத் தொலைபேசி சேவையில் இருக்கும் நிறுவனங்கள், செல்லுலார் சேவைக்கும், செல்லுலார் சேவையில் இருக்கும் நிறுவனங்கள் அடிப் படைத் தொலைபேசி சேவைக்கும் 2001 இல் நிர்ணயிக் கப்பட்ட உரிமக் கட்டணமான ரூ.1658 கோடியை செலுத்தி, ஏலமின்றி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டு முதலில் வருவோர்க்கு முன்னுரிமை, வருவாயில் பங்கு போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன. இதனடிப்படையில் ஏலமின்றி 2001 இல் நிர்ணயிக்கப்பட்ட கட்டண அடிப்படையில், 51 நிறுவனங்களுக்கு இராசா பதவி ஏற்கும் வரை உரிமங்கள் வழங்கப்பட்டன. ஏலமுறையை ரத்து செய்தது பி.ஜே.பி. அரசே தவிர இராசா அவர்கள் அல்ல. இந்த செயல்களை மறைத்து விட்டு, மறந்துவிட்டு பி.ஜே.பி. உள்ளிட்ட எதிர்கட்சிகள் தற்போது இராசா மீது பழிபோட முயற்சிக்கிறார்கள்.
தலைமைக் கணக்கு அதிகாரியின் வரம்பு
அரசின் கொள்கை முடிவுகளில் CAG/CVC தலையிட உரிமை இல்லை என்று 10-க்கும் மேற்பட்ட உச்சநீதி மன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, மத்திய சட்ட அமைச்சகம் 13.8.2010 அன்று தொலைத் தொடர்புத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் உச்சநீதி மன்றம் இப்பிரச்சினையில் இத்தீர்ப்புகளை வசதியாக கண்டு கொள்ளாதது வியப்பாக உள்ளது.
என்னதான் சொல்கிறது CAG?
இல்லாத ஏலமுறையை 2ஜி உரிமம் வழங்குவதில் கடைப்பிடிக்காததாலும், ஒருங்கிணைந்த உரிமம், புதிய நிறுவனங்களுக்கு வழங்குவதில் ஏலமுறை பின் பற்றப்படாததாலும், மற்றும் அனுமதிக்கப்பட்ட அலைக் கற்றைக்கு உபரியாக பயன்படுத்தும் அப்போதைய நிறுவனங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படாத தாலும் இராசா காலத்தில் ரூ.1,76,645 கோடி வருவாய் இழப்பு என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்தக் கூற்று சரி தானா?
முதலாவதாக, 2001-க்குப் பின்பு ராசா பதவி ஏற்கும் மே 2007 வரை, ஏலமுறை எந்த அமைச்சராலும் பின் பற்றப் படவில்லை. முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உரிமைக் கட்டணமாக ரூ.1658 கோடி என்ற நடைமுறைதான் பின்பற்றப்பட்டு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. 28.8.2007இல் கூட டிராயின் வழிகாட்டுதலிலும் 2ஜி-க்கு ஏலமுறை தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (In the 2G bands (800 MHz, 900MHz, 1800MHz, allocation through auction may not be possible.)
இந்த அடிப்படையில்தான் 2008-லும் 122 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இது பற்றிய சர்ச்சை மற்றும் விவாதங்கள் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பிறகும் இந்தக் கொள்கைகளில் வழிக்காட்டக் கூடிய TRAI அமைப்பும் 11.5.2010இல் 2ஜி அலைக்கற்றைக்கு ஏலமுறைதேவை யில்லை என்று குறிப்பிட்டுள்ளது. (Spectrum in 800, 900 and 1800 MHz bands should not subject to Auction).
தவிரவும், 3ழு சேவைக்கான 800, 900, 1800 MHz. MHz ஏலக்கற்றைகளுக்கு, ஏல முறையை பரிந்துரைத்து உள்ளது. இப்போதைய அமைச்சர் கபில்சிபல் அவர்களும் ஏலமுறை சிறந்த வழியல்ல (Auctions may not be the best way to award spoectrum) என்றும்,இது கட்டண உயர்விற்கே வழி வகுக்கும் என்றும், மீண்டும் 1995 ஆம் ஆண்டு தோல்வி அடைந்த ஏலமுறையை சுட்டிக் காட்டிக் கருத்துக் கூறியிருப்பதும் குறிப்பிடத் தக்கது.
எனவே முந்தைய அமைச்சர்கள் கடைப்பிடித்த வழிமுறைகளைப் பின்பற்றித்தான் இராசா அவர்களும் உரிமங்கள் வழங்கியுள்ளார். எந்த புதிய நடை முறையையும் அவர் கையாளவில்லை. எனவே வருவாய் இழப்பிற்கு இராசா அவர்கள்தான் காரணம் என்பது நியாயமற்றது.
தவறான தகவல் அடிப்படையில் சில நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ளதாக CAG -யால் தற்போது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அந்த நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த நிறுவனங்கள் தங்களின் தகுதியை நிரூபிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கூட உரிமம் பெறும் நிறுவனங்களில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாமே தவிர, அரசிற்கு கூடுதல் வருவாய் கிடைப்பதற்கு இடமில்லை. ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட ரூ.1658/- கோடியில் மாற்றம், ஏதுமில்லாதபோது வருவாய் இழப்பு என்ற பேச்சிற்கே இடமில்லை. எனவே, ஏலமின்றி 2ஜி உரிமங்கள் கொடுக்கப்பட்டதால் ரூ.1,02498/- கோடி வருவாய் இழப்பு என்பது ஒரு மாயத் தோற்றமே!
2003-இல் அமைச்சரவை முடிவின்படி, (Uniful Access Service) ஒருங்கிணைந்த சேவைக்கான உரிமங்கள், புதிய நிறுவனங்களுக்கு வழங்குவதில் ஏலமுறை பின்பற்றப்படவில்லை என்று கூறுகிறதுCAG.
TRAI--ன் வழிகாட்டுதலின் படி முந்தைய அமைச் சர்களால் 51 புதிய நிறுவனங்களுக்கு ஏலமின்றி உரி மங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதே நடை முறையையே இராசா அவர்களும் பின்பற்றியுள்ளார். இதில் நடை முறை மீறல் எதுவுமில்லை. எனவே இதனடிப் படையில் ரூ.37,154/- கோடி வருவாய் இழப்பு என்பதும் அர்த்தமற்ற கூற்றாகும்.
மேலும் அனுமதிக்கப்பட்ட (4.4MHz) அலைக்கற் றையை விட கூடுதலாகப் பயன்படுத்தும் நிறுவனங் களிடமிருந்து கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை என்பது CAG- ன் கண்டுபிடிப்பு. உரிமக்கட்டணத்துடன் GSM உரிமம் பெற்றவர்களுக்கு 4.4 4.4 MHz--ம், CMDA உரிமம் பெற்றவர்களுக்கு 2.5 MHz- ம், கட்டணமின்றி வழங்கப்பட வேண்டும். ஆனால், 1996 - 2001, மற்றும் 2002-லும் எந்தவிதமான ஏலமோ, நிர்ணயிக்கப்பட்ட கட்டணமோ இன்றி, இலவசமாக 1.8 MHz அலைக் கற்றை, ஏர்டெல், வோடபோன், அய்டியா, ஏர்செல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. 2002-இல் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் மறைந்த மகாஜன் இதே நடைமுறையை பின்பற்றி எந்தவிதமான முன் கட்டணமுமின்றி (Upfront Charges) ஒலிக்கற்றை வழங்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் இராசா அவர்கள் பொறுப்பிற்கு வரும்வரை 150 MHz அலைக்கற்றை மிகத் தாராளமாக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முடிவுகட்ட உத்தேசித்த இராசா TRAI- இன் கருத்தினைக் கேட்டிருந்தார். அந்த அமைப்பு 2010- மே மாதத்தில்தான் 6.2 MHz -க்கு மேல் 2ஜி அலைக்கற்றையைப் பயன்படுத்தும் நிறுவனங் களிடமிருந்து 3ஜி ஏலத்தொகைக்கு இணையான தொகையை வசூலிக்கப் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பிரச்சினை கூடுதலாக அலைக்கற்றையை அனுபவித்த நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் எதிர்ப்புகளை ஒட்டி மீண்டும் TRAI -ன் பரிசீலனையில் உள்ளது. எனவே இந்தப் பிரச்சினையில் தீவிரம் காட்டி கூர்மைப் படுத்திய ஒரே அமைச்சர் இராசாவால் ரூ.36,645/- கோடி அரசிற்கு வருவாய் இழப்பு என்பது விந்தை யானது.
எனவே, 2003-ல் பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில் கைவிடப்பட்ட ஏலமுறையை இராசா பின்பற்றவில்லை எனக் கூறுவதும், அதனால் வருவாய் இழப்பு என்றும் கூறுவதும் உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது.
விண்ணப்பம் பெறும் தேதி மாற்றம்(Cut off - Date)
விண்ணப்பங்கள் பெறுவதற்கு 1.10.2007 என்று தேதி நிர்ணயிக்கப்பட்ட போதும் 25.9.2007 கடைசிதேதி என்று நிர்ணயித்தது ஏன்? என்ற சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே உரிமம் கோரி காத்திருந் தோர் மற்றும் ஓரிரு தினங்களில் விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 232-ஐ தாண்டிய நிலையில் 1.10.2007 வரை 575 விண்ணப்பங்கள் வந்தன. இவற்றுள் 25.9.2007 வரை பெறப்பட்ட 232 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 122 நோக்கம் தெரிவிக்கும் கடிதம் (Letter of Indent) கொடுக்கப்பட்டுள்ளது. மீதமிருப் போருக்கும் அலைக்கற்றை இருப்பை கணக்கில் கொண்டு பரிசீலிக்கலாம் என்று அமைச்சர் பதவியில் இருந்த வரை இராசா அவர்கள் கூறியுள்ளார். எனவே, முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற கொள்கை யின் அடிப்படையில் இந்தத் தேதி மாற்றத்தால் பயன்பெறப் போகும் நிறுவனங்களின் வரிசை மாறப் போவதில்லை. கையிருப்பில் உள்ள அலைக்கற்றை அளவைக் கணக்கிட்டு 122 பேருக்கு மட்டுமே வழங்க முடியும் என்கின்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப் பட்டது. இதில் எவ்விதத் தவறும் நிகழவில்லை. நோக்கம் தெரிவிக்கும் கடிதம் கொடுக்கப்பட்ட உடனேயே 122 நிறுவனங்களில் 78 பேர் உடனே கேட்புக் காசோலை (Demand Draft) களைக் கொடுத்தது எப்படி? என்று கேட்கப்படுகிறது. தகுதியிருப்பின் தாங்கள் செலுத்த வேண்டிய உரிமக் கட்டணம் (ரூபாய் 1,658/- கோடி) என்பது எல்லோருக்கும் முன்பே தெரிந்த நிலையில் அதற்குரிய முன்னேற்பாடுகளுடன் வருவதில் வியப்பென்ன?
2001 ஜனவரியில் அடிப்படைச் சேவைக்கு முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற விதிகளின்படி விண்ணப்பங்கள் பெற காலை 4மணி முதலே கையில் கேட்புக் காசோலைகளுடன் காத்திருந்த முன்னு தாரணங்கள் ஏராளம்.
முதலில் வருவோர்க்கு முன்னுரிமை விதி மீறப்பட்டுள்ளதா?
நோக்கம் தெரிவிக்கும் கடித (LOI) த்தின்படி தகுதிகள் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதலில் உரிமம் தரப்படும். இந்தச் சூழ்நிலையில் தங்களது தகுதியை (கட்டணம் செலுத்துதல், வங்கி உத்திரவாதம் போன்ற) முதலில் நிரூபிக்கும் நிறுவனங்களுக்கு அந்த அடிப்படையில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடை முறை இந்திய சொலிசிட்டர் ஜெனரலிடமும் ஆலோசிக் கப்பட்டு கருத்து பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. ஆகவே, முதலில் வருவோர்க்கு முன் னுரிமை என்ற விதி மீறல் இல்லை.
ஏலமுறை இல்லாததால் வருவாய் இழப்பா?
ஏலமின்றி முதலில் வருவோர்க்கு முன்னுரிமை, வருவாயில் பங்கு (Revenue Sharing) வழங்கப்பட்டு உள்ளதால் இதுவரை ரூ.90,000/- கோடிகள் அரசிற்கு வருவாய் வந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் ரூ.13,588/- கோடியாகும். 3ஜி ஏலத்தில் பெற்ற தொகை ரூ.67,718 கோடிதான் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். உயர் தொழில்நுட்பமான 3ஜி-க்கே ரூ.67,718/- கோடி என்றால், 2ஜி-தொழில்நுட்பத்திற்கு எவ்வளவு கிடைத்திருக்கும் என்று சிந்திக்கவேண்டும்.
மேலும் இந்த வருவாயில் பங்கு என்ற நடைமுறை ஒரு பொன் முட்டையிடும் வாத்து. மேலும் இன்னும் 10 ஆண்டுகளில் இந்த வருவாய் பல மடங்காக உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது. நாளும் பெருகி வரும் தொலைபேசி அடர்த்தி (Tele density) இதற்கு வழி வகுக்கும். அது மட்டுமல்ல, 3ஜி-க்கு மக்களிடம் உள்ள வரவேற்பும், சந்தையும் உற்சாகம் அளிப்பதாக இல்லை. சமீபத்தில் நீல் சன் ஆய்வு நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி, நகர்ப்புற வாடிக்கையாளரிடம்கூட 5 இல் ஒருவர் மட்டுமே 3ஜி-க்கு மாறத் தயாராக உள்ளனர். இந்த நிலையில் 2ஜி-சேவை மூலம் தற்போதைய நிலையில் நிரந்தர வருவாய் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என்பதுதான் உண்மை. மிகப்பெரிய அளவில் வருவாயை ஈட்டிக் கொடுக்கக்கூடிய இந்த வருவாயில் பங்கு என்ற இந்த சிறப்பான திட்டத்தை CAG தன்னுடைய கவனத்தில் கொள்ளாதது மிகுந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
இராசா அவர்களின் காலத்தில்...
இராசா அவர்கள் பொறுப்பேற்றபொழுது தொலைப்பேசி இணைப்புகளின் எண்ணிக்கை சுமார் 29 கோடி; ஆனால் இன்று 73 கோடி தொலைத் தொடர்பு அடர்த்தி - 100 பேருக்கு 75 பேர்கள் என்ற அளவில் உள்ளது. 2007 இல் ஒரு நிமிடத்திற்கு ரூ.1/- என்றிருந்த கட்டணம் இன்று 0.30 பைசாவாகக் குறைந்துள்ளது. மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளது. உலகில், இந்தியா மொத்தத் தொலைத் தொடர்பு எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் கட்டண அடிப்படையில், உலகிலேயே மிகக் குறைந்த கட்டணம் இந்தியாவில்தான் உள்ளது. இந்திய அரசின் மொத்த வருவாயில் 25 சதவிகிதம் தொலைத் தொடர்பு துறை மூலம் கிடைக்கிறது. 2007 இல் மாதம் ஒன்றுக்கு 7.5 லட்சம் புதிய இணைப்புகள் என்ற நிலை மாறி இன்று மாதம் ஒன்றுக்கு 1.75 கோடி இணைப்புகள் கொடுக்கப் படுகிறது. மூடி மறைக்கப்பட்டு, போட்டியை உருவாக் காமல் ரகசிய பரிவர்த்தனையாக இருந்த அலைக் கற்றையை கவனத்திற்குக் கொண்டு வந்தவர் இராசா அவர்கள்தான்.
எதிர்ப்புகளுக்கு இடையில், இரண்டு ஆண்டு களுக்கு முன்பே 3ஜி ஒலிக்கற்றை சேவையை தனியார் போட்டிகள் நிறைந்த சூழலில் பொதுத் துறை நிறுவனங்களான BSNL/MTNL நிறுவனங்களுக்கு வழங்கி, குறைந்த கட்டணம் நிர்ணயிக்கச் செய்து, மக்களுக்கு வழங்கினார். இதனால் 3ஜி சேவையில் நுழைய உள்ள தனியார் நிறுவனங்களின் உயர் கட்டண வசூல் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இது அமைச்சர் இராசாவின் பொதுத் துறைக்கு ஆதரவான நிலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
BSNL பங்கு விற்பனையை தடுத்து நிறுத்தியதின் மூலம் தனியார் ஆதிக்கத்தை தனியார் நுழைவை தடுத்து BSNL - அய்ப் பாதுகாத்தார்.
தொலைத் தொடர்பு ஊழியர்களைப் பொறுத்தவரை பொறுப்பேற்ற காலம் முதல் ஊழியர்களின் 50 சதவிகித அகவிலைப்படி இணைப்பு, புதிய ஊதிய உயர்வு, புதிய பதவி உயர்வு, பென்சன் பிரச்சினைகள்,ITS அதிகாரி களை நிறுவனத்திற்குள் கொண்டு வருதல், ஊழியர் களின் சங்க சந்தாவை சம்பளத்தில் பிடித்தம் செய்தல் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் நலத் திட்டங் களுக்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் செயல்பட்டு தான் தலைவர் கலைஞர் அவர்களின் உண்மைத் தம்பி என்பதை நிரூபித்து ஊழியர்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
யாருக்கு இழப்பு?
பல்லாண்டுகளாக தொலைபேசி உயர் கட்டணம் மூலமாக இந்திய மக்களைக் கொள்ளையடித்து வந்த ஏகபோக நிறுவனங்களின் ஆதிக்கத்தை, புதிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதன் மூலம் தகர்த்தெரிந்து கட்டணக் குறைப்பிற்கு வழி வகுத்த காரணத்தால் கொள்ளை லாபம் அடித்த அந்த கும்பலுக்குத்தான் வருவாய் இழப்பு. இந்தியாவிலுள்ள 110 கோடி மக்களில் 70 கோடி மக்கள் இன்றைக்கு தொலைபேசி வசதியை, உலகிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தி வரும் ஒரு மாபெரும் புரட்சியை இராசா நிகழ்த்திக் காட்டியுள்ளார். ஆனால், தங்கள் ஆதிக்கத்தை இழந்த தனியார் நிறுவனங் களுக்கும், இதை பூதாகாரப்படுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சில அரசியல் கட்சிகளுக்கும், உண்மைக்குப் புறம்பான செய்திகளை வணிக நோக் கோடு பரபரப்போடு வெளியிட்டு அற்ப சந்தோசப்படும் ஊடகங்களுக்கும் வேண்டுமானால் இராசாவின் செயல்பாடுகள் இழப்பாகத் தோன்றலாம். ஆனால் அரசுக்கோ, இந்திய மக்களுக்கோ அல்ல.

வே. சுப்புராமன்
செயலாளர், தொ.மு.ச. பேரவை
அகில இந்தியப் பொதுச்செயலாளர்,
தொலைத்தொடர்பு தொ.மு.ச.
http://www.viduthalai.periyar.org.in/20101223/news29.html
Subscribe to:
Posts (Atom)